ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

நீ தேடும் விளக்கம் மந்தைவெளியில் கிடைக்கும்

கந்தகோட்டம் அற்புதங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கந்தகோட்டம் அற்புதங்கள்!

கந்தகோட்டம் அற்புதங்கள்!

பற்பல ஸ்தல புராணங்களை வசன நடையில் அற்புதமாக எழுதியவர் குக ரசபதி அடிகள். வள்ளலார் பாடல்களுக்கு இவர் எழுதிய உரை அற்புதமானது.

குக ரசபதி அடிகள்
குக ரசபதி அடிகள்


அன்பர்கள் இவரை ‘பிரசங்க பூஷணம்’ எனும் போற்றும்படி உரை நிகழ்த்துவதிலும் வல்லவர். இவரின் சொற்பொழிவில் நுணுக்கமான தகவல்களைக் கேட்டு வியந்த அன்பர்கள், வள்ள லாரின் திருவருட்பா முதலான நூல்களுக்கு உரை எழுதும் படி, அடிகளிடம் வேண்டினார்கள்.

அடிகளும் உடன்பட்டு உரை எழுதத் தொடங் கினார். சந்தேகம் உண்டாகும் இடங்களில், அனுபவசாலிகள் பலரையும் கேட்டே எழுதினார்.

ஒரு தருணத்தில், அடிகளுக்கு ஒரு நூலில் ஓரிடத்தில் சந்தேகம் உண்டானது. பலரிடமும் கேட்டுப் பார்த்தார். விளக்கம் கிடைக்கவில்லை. இதனால் மனதில் வருத்தமும், எடுத்த காரியத்தைச் செம்மையாகச் செய்யமுடியாமல் போய்விடுமோ என்று கலங்கினார். கந்தகோட்டம் கோயிலுக்குச் சென்று முருக னைப் பிரார்த்தித்துவிட்டு வந்தார்.

இரவு வெகுநேரம் கழித்தே உறங்கினார். அதிகாலை வேளையில் அடிகளின் கனவில் ஐந்து வயது சிறுவனின் தோற்றத்தில் தோன்றிய ஆறுமுகப்பெருமான், “அன்பனே வருந்தாதே! நீ தேடும் உரை, மயிலைக்கு அடுத்துள்ள மந்தை வெளியில் ஒரு பாட்டியிடம் உள்ளது” என்று சொல்லி, முகவரியையும் கொடுத்து மறைந்தார்.

மறுநாள் விடிந்ததும், கனவில் முருகன் அளித்த முகவரிக்கு ஓடினார். அங்கிருந்த குடிசையில் மூதாட்டி ஒருவர், வெந்நீர் அடுப்பில் தாள்களைக் கிழித்துப் போட்டுக்கொண்டிருந்தார்.

அடிகள்,``பாட்டி! இது என்ன?’’ எனக் கேட்டார்.

“எல்லாம் பழைய பொத்தகங்க தம்பி! செல்லரிச்சு வீணாப் போவுது. அதான், அக்னி பகவானுக்கு அர்ச்சனை பண்ணிக்கிட்டு இருக் கேன்” என்றார் மூதாட்டி.

அவர் தாள்களை நெருப்பில் போடுவதைத் தடுத்த அடிகள், அங்கிருந்த பழைய நூல்களை யெல்லாம் எடுத்துப் பார்த்தார். அடிகள் உரை தேடி அலைந்த நூலும், அவற்றில் ஒன்றாக இருந்தது. பிரித்துப் பார்த்து அங்கேயே தன் சந்தேகத்தை நிவர்த்தி செய்தார்.

மேலும் மூதாட்டிக்கு ஐந்து ரூபாய் பணம் கொடுத்து, அங்கிருந்த பழைய புத்தகங்களை எல்லாம் தான் எடுத்துக்கொண்டார். நேரே கந்தக்கோட்டம் சென்று, முருகன் திருமுன்னால் நூல்களை வைத்து, நெகிழ்ச்சியோடு அவரை வணங்கி வழிபட்டு திரும்பினார்.