Published:Updated:

நவம்பர் 16ல் துலா உற்சவம் உள்ளூர் விடுமுறை அளிக்க ஜெகவீரபாண்டியன் கோரிக்கை!

மயிலாடுதுறையில் நவம்பர் 16 -ல் துலா உற்சவம் - உள்ளூர் விடுமுறை அளிக்க முன்னாள் எம்.எல்.ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை !

மயிலாடுதுறையில் ஆண்டாண்டு காலமாக 'துலா உற்சவ விழா' எனப்படும் காவிரியில் புனித நீராடும் நிகழ்ச்சி, வடநாட்டின் கும்பமேளாவுக்கு நிகராக  நடைபெற்று வருவது வழக்கம். கங்கை தனது பாவத்தினை போக்கிட வரம் கேட்டபோது சிவபெருமான் வரமளித்து  'ஐப்பசி மாதம் முழுவதும்  மயிலாடுதுறைக்குச்  சென்று அங்கே ஓடும் காவிரியாற்றில்  துலாக்கட்ட பகுதியில்  மூழ்கி  நீராடினால் உனது  பாவங்கள்  அனைத்தும் நீங்கிப் புனிதமடைவாய் ' என்று வரமளித்தார்.

துலா உற்சவம்
துலா உற்சவம்

அநந்த் தொன்மையான ஐதிகத்தின் அடிப்படையில்  லட்சக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம்  துலா விழாவிற்கு மயிலாடுதுறைக்கு வந்து காவிரியில்  புனித நீராடி வருகிறார்கள்.  இந்தாண்டு காவேரியில் பக்தர்கள் புனித நீராடும் வகையில் போதிய தண்ணீரைத்  திறக்க தமிழக முதல்வரிடம் கோரிக்கை அனுப்பி, தமிழக அரசின்  பொதுப்பணித்துறையும் உடனடியாக தண்ணீர் திறந்துவிட்டது.

இதுபற்றி தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஜெகவீரபாண்டியனிடம் பேசினோம்.

"காவிரியில் போதிய தண்ணீர்  வருவதால் இந்தாண்டு துலா விழா மிகச் சிறப்பாக நடைபெறும். இதில் பக்தர்கள் பெருமளவு பங்கேற்க ஏதுவாகவும், துலா உற்சவத்தின் ஆன்மிகப் பெருமைகளையும், இதன் மூலம்  வருங்காலங்களிலும்,  பழைமைமிக்க மயிலாடுதுறை  துலா விழாவின் சிறப்புகளை அனைவரும்

எம்.எல்.ஏ. ஜெகவீரபாண்டியன்
எம்.எல்.ஏ. ஜெகவீரபாண்டியன்

அறிந்துகொள்ளும் வகையிலும்  மயிலாடுதுறை மாவட்டத்திற்கு துலா உற்சவக் கடைசி நாளான ஐப்பசி 30 -ம் தேதி (நவம்பர் 16 -ம்தேதி ) செவ்வாய்கிழமை உள்ளூர்  விடுமுறை அளிப்பதுடன், அதற்கான உரிய அனைத்து முன் ஏற்பாடுகளையும் முன்கூட்டியே  அரசு சார்பில்  மேற்கொண்டு  பக்தர்கள் மகிழும் வண்ணம் செயல்படுத்திடவேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்ட மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு