Published:Updated:

உண்ணக் கூடாத உணவுகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஶ்ரீமந் நிகமாந்த மஹா தேசிகர்
ஶ்ரீமந் நிகமாந்த மஹா தேசிகர்

ஞானநூலின் வழிகாட்டல் பி.சந்திரமெளலி

பிரீமியம் ஸ்டோரி

தாம்பூலம் தரிப்பது எப்படி தெரியுமா?

முதலில் வெற்றிலையைப் போட்டு சிறிது மெல்ல வேண்டும்; அதன் பிறகே பாக்கைப் போட்டுக்கொள்ள வேண்டும். வெற்றிலை யைத் தின்னாமல், முதலிலேயே பாக்கைத் தின்னக்கூடாது.

உண்ணக் கூடாத உணவுகள்!

வெற்றிலை, பாக்கு இரண்டையும் ஒன்றாகப் போட்டும் மெல்லக் கூடாது. வெற்றி லையின் அடி, நுனி, நரம்பு ஆகியவற்றைத் தின்னக் கூடாது. சுண்ணாம்பு வைத்த வெற்றிலையை உபயோகிக்கக் கூடாது. வெற்றிலை போட்டுக்கொள்ளும்போது, தண்ணீர் குடிக்கக்கூடாது.

இப்படித்தான் வெற்றிலை பாக்கு போடுக்கொள்ள வேண்டுமாம். இந்த விவரத்தைச் சொன்னது யார் தெரியுமா?

ஶ்ரீமந் நிகமாந்த மஹா தேசிகன். நூலின் பெயர், ‘ஶ்ரீதேசிகப் பிரபந்தம்’. இந்த நூலில் உள்ள ‘ஆகார நியமம்’ என்ற பகுதியில், சோற்றில் தொடங்கி காய்கறி, பால், தண்ணீர் எனத் தொடர்ந்து, வெற்றிலைப் பாக்கு வரை, அபூர்வமான பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் எவ்வகையான உணவுகளை உண்ணக் கூடாது என்ற விவரத்தை நாம் அறிவது அவசியம்.

கொடியவர்கள் கண் பட்ட சோறு, தீய்ந்துபோன சோறு, ஆடை, எச்சில், தும்மல் ஆகியவை பட்ட சோறு, நாய் போன்ற விலங்கினங்கள் வாய் வைத்த சோறு ஆகியவற்றை உண்ணக்கூடாது.

மனிதர்கள், பசுக்கள் முகர்ந்த உணவு, ரோகிகள் தொட்டது, ஈ, புழு, நூல், முடி, நகம் போன்றவை இருந்த உணவு, அன்போடு பரிமாறப் படாத சோறு, சந்நியாஸியிடம் பெற்றது, சந்நியாஸி பாத்திரத்தில் பட்டது, மனிதர், எலி, கோழி, காக்கை, பூனை ஆகியவற்றின் வாய் பட்டது... இப்படிப்பட்ட உணவுகளையும் உண்ணக்கூடாது.

உண்ணக் கூடாத உணவுகள்!

அடுத்தவர்களின் தோட்டத்தில் இருந்து உரியவரின் அனுமதியில்லா மல் பறித்தவற்றை உண்ணக்கூடாது. கடையில் இருந்து வாங்கிவந்து கழுவாமல் சமைத்த காய்கறி போன்றவற்றை உண்ணக்கூடாது.

முறைகேடாகவோ, தீய வழியிலோ சம்பாதித்த உணவு, நாவுக்குப் பொறுக்க முடியாத சூடு- காரம் உள்ளவை, அழுக்கான உப்பு சேர்த்த பண்டம் ஆகியவற்றை உண்ணக்கூடாது.

எள் கலந்த பண்டங்களையும், நல்லெண்ணெயும் தயிரும் கலந்த உணவையும் இரவில் உண்ணக்கூடாது. அந்தி சாயும் நேரத்திலும் நள்ளிரவிலும் உண்ணக்கூடாது. இடது கையால் உண்ணக்கூடாது. உண்ணத் தொடங்கியபின் எச்சில் இலையில் பரிமாறிய நெய்யையும், இரண்டு முறை பக்குவம் செய்த உணவையும் உண்ணக்கூடாது.

பக்குவம் செய்யாத பச்சையான உணவு (பழம் முதலானவை) வகைகளை மட்டுமே கையால் இடவேண்டும்.

விருந்தினர்களுக்கு வேறு, தனக்கு வேறு என்று பிரித்துப் பாகம் செய்த உணவை உண்ணக்கூடாது.

இங்ஙனம் விவரிக்கும் ஶ்ரீமந் நிகமாந்த மஹா தேசிகன். ``அறியாமை என்னும் இருள் மிகுந்தது இந்த உலகம். அந்த இருளை நீக்குவதற்காக, கை விளக்கைப் போல சாஸ்திரங்களைக் காட்டியருளினார் பகவான் கண்ணன். அந்த சாஸ்திரங்களின் அர்த்தங்களை ஆசார்ய புருஷர்களிடம் கேட்டறிந்து சொன்னோம்.

நிலையில்லாத உடலையும், காசு- பணத்தையும் நிலையாக எண்ணித் தீயதையே செய்யும் தீயவர்களின் வலையில் அகப்படாதீர்கள். மனம் போன போக்கில், கண்டதை உண்டு கெட்டுப் போகாதீர்கள். பேரருளானன் திருவடிகளில் பக்தியை வளர்க்கக்கூடிய, சாத்விகமான உணவையே உண்ணுங்கள்!’’ என்று கூறி நூலை நிறைவு செய்கிறார்.

உண்ணக் கூடாத உணவுகள்!

கடவுள் எங்கே?

குரு ஒருவர், ஒரு நாள் தன் சீடர்களுக்கு, எங்கும் நிறைந்திருக்கும் இறைவனைப் பற்றிய பாடத்தைச் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவன், ‘`குருவே, கடவுளைக் காண முடியுமா?’’ என்று கேட்டான்.

` ```ஏன் முடியாது? சுலபமாகக் காணலாமே!’’ என்றார் குரு.`````

``` `அப்படியானால், உங்களால் எனக்குக் கடவுளைக் காட்ட முடியுமா?’’ என்று மீண்டும் கேட்டான் மாணவன்.

```` `காட்டுகிறேன். நீ சென்று அந்த ஆலமரத்திலிருந்து ஒரு நல்ல பழத்தை எடுத்துக்கொண்டு வா. ஒரு கத்தியும் எடுத்து வா!’’ என்றார் குரு.

மாணவனும் எடுத்து வந்தான். அந்தப் பழத்தைக் காட்டி, ‘`இது என்ன?’’ என்று கேட்டார் குரு.

```` `ஆலம்பழம்’’ என்றான் மாணவன்.

` `இதை இரண்டாக வெட்டு!’’ என்றார் குரு. மாணவனும் பழத்தை இரண்டாக வெட்டினான். ‘`இதனுள்ளே என்ன தெரிகிறது?’’

`` `ஒரு சிறிய விதை!’’

`` `இந்த விதையை இரண்டாக வெட்டு! வெட்டினாயா? இப்போது என்ன தெரிகிறது?’’ என்று கேட்டார் குரு.

` `ஒன்றும் தெரியவில்லையே!’’ என்றான் மாணவன்.

`` `நன்றாக உற்றுப் பார். ஓர் ஆலமரமே தெரியும்!’’ என்றார் குரு. விருட்சத்துக்குள் விதைகளாகவும், விதைக்குள் விருட்சமாகவும் இறைவன் எங்கும் வியாபித்திருப்பதை அந்த மாணவன் புரிந்துகொண்டான்.

- உபநிடதக் கதை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு