Published:Updated:

அத்திவரதரை உற்சவர் சந்திக்கும் வைபவம்... இன்று அனந்த சரஸ் குளத்தில் எழுந்தருளுகிறார்!

JAYAVEL B

இன்று அனந்த சரஸ் குளத்தில் எழுந்தருளுகிறார் அத்திவரதர்!

athivaradar
athivaradar

காஞ்சிபுரத்தில் கடந்த 48 நாள்களாகக் கோலாகலமாக நடைபெற்ற அத்திவரதர் வைபவம் இன்றோடு நிறைவு பெறுகிறது.

god varatharaja perumal
god varatharaja perumal

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்துக்கு வந்து அத்திவரதரை தரிசனம் செய்தார்கள். கடந்த 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் வி.ஐ.பி தரிசனம் ரத்து செய்யப்பட்டது. 16-ம் தேதியான நேற்று பொது தரிசனம் மட்டுமே நடைபெற்றது.

கடைசி நாளில் அத்திவரதரைக் காண அதிக அளவு பக்தர்கள் வந்ததால் இன்று அதிகாலை 3 மணி வரை தரிசனம் நடைபெற்றது. 48-வது நாளான இன்று அத்திவரதரை குளத்தில் வைக்கும் வைபவம் நடைபெறும் என்பதால் பக்தர்கள் யாரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

Devotees
Devotees

காஞ்சிபுரம் அஸ்தகிரி தெரு, அமுதப்படி தெரு, செட்டித் தெரு உள்ளிட்ட தெருக்களில் உள்ள தடுப்புகள் அகற்றப்பட்டன. அதுபோல் காஞ்சிபுரம் செங்கல்பட்டு சாலையில் உள்ள தடுப்புகளும் அகற்றப்பட்டன. இன்று காலையிலிருந்தே கோயிலுக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தெருக்களில் மக்கள் கூட்டம் வெகுவாக குறைந்து இயல்பு நிலைக்கு வந்தது காஞ்சிபுரம்.

அத்திவரதர் வைபவத்தில் ரூ.1,000 கோடி 'வேட்டை'... சுருட்டல் நடந்தது எப்படி?

அத்திவரதரை உற்சவர் சந்திக்கும் நிகழ்வு இன்று மாலை தொடங்கியது. இதில் கோயில் அர்ச்சகர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள், காவல்துறை அதிகாரிகள், இந்து சமய அறநிலையத்துறையினர், பத்திரிகையாளர்கள் ஆகியோர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

athivaradar
athivaradar

இன்று இரவு 9 மணிக்கு மேல் அனந்த சரஸ் குளத்தில் அத்திவரதர் வைக்கப்படுவதால் மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை தைல காப்பு நடைபெறுகிறது. கிழக்கு நோக்கிய நிலையில் சயன கோலத்தில் அத்திவரதரை குளத்தில் உள்ள மண்டபத்தில் வைப்பதற்காக நீர் இறைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.