Published:Updated:

மாலை சூட்ட மங்கலம் வரும்

மாலை
பிரீமியம் ஸ்டோரி
மாலை

அனுமனுக்கு வடைமாலை

மாலை சூட்ட மங்கலம் வரும்

அனுமனுக்கு வடைமாலை

Published:Updated:
மாலை
பிரீமியம் ஸ்டோரி
மாலை

கடவுளின் கருணையைப் பெற எத்தனையோ வழிமுறைகளை உருவாக்கித் தந்துள்ளார்கள் நம் முன்னோர்கள். அதில் முக்கியமானது சுவாமிக்கு நாமே தொடுத்த மாலையைச் சூட்டுவது. இங்கு கடவுளர்களுக்கு அணிவிக்கப்படும் விதவிதமான மாலைகள் பற்றியும் அவை அருளும் பலன்களைப் பற்றியும் காண்போம்.

ஏலக்காய் மாலை : திருவஹீந்திபுரத்தில் ஒளஷதகிரி என்னும் குன்றின்மீது அமர்ந்திருக்கும் யோக ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சாற்றி வழிபட்டால் உங்கள் குழந்தைகள் கலை, கல்விகளில் சிறந்து விளங்குவர் என்பது நம்பிக்கை.

மாலை சூட்ட மங்கலம் வரும்


பாரிஜாத மாலை : கிருஷ்ண பரமாத்மாவுக்கு துளசி மாலை போலவே பாரிஜாத மாலையும் விருப்பமானது. கிருஷ்ணருக்கு பாரிஜாத மாலை சாற்றி வழிபட நல்ல வரன் அமையும் என்பது ஐதிகம்.

வாழைப்பழ மாலை : அனுமனுக்கு வெற்றிலை மாலை, வடைமாலை போலவே வாழைப்பழ மாலையும் விருப்பமானது. இதனால் காரியங்களில் ஜெயம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

நிலை மாலை: அதாவது பெருமாளின் உயரத்துக்கு ஏற்ப நீண்ட மாலையைச் சாற்றுவதே நிலை மாலை எனப்படும். உப்பிலியப்பன், காஞ்சி வரதர் என நின்ற கோலப் பெருமானுக்கு இதை சாற்றினால் அழிவில்லாத கீர்த்தி உண்டாகும்.

தேங்காய் மாலை : விநாயகருக்கு இதைச் சாற்ற தடைகள் அகலும்.

வளையல் மாலை : அம்பிகைக்கு கண்ணாடி வளையங்களை மாலைகளாக அணிவித்து வணங்கினால் புத்திர பாக்கியம் அளிப்பாள் என்பதும் நம்பிக்கை. ஆண்டாளுக்கும் இதைச் செய்யலாம்.

இவை தவிர, தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை, துர்கைக்கு செவ்வரளி மாலை, லட்சுமிக்கு செந்தாமரை மாலை என ஒவ்வொரு தெய்வத்துக்கும் விசேஷமான மாலைகள் பல உண்டு. அதை அறிந்து சூட்ட நல்ல பலன்கள் கிட்டும் என்பதும் நம்பிக்கை. பொன் வைக்கும் இடத்தில் பூ வைக்கிறோம் என்பார்கள். மிகச் சரியான பூக்களை தெய்வங்களுக்குச் சூட்ட அவை, கோடி வராகன் பொன்னுக்கு சமம் என்கின்றன ஞான நூல்கள்.

- வசந்தா வேணுகோபால், சென்னை - 24