Published:Updated:

`54 அடி உயர சிலை!' - `எடிட்டர் மோகனின் `அனுமன் ஜங்ஷன்' பட வெற்றியால் உருவான கோயில்

அனுமன் கோயில்
அனுமன் கோயில்

பிரார்த்தனையை நிறைவேற்றி அதற்கு நன்றி செலுத்தும் விதமாக 54 அடி உயரத்தில் அனுமன் சிலையை அமைத்திருக்கிறார்.

ஜெயம் ரவியின் முதல் படம் எதுவென்று கேட்டால், இது என்ன கேள்வி `ஜெயம்' படம் என்று எளிதாகச் சொல்லி விடுவார்கள். ஆனால், அவரின் அண்ணன் ராஜாவின் முதல் படம் எதுவென்று கேட்டால், நம்மில் பலருக்குத் தெரியாது.

Hanuman Temple
Hanuman Temple

ஜெயம் ராஜா இயக்கிய முதல் படம் `ஹனுமன் ஜங்ஷன்' என்ற தெலுங்கு படம்தான். எடிட்டர் மோகனின் மகன்கள் ஜெயம் ராஜாவும் ஜெயம் ரவியும் தமிழ் சினிமாவில் கோலோச்சி வருகிறார்கள்.

எடிட்டர் மோகன் பல படங்களைத் தொடக்கத்தில் விநியோகம் செய்தவர். பின் தயாரிப்பாளராகி பத்து படங்களைத் தயாரித்துவிட்டார். இவரின் முதல் தயாரிப்பான `ஹனுமன் ஜங்ஷன்' படத்தை வாங்கி விநியோகித்தவர் ஜிஜேந்திரா ரெட்டி. படத்தில் அதிரடியான லாபம் கிடைத்திருக்கிருக்கிறது.

படம் வெற்றி அடைந்தால், 54 அடியில் அனுமன் சிலை வைப்பதாக அப்போது வேண்டிக்கொண்டார் ஜிஜேந்திரா ரெட்டி. அவர் நினைத்தது போலவே இந்தப் படம் தெலுங்கில் வெற்றி பெற்றது. பிரார்த்தனையை நிறைவேற்றி அதற்கு நன்றி செலுத்தும் விதமாக 54 அடி உயரத்தில் அனுமன் சிலையை அமைத்திருக்கிறார்.

`ஹனுமன் ஜங்ஷன்' படம் பற்றி நம்மிடம் பேசிய எடிட்டர் மோகன், ``நான் எந்தப் படம் வெளியானாலும் அதன் வசூல் ரிப்போர்ட்டை பார்ப்பதற்காக எல்லா ஊர்களுக்கும் பயணிப்பது வழக்கம். அப்படிச் செல்லும்போது விஜயவாடாவுக்கு அருகில் `ஹனுமன் ஜங்ஷன்' என்ற ஊரின் பெயர் என் கண்ணில் பட்டது.

Hanuman Temple
Hanuman Temple

`அனுமன்' மிகவும் பலசாலி அதைப்போல `ஜங்ஷன்' என்கிற வார்த்தையும் பிரபலமான ஒன்று. மக்கள் பெரிய அளவில் கூடும் இடம் என்பதால் அந்தப் பெயர் எனக்கு மிகவும் பிடித்துப் போனது. அதையே படத்தின் தலைப்பாக வைத்தேன். படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இதை வாங்கிய விநியோகஸ்தர் ஜிஜேந்திராதான் இப்போது அனுமனுக்குக் கோயில் கட்டியுள்ளார். அவர் 93-ம் ஆண்டிலிருந்து என்னுடைய படங்களை வாங்கி வெளியிடுவார். அவருக்கு நான் கொடுத்த 9 படங்கள் லாபகரமாக இருந்தது.

Editor Mohan
Editor Mohan

இந்தப் பத்தாவது படம் `ஹனுமன் ஜங்ஷன்' பெரிய அளவில் ஹிட். அதற்கு நன்றிக் கடனாக அனுமனுக்குக் கோயில் கட்டியிருக்கிறார். நாளை 13-ம் தேதி இந்த அனுமன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. எனக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்'' என்று கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு