Published:Updated:

விவாகத்தடை நீக்கும் விரதங்கள்

விவாகத்தடை நீக்கும் விரதங்கள்
பிரீமியம் ஸ்டோரி
விவாகத்தடை நீக்கும் விரதங்கள்

ஆண், பெண் இருபாலரும் இருக்க வேண்டிய விரதங்கள்

விவாகத்தடை நீக்கும் விரதங்கள்

ஆண், பெண் இருபாலரும் இருக்க வேண்டிய விரதங்கள்

Published:Updated:
விவாகத்தடை நீக்கும் விரதங்கள்
பிரீமியம் ஸ்டோரி
விவாகத்தடை நீக்கும் விரதங்கள்

‘திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன’ என்று சொல்லுவார்கள். இல்வாழ்க்கையில் வெற்றி நடைபோடும் தம்பதி சொர்க்க வாழ்க்கையைப் பூமியிலேயே அனுபவித்துவிடுவார்கள். ஆனால், அந்தத் திருமணம் எல்லோருக்கும் உரிய காலத்தில் நடந்தேறுகிறதா என்றால் நடப்பதில்லை. திருமணத்தடைக்கு குடும்பச் சூழ்நிலை, கல்வித் தகுதி, பொருளாதார அந்தஸ்து, வயது, அழகு எனப் பல காரணங்கள் இருக்கலாம். இந்தத் தடைகள் நீங்கி திருமணம் கைகூட என்ன வகையான விரதங்கள் இருக்கின்றன, அவற்றை எப்படி அனுசரிக்க வேண்டும் எனத் திருவண்ணாமலை ஜோதிட நிபுணர் ஆனந்தாழ்வானிடம் கேட்டோம். அவர் பெண்களிருக்க வேண்டிய விரதங்கள், ஆண்களிருக்க வேண்டிய விரதங்கள், இருபாலரும் இருக்க வேண்டிய விரதங்கள் என தனித்தனியாக கூறியுள்ளார். அந்த விவரங்கள் இதோ உங்களுக்காக...

மனித வாழ்வில் ஆண் பெண் யாராக இருந்தாலும், அவர்களின் வாழ்வு நிறைவடைவது அவர்களின் திருமணத்தில்தான். 21 வயதுக்கு மேல் 27 வயதுக்குள் அந்தத் திருமணம் நடைபெற வேண்டும். அதற்குப் பிறகு அதாவது 28 வயதுக்கு மேல் நடைபெற்றால் அது தாமதிக்கப்பட்ட திருமணமாகத்தான் பார்க்கப்படுகிறது.

விவாகத்தடை நீக்கும் விரதங்கள்

22 வயதாகியும் திருமணமாகாமல் தடைகளும் தடங்கல்களும் ஏற்பட்டால், அதற்கு என்ன காரணம் என ஜோதிட ரீதியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பொதுவாக, பெண்களுக்குத் திருமணத் தடை ஏற்படுவதற்குரிய காரணம், காலசர்ப்பதோஷம், நாகதோஷம், களத்திரதோஷம், செவ்வாய்தோஷம், ஜாதகத்தில் குரு மறைவு பெறுதல், குரு பார்வையின்மை, பிதுர் தோஷம் எனப் பல காரணங்களிருக்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
விவாகத்தடை நீக்கும் விரதங்கள்

பெண்கள் இருக்கவேண்டிய விரதங்கள்:

திருவோண விரதம்:

திருப்பதி ஏழுமலையானுக்குரியது. பெருமாளின் நட்சத்திரமான திருவோண நாளில் விரதமிருக்க வேண்டும். அப்படி விரதமிருக்கும் நாளில் பெருமாளுக்கு மிகவும் பிடித்த விஷயங்களான தயிர்சாதம், பொங்கல், புளியோதரை, மனோகரம் ஆகியவற்றைச் செய்து படையலிட்டு, பின்னர் விரதம் முடிக்க வேண்டும். இதுபோல் திருவோண நட்சத்திர நாளில் 21 முறை விரதம் மேற்கொள்ள வேண்டும். இந்த விரதம் இருக்கத் தொடங்கிய ஆறு அல்லது ஏழாவது விரதத்தின்போதே நிச்சயதார்த்தம் நிகழ்ந்துவிடும். பதினாறு, பதினேழாவது விரதத்தின்போதே திருமணம் முடிந்துவிடும். திருமணம் முடிந்ததும், வரும் திருவோண நட்சத்திர நாளில் நம் வீட்டிலேயே மேலே சொன்ன நைவேத்தியங்களை அதிகளவில் செய்து அன்னதானமாக வழங்க வேண்டும். பின்னர், திருமலைக்குச் சென்று திருப்பதி வேங்கடேசப் பெருமாளை வணங்கினால் வாழ்வு சிறக்க வழிவகுக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அஷ்டமி விரதம்:

இந்த அஷ்டமி விரதத்தின் மகிமை பலருக்கும் தெரியாது. அஷ்டமி என்றாலே எதுவும் செய்யக் கூடாது என ஒதுங்கிவிடுகிறார்கள். புராண காலத்தில் ஒருமுறை எல்லா திதிகளும் அம்பாளிடம் சென்று தங்களுக்கான பெருமைகளைப் பெற்று வந்துவிட்டன. அஷ்டமி திதி, ‘எனக்கு எந்தப் பெருமையும் இல்லையே’ என வருந்திட, அம்பாள் அருளியதுதான் அஷ்டமி சப்பரம். மதுரையில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சார்பாக உலகில் உள்ள அனைத்து ஜீவராசிக்கும் இறைவன் படி அளக்கும் விதத்தைக் குறிக்கும் நிகழ்ச்சியாக ‘அஷ்டமி சப்பரம்’ என்னும் விழா நடக்கிறது. முக்கிய விழாக்களில் ஒன்றான இந்த ‘அஷ்டமி சப்பரம்’ என்னும் தேர் திருவிழா மார்கழி மாதத் தேய்பிறை அஷ்டமி நாளில் நடக்கிறது. சுவாமியும் அம்மனும் மதுரை நகர் வீதிகளின் வழியாக அனைத்து உயிர்களுக்கும் படி அளக்கும் உலா வருவது வழக்கம். அஷ்டம் என்றால் எட்டு. ஜாதகத்தில் கடுமையான செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த விரதத்தை எட்டு வாரங்கள் கடைப்பிடித்தால், அவர்களின் எண்ணம் ஈடேறும் வகையில் சிறந்த வாழ்க்கைத்துணை அமையும்.

ஆயில்ய விரதம்:

காலசர்ப்பதோஷத்தால் பல பெண்களுக்குத் திருமணம் தள்ளிப் போவதைப் பார்க்கிறோம். காலசர்ப்ப தோஷம் போலவே காலசர்ப்ப யோகம் என்றும் ஒன்று உள்ளது. இந்த காலசர்ப்ப யோகத்தைப் பெற மாதந்தோறும் ஆயில்ய நட்சத்திரம் வரும் நாளில் நாகராஜாவை மனத்தில் எண்ணி விரதம் அனுசரிக்க வேண்டும். தேதி நாட்காட்டியில் ஆயில்ய நட்சத்திரம் தொடங்கி, மறுநாள் அந்த நட்சத்திரம் முடியும் நேரம் வரை விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இதைப்போல் 16 அல்லது 21 விரதங்கள் இருந்தால், நாகாராஜா மனம் குளிர்ந்து உங்களுக்கு வரம் அருள்வார். விரதம் நிறைவேறியதும் பிள்ளையாருடன் இருக்கும் நாகராஜாவுக்கும் தனியாக இருக்கும் நாகராஜாவுக்கும் பூஜைகள் செய்து வழிபாடு செய்தால் சிறப்பான பலன்கள் வேண்டும். இந்த நாளில் வெளியிடங்களில், சாப்பிடாமல் வீட்டில் தயாரித்த உணவுகளை மட்டுமே சாப்பிடுங்கள்.

சூரிய விரதம்:

சூரிய பகவானை மனத்தில் நினைத்து இருக்க வேண்டிய விரதமாகும். விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் இந்த விரதத்தை இருக்க வேண்டியிருப்பதால், சற்று சிரமமாகத்தானி ருக்கும். ஆறு ஞாயிற்றுக்கிழமைகள் விரதமிருந்தால் கைமேல் பலன் கிடைக்கும். அன்றைய நாளில் சர்க்கரைப் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்குப் படையலிட்டு வணங்க வேண்டும். சர்க்கரைப் பொங்கலைக் குழந்தைகளுக்கும் கன்னிப் பெண்களுக்கும் வழங்கினால் விரைவில் திருமணமாகும்.

“ஆறு அல்லது ஏழாவது விரதத்தின் போதே நிச்சயதார்த்தம் நிகழ்ந்துவிடும். பதினாறு, பதினேழாவது விரதத்தின் போதே திருமணமும் முடிந்துவிடும்”

ஆண்கள் இருக்கவேண்டிய விரதங்கள்:

திரதோயதசி விரதம்:

திரதோயதசி விரதத்தைச் சூரியனுக்குரிய விரதம் என்று சொல்லுவார்கள். ஆனாலும், நம் முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய திதிகளை முறையாகச் செய்யமுடியாமல் போனால், பிதுர்தோஷமாக மாறி திருமணத் தடைகளை ஏற்படுத்தும். விரத நாளில் சூரிய பகவானை எண்ணி ஏதேனும் ஒரு பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி வாங்கிக் கொடுத்து வணங்கி வர வேண்டும். இவ்வாறு ஏழு திரயோதசி நாள்களில் விரதங்கள் அதாவது கிட்டத்தட்ட மூன்றரை மாதங்கள் இருக்க வேண்டும். விரத நாளில் தயிர்சாதத்தை ஏழு பேருக்கு வழங்க வேண்டும். அப்படிச் செய்தால், முப்பத்தாறு, முப்பத்தெட்டு வயதாகியும் திருமணமாகாதவர்களுக்குத் திருமணமாகும்.

செவ்வாய்க்கிழமை விரதம்:

செவ்வாய்தோஷம் பெண்களைவிட ஆண்களுக்கு அதிகமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக 1981-ம் ஆண்டுக்குப் பிறகு செவ்வாய் தோஷம் உள்ள ஆண்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இதை அனுதினமும் ஜாதகம் பார்க்க வரும் ஜாதகங்களை வைத்தே சொல்லிவிடலாம். செவ்வாய் முருகனுக்குரிய கிரகம். வைத்தீஸ்வரன் கோயிலில் இருக்கும் முத்துக்குமாரசுவாமியை மனத்திலிருத்தி ஒன்பது வாரங்கள் விரதமிருந்தால், நல்ல பலன் கிடைக்கும். பொதுவாகவே அந்தந்த கிரகங்களுக்கு உரிய நிறத்திலான பேனா, கைக்குட்டை போன்றவற்றை இலவசமாக மற்றவர்களுக்கு வழங்கினால் நல்லது. குறிப்பாகச் செவ்வாய்க்கிழமைகளில் சிவப்பு நிறத்திலான பரிசுப் பொருள்களை மற்றவர்களுக்கு வழங்கலாம்.

சனிக்கிழமை விரதம்:

சனி பகவான் பித்ருகாரகன். அவர்தான் நம் சந்ததி விருத்திக்குக் காரணமானவர். அவர்தான் நம் மூதாதையர்களிடமிருந்து அருளைப் பெற்றுத் தருபவர். அதனால், சனிக்கிழமை விரதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நாளில் நம் மூதாதையரை எண்ணி வழிபட்டு விரதமிருந்தால் அவர்கள் மனம் குளிர்ந்து நமக்குத் தேவையான ஐஸ்வர்யங்களை வழங்கி, நல்ல மனையாளையும் வழங்குவார்கள். நம் தாத்தா, பாட்டி நமக்கு எதிராகச் செயல்படுவார்களா என நினைக்கலாம். ஆனால், அவர்களின் அருளைப் பெற்று நமக்கு வழங்கும் சனிபகவான் கறாரானவர் அல்லவா? அந்தவிதத்தில் இந்த சனிக்கிழமை விரதம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

பிரதமை விரதம்:

பிரதமை நாளுக்கு எந்தப் பெருமை யுமில்லை என்று நாம் நினைக்கிறோம். உண்மையில், இறைவனின் படைப்பில் எல்லா நாளுக்கும் ஒரு மகத்துவம் இருக்கத்தான் செய்கிறது. திருக்கடையூரில் அபிராமி தனது அற்புதத்தை நிகழ்த்தியது பிரதமை நாளில்தான். செய்வினை, ஏவல் கண்திருஷ்டி போன்றவற்றால் திருமணத் தடையேற்பட்டிருப்பவர்கள் இந்த பிரதமை விரதத்தைக் கடைப்பிடித்தால் தடைகள் நீங்கி திருமணம் விரைவில் நடந்தேறும்.

ஆண், பெண் இருபாலரும் இருக்க வேண்டிய விரதங்கள்:

ஏகாதசி விரதம்:

ஏகாதசிவிரதம் எல்லா விரதங்களிலும் தலைசிறந்த விரதமாகும். மாதத்தில் இரண்டு நாள்கள் இந்த விரதத்தை ஒருவர் இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட வயதிற்குமேல் ஆகியும் திருமணமாகாதவர்கள் இந்த ஏகாதசி விரதத்தை ஆறு முறை இருந்தால் திருமணம் கைகூடி வரும். இந்த விரதம் இருக்கும்போதே மறுநாள் துவாதசி விரதமும் இருந்து நெல்லிக்காய் சாதம் அகத்திக்கீரை படையலிட்டு விரதம் முடித்தால் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. கர்ப்பப்பைக் கோளாறுகள் நீங்கி புத்திரபாக்கியம் கிடைக்க வழிவகை செய்யும்.

சஷ்டி விரதம்:

‘சஷ்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்’ என்பது ஜோதிடப் பழமொழி. இதைக் குறிப்பாக குழந்தை பாக்கியத்துக்கே பயன்படுத்துவார்கள். ஆனால், இந்த சஷ்டி விரதத்தை மூன்று வாரங்களிருந்தால் உடன் திருமணமாகும். விரதம் முடிக்கும் நாளில் அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்குச் சென்று தங்களால் இயன்ற அளவு பாலும் பழங்களும் வாங்கித் தருவது நல்லது. அப்படிச்செய்தால் தடைப்பட்டு வந்த திருமணம் நல்லமுறையில் நடந்தேறும்.

அஷ்ட ஐஸ்வர்ய விரதம்:

அரிசியை மஞ்சளில் தோய்த்து திருமணத்தின்போது பயன்படுத்தப்படும் அட்சதையைப்போல் தயாரித்துக் கொள்ள வேண்டும். மகாலட்சுமிக்குக் காணிக்கை முடிந்து வைத்துக்கொள்ள வேண்டும். காலையில் குளித்து முடித்து, விரதமிருந்து லட்சுமிக்குப் பூஜை செய்து காணிக்கையின் மீது அட்சதை தூவி வந்தால், நீண்ட நாளாகத் திருமணமாகாமலிருந்த கன்னிப் பெண்களுக்குத் திருமணம் கைகூடும். இந்த விரதத்தைச் சகோதரர்கள் இருந்தால், அவர்களின் அக்கா, தங்கை களுக்குச் சிறப்பான முறையில் திருமணம் நடக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism