Published:Updated:

பெண்களும் குல தெய்வமும் - சில விளக்கங்கள்! - அதிகாலை சுபவேளை

பெண்களும் குல தெய்வமும் - சில விளக்கங்கள்! - அதிகாலை சுபவேளை

இன்றைய பஞ்சாங்கம்

4.6.21 வைகாசி 21 வெள்ளிக்கிழமை

திதி: நவமி காலை 6.52 வரை பிறகு தசமி

நட்சத்திரம்: உத்திரட்டாதி

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: காலை 10.30 முதல் 12 வரை

எமகண்டம்: பகல் 3 முதல் 4.30 வரை

நல்லநேரம்: காலை 12.30 முதல் 1.30 வரை / பகல் 4.30 முதல் 5.30 வரை

காளிகாம்பாள் கோயில் உற்சவம்
காளிகாம்பாள் கோயில் உற்சவம்

சந்திராஷ்டமம்: மகம்

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

வழிபடவேண்டிய தெய்வம்: காளிகாம்பாள்

பெண்களும் குல தெய்வமும் - சில விளக்கங்கள்!

குல தெய்வம் என்பது நம் கூடவே இருந்து காக்கும் தெய்வம். தலைமுறை தலைமுறையாக நம் தந்தை வழியாய் தொடரும் தெய்வம். குலதெய்வத்தை ஒரு தலைமுறை முறையாக வழிபட்டால் அடுத்த 13 தலைமுறை மக்களை அந்த தெய்வம் கூட இருந்து காக்கும் என்பது நம்பிக்கை. அப்படிப்பட்ட குலதெய்வம் குடும்பத்தின் ஆண்களுக்கு மாறவே மாறாது. ஆனால் பெண்களுக்கோ திருமணம் ஆனதும் மாறிவிடும். பொதுவாக மணமானதும் பெண்கள் கணவன் வீட்டுக் குலதெய்வத்தை வழிபட ஆரம்பித்துவிடுவார்கள். சில நேரங்களில் துரதிர்ஷ்ட வசமாக திருமண பந்தத்தில் பிரச்னை ஏற்பட்டு விவாகரத்துவரை சென்று மணமுறிவு ஏற்பட்டுவிட்டது என்றால் அந்தப் பெண்ணின் குலதெய்வம் எது என்னும் கேள்வி சிலரிடம் உள்ளது. அப்படி ஒரு கேள்வியை வாசகி ஒருவர் அனுப்பியிருந்தார். அவரின் கேள்விக்கு விடையினை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

இன்றைய ராசிபலன்

விரிவான இன்றைய பலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மேஷம்

துணிவு : மனதில் உற்சாகம் அதிகரிக்கும். துணிச்சலாக முடிவெடுப்பீர்கள். ஏற்கெனவே இருந்துவந்த விமர்சனங்கள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சிறு கவனம் தேவை. - துணிவே துணை!

ரிஷபம்

அனுகூலம் : செயல்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். சகோதர உறவுகள் உதவிகரமாக இருப்பார்கள். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். - ஆல் தி பெஸ்ட்!

மிதுனம்

உற்சாகம் : இன்று எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். உறவினர்கள் மூலம் ஆதாயமும் கிடைக்கும். வீட்டில் மூத்த உறுப்பினர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். - ஆல் இஸ் வெல்!

கடகம்

தெளிவு : நேற்றுவரையிருந்த குழப்பங்கள் மறையும். என்றாலும் செயல்களில் பொறுமை அவசியம். எதிர்பார்த்த பணவரவு தாமதமாகும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. - ரிலாக்ஸ் ப்ளீஸ்!

சிம்மம்

கவனம் : வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தில் சின்னச் சின்னக் குழப்பங்கள் ஏற்படும். பணிச்சுமை காரணமாக உடல் அசதியும் சோர்வும் அதிகரிக்கும். - டேக் கேர் ப்ளீஸ்!

கன்னி

நன்மை : எதிர்பார்த்த காரியம் வெற்றியாவதால் மகிழ்ச்சியோடு காணப்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். சகோதர வகையில் ஏற்படும் ரச்னைகளைப் பெரிதுபடுத்த வேண்டாம். - நாள் நல்ல நாள்!

துலாம்

மரியாதை : எதிர்பார்த்த பண உதவி இன்று கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்கள் பேச்சு மரியாதை அதிகரிக்கும். - திறமைக்கு மரியாதை!

விருச்சிகம்

மகிழ்ச்சி : குழப்பங்கள் மறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்புண்டு. மன உறுதி அதிகரிக்கும். - என்ஜாய் தி டே!

தனுசு:

பொறுமை : சொல்லிலும் செயலிலும் பொறுமை தேவைப்படும். அக்கம்பக்கம் இருப்பவர்களோடு மன வருத்தம் ஏற்படும் என்பதால் விட்டுக்கொடுத்துப் போகவும். - எல்லாம் நன்மைக்கே!

மகரம்

சாதகம் : அனைத்துவிதத்திலும் சாதகமான நாள். குடும்பப்பொறுப்புகள் அதிகரித்தாலும் உற்சாகம் குறைவின்றி உழைப்பீர்கள். குடும்பத்தினர் ஒத்தாசையாக இருப்பார்கள். - சாதகமான ஜாதகம் இன்று!

கும்பம்

செலவு : முற்பகலில் பணவரவும் பிற்பகலில் திடீர் செலவும் ஏற்படும் நாள். முக்கிய முடிவுகளை நன்கு ஆலோசித்து எடுக்கவும். உணவு விஷயங்களில் கவனம் தேவை. - செலவே சமாளி!

மீனம்

ஆதாயம் : உறவினர்களால் ஆதாயம் ஏற்படும் நாள். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சியைத் தொடங்குவது நல்லது. சகோதர உறவுகள் பணம் கேட்டுத் தொந்தரவு செய்வார்கள். - நாளை உங்க நாள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு