Published:Updated:

வீட்டுக்குள்ளேயே விநாயகர் உற்சவம்!

விநாயகர்
பிரீமியம் ஸ்டோரி
News
விநாயகர்

இந்த லாக்டவுன் நாள்களில் நீங்கள் செய்த உற்சவங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்.

ந்த ஊரடங்குக் காலத்தில் பெருமளவில் உற்சவங்கள் எல்லாம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஓர் இல்லத்தில், எந்தத் தடைகளும் இன்றி, ஊரடங்குக் காலத்திலும் உற்சவங்கள் அனைத்தும் ஜாம்ஜாம் என்று நடைபெற்று வருகின்றன.

வழக்கறிஞரும் சின்னத்திரை பிரபலமுமான ரவிச்சந்திரன், அவர் மனைவி பத்மினி இருவரும்தான் தங்கள் இல்லத்திலேயே தினமும் ஒரு தெய்வ உற்சவத்தைக் கொண்டாடி மகிழ்கின்றனர். புகைப் படங்கள் மற்றும் வீடியோ வடிவில் அவற்றைச் சுற்றங்களுக்கும் நட்புகளுக்கும் அனுப்பி, அவர்களையும் தரிசனம் செய்யவைத்து, மகிழ்விக்கின்றனர்.

வீட்டுக்குள்ளேயே விநாயகர் உற்சவம்!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் உற்சவம் நடத்தவிருக்கும் செய்தியைக் கேள்விப்பட்டு, பத்மினியிடம் பேசினோம்.

‘‘திருவல்லிக்கேணியில் பிறந்ததாலோ என்னவோ, உற்சவங்களுடனேயே வளர்ந்தேன் என்று சொல்ல லாம். பார்த்தசாரதி கோயிலில் வருஷம் 365 நாட்களும் உற்சவம்தானே!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ரொம்ப ஆசாரமான குடும்பம். சின்ன வயசி லிருந்தே ஸ்லோகங்கள் எல்லாம் அம்மா சொல்லிக் கொடுத்தாங்க. பாட்டும் கத்துக்கிட்டேன்.

டிகிரி முடிச்சதும், மியூசிக் அகாடமியில் ஒரு வருஷம் பாட்டு ஆசிரியர் பயிற்சியும் முடிச்சிருக் கேன். என் கணவர் ரவிச்சந்திரன் வழக்கறிஞர். எங்களுக்கு ரெண்டு மகன்கள். ரெண்டு பேருமே கல்யாணமாகி, ஆஸ்திரேலியாவில் செட்டிலாகி இருக்காங்க. அதனால இங்கே நானும் கணவரும்தான்.

சின்ன வயசிலிருந்தே கோயில் குளங்கள் போறது, விழா-பண்டிகைகளைக் கொண்டாடறது, கொலு வைக்கிறதுன்னு ஆன்மிக விஷயங்களில் ஈடுபாடு அதிகம். பிறந்த வீட்டில் எல்லோருக்கும் கலை ஆர்வம் அதிகம் என்பதால், ரொம்ப விமர்சையாகக் கொலு வைப்போம். நான் தெய்வக் காரியங்கள் எதைச் செய்தாலும் கணவர் அதற்கு ஆதரவாகவும் உதவியாகவும் இருப்பார். பிள்ளைகளும் ஊக்கம் கொடுப்பாங்க. அதனாலதான்ன், என்னால் சிறப்பாகப் பண்ண முடியுது’’ என்றார் பத்மினி.

வீட்டுக்குள்ளேயே விநாயகர் உற்சவம்!

‘‘ஊரடங்கு சமயத்தில் பல உற்சவங்களை வீட்டிலேயே நடத்தியிருக்கீங்க... அந்த ஐடியா எப்படி வந்தது?’’

‘‘ஊரடங்கு போட்டதிலிருந்தே எங்கேயும் வெளியில் போக முடியல. மனசு நிறைய பக்தியும் பெருமாளின் கிருபையும் இருக்கும்போது, நாம ஏன் உற்சவங்கள் எல்லாம் வீட்டிலேயே செய்யக் கூடாதுன்னு தோணுச்சு. பங்குனி, சித்திரை மாதங்களிலிருந்தே எல்லா கோயில்களிலும் உற்சவங்கள் ஆரம்பிச்சிடும். அதனால நானும் வருஷப் பிறப்பிலிருந்தே தொடங்கினேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சித்திரையில் ஸ்ரீராமாநுஜர் உற்சவம் வரும். கோயில்களில் செய்வது போலவே 10 நாள்கள் அதைக் கொண்டாடினோம். அதன் பிறகு கள்ளழகர் வைபவத்தைச் சிறப்பாகக் கொண்டாடினோம். வைகாசியில் காஞ்சி வரதர் உற்சவம். இப்படி ஒவ்வொரு மாதமும் கொண்டாடும்போது, மனசுக்கு ரொம்பவும் நிறைவாகவும் சந்தோஷமாகவும் இருக்கு. கோயிலுக்குப் போக முடியலையே என்கிற குறையும் இல்லை!

தமிழ்நாடு மட்டுமில்லாம இந்தியா முழுவதும் இருக்கிற பல கோயில்களுக்கு நாங்க போயிருக்கிறோம். புகழ் பெற்ற தலங்களுக்குப் போகிறபோது, அந்தக் கோயில்களின் பிரதாபங்களையும் உற்சவங்களையும் பற்றிக் கேட்டுத் தெரிஞ்சுக்குவேன்.

அங்கே விற்கும் விளக்குகள், விக்கிரகங்கள், அந்த ஊருக்கே உரித்தான கலைப்பொருள்களை வாங்கி சேகரிக்கும் பழக்கமும் எனக்கு உண்டு. யானை வாகனம், குதிரை வாகனம், தேர் போன்ற உற்சவங்களுக்குத் தேவையான எல்லாப் பொருள்களும் என் சேகரிப்பில் இருக்கு. அந்தப் பொருள்களைக் கொண்டுதான் இப்போது உற்சவங்களைச் செய்துட்டு வர்றேன்.’’

`` இந்த லாக்டவுன் நாள்களில் நீங்கள் செய்த உற்சவங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்..’’

‘‘கள்ளழகர் உற்சவம், திரு ஆடிப்பூர உற்சவம், பார்த்தசாரதி கோயில் கருட உற்சவம், வரலட்சுமி நோன்பு, ஹயக்ரீவர் ஜயந்தி... என ஒவ்வோர் உற்சவத்தையும் தலா பத்து நாள்கள் பண்ணினேன். கோயிலில் அன்றன்று என்ன நடக்குமோ, அதை நான் வீட்டில் இருக்கும் பொருள்கள், விக்கிரகங்களை வெச்சு, அலங்காரம் பண்ணி நடத்திடுவேன்.

வீட்டுக்குள்ளேயே விநாயகர் உற்சவம்!

அதேபோல், ஒவ்வொரு பிரதோஷமும் வீட்டில் கொண்டாடுவேன். ஒரு நாள் அமர்நாத் பனிலிங்கம் வெச்சிருந்தேன். இதுபோல பல உற்சவங்கள். இப்போது விநாயக சதுர்த்தி உற்சவம்... என்னிடம் விநாயகர் கலெக்‌ஷன் நிறைய இருக்கு. எங்கே பார்த்தாலும் பிள்ளையாரை வாங்கிடுவேன். என் பிள்ளையார்களில் விசேஷமானவர் மும்பை சிந்தூர ஸித்தி விநாயகர். எங்கள் வீட்டில் 40 வருஷமா இருக்கார். ரொம்ப சக்தி வாய்ந்தவர்.

அவருக்குத்தான் இப்போது அலங்காரம் பண்ணியிருக்கேன். அப்பம், மோதகம், சுண்டல் எல்லாம் நைவேத்தியம் செய்து வைத்து, விநாயகர் ஊர்வலத்தை வீட்டுக்குள்ளேயே நடத்திட்டேன்'' என்றவரிடம், ‘‘இந்த ஊரடங்கு நேரத்தில் உற்சவங்கள் நடத்தியதால் நிகழ்ந்த நன்மையைக் குறிப்பிட முடியுமா?’’ எனக் கேட்டோம்.

‘‘மனத்தில் இருந்த நோய் பற்றிய பீதியைக் குறைச்சு, மனோதைரியத்தைக் கொடுத்ததே இந்த உற்சவங்கள்தான். ரெண்டு பசங்களும் வெளிநாட்டில் இருக்காங்க. இப்போ போகவோ, வரவோ முடியாது. அதனால், நாங்க ரெண்டு பேரும் எங்களை நாங்கதான் ஒருத்தருக்கு ஒருத்தர் பார்த்துக்கணும். ‘சாமி இருக்கார் நம்ம எல்லோரையும் காப்பாற்ற’ என்ற நம்பிக்கையை இந்த உற்சவங்கள் கொடுத்திருக்கின்றன.

வீட்டுக்குள்ளேயே விநாயகர் உற்சவம்!

இந்த உற்சவங்கள் பண்றது தியானம் செய்வது மாதிரி. அவற்றால் மன அமைதி கிடைப்ப துடன், பரிபூரண திருப்தியும் கிடைக்குது. ஆரோக்கியம் கூடின மாதிரி ஓர் உணர்வு வந்தது என்பது உண்மை.

உற்சவங்கள் மட்டுமல்ல... அபார்ட்மென்ட் வளாகத்தில் அரசமரம் இருப்பதால், அரச இலைகளால் தினம் ஒரு கோலம், பிள்ளையார் உருவம்னு வடிவமைச்சு எல்லோருக்கும் அனுப்புவேன்; சந்தோஷப்படுவாங்க.

இந்த நேரத்தில் என் கணவருக்கும் பிள்ளைங் களுக்கும் கண்டிப்பா நன்றி சொல்ல ணும். ‘இப்படிப் பண்ணு, அப்படிப் பண்ணு’ன்னு அவங்கதான் நிறைய ஐடியாஸ் கொடுத்து ஊக்குவிப்பாங்க.

வீட்டுக்குள்ளேயே விநாயகர் உற்சவம்!

நாலு மாசமாக எந்தக் கோயிலிலும் பெரியளவில் திருவிழாக்கள் இல்லை; உற்சவக் காலங்களில் சாமியை எங்கயும் வெளியே பார்க்கமுடியறதில்லை. அதனால, சாமியை எங்க வீட்டுக்கு மனதார அழைத்து, நாங்க உற்சவம் பண்ணி வைக்கிறதை பாக்கியமா, எனக்கான கொடுப்பினையா நினைக்கிறேன்.

நான் அனுப்பும் வீடியோ-போட்டோக் களைப் பார்த்து ஃப்ரெண்ட்ஸ் எல்லாம், ‘கோயிலில் நேரில் தரிசித்ததுபோல் இருக்கு’ன்னு வாழ்த்தி, நன்றி சொல்லி பதில் அனுப்புவாங்க. ஏதோ என்னால் முடிந்த கைங்கரியம். எல்லாம் பகவான் கிருபை’’ என்கிறார் பரவசமாக!

தெய்வங்களைப் பார்க்க கோயிலுக்குப் போக முடியவில்லையே என்று ஏங்குபவர்களுக்கு மத்தியில், தெய்வங்களுக்கு வீட்டிலேயே உற்சவம் நடத்தி வழிபட்டு மகிழும் பத்மினியின் இறைபக்தி மிகவும் போற்றத்தக்கது!