தை மாத விரதங்களில் எளிமையானது, மாச உபவாச விரதம். தை மாதத்தின் 30 நாள்களிலும் அதிகாலை எழுந்து, அறுகு சார்த்தி விநாயகரை வழிபடுவதோடு, ‘ஆதித்ய ஹ்ருதயம்’ சொல்லி சூரியனையும் வணங்கவேண்டும். தினமும் பால் மட்டும் அருந்தி விரதமிருப்பது சிறப்பு. தை மாதம் முதல் நாள், 11-வது நாள், அமாவாசை அல்லது பௌர்ணமி தினத்தில் இந்த விரதத்தை ஆரம்பிக்கலாம். இதன் மூலம் மகிழ்ச்சியான வாழ்வும், குறைவற்ற செல்வமும் பெறலாம்.

சங்கராந்தித் திருநாளில் ஒரு விளக்கில் எண்ணெ யும், இன்னொன்றில் நெய்யும் இட்டு தீபமேற்றி வழிபடும் விரதம், சங்கராந்தி விரத தீபோத்யாபணம் ஆகும். சிவபெருமான் மற்றும் விஷ்ணுவின் அருள்பெற்று, சொர்க்கத்துக்கு வழிகாட்டும் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.

மகர சங்கராந்தியையொட்டி பொங்கலிட்டு சூரியனை வழிபடுவதுடன், சிவபெருமானையும் ஆராதிக்க வேண்டும். இந்த நாளில் நெய்யில் வறுத்த எள்ளால் தீபமேற்றி, சிவனாரை வழிபட்டு ‘மகா தீப விரதம்’ மேற்கொள்பவர்களுக்கு அனைத்துச் செல்வங்களும் கிடைக்கும். இந்த நாளில் கடைப் பிடிக்கப்படும் இன்னொரு விரதம், மகாவர்த்தி விரதம். இந்த விரதத்தின்போது, விளக்கில் பசு நெய் நிரப்பி சிவபெருமானுக்குத் தீப வழிபாடு செய்வார்கள்.

சூரியன், மகர ராசியில் பிரவேசிக்கும் தினம் என்பதால் பொங்கல் திருநாளுக்கு ‘மகர சங்கராந்தி’ என்று பெயர். அன்று அதிகாலையில், ‘இந்திரோ பேந்திர சகித சூரிய நாராயணாம் பூஜயாமி’ என்று துதித்து சூரியனை பூஜிக்க வேண்டும்.

பொங்கல் திருநாளே விண்ணவரின் விடியற் காலை நேரம். சூரியன், நாராயணரின் அம்சம் என்பதால், பொங்கலன்று திருமாலுக்குச் சிறப்பு பூஜை செய்வது சிறந்த பலனைத் தரும். ரவி குலத்தில் ஸ்ரீராமனாகப் பிறந்து, சூரியனை வழிபட்ட மகாவிஷ்ணு, கிருஷ்ண அவதாரத்தில் தன் மகன் சாம்பனுக்கு, தான் அளித்த சாபம் நீங்க, அவனிடம் சூரிய பூஜை செய்யச் சொன்னார். அவ்வாறு சாம்பன் பூஜித்த தினமே பொங்கல் திருநாள்.

பிருகு முனிவரின் புத்திரன் வைசம்பாயனர் மற்றும் தருமர், அகஸ்தியர் ஆகியோரும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி சூரியனை வழிபட்டனர் என்கிறது பவிஷ்ய புராணம்.

பண்டையத் தமிழகத்தில் பொங்கலின் 3- ம் நாளன்று ‘கன்னிப் பொங்கல்’ சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. அன்று கன்னியர்கள் காலைப் பொழுதில் சூரியனையும் மாலைப் பொழுதில் அம்மனையும் வழிபட்டு மகிழ்ந்தனர்.

-என்.தனலட்சுமி, சென்னை-21