பிரீமியம் ஸ்டோரி

இல்லங்களில் தீபங்கள்

கார்த்திகை மாதத்தில், நம் வீடுகளில் 27 இடங்களில் தீபங்கள் ஏற்றி வைக்க வேண்டும். அவை எந்தெந்த இடங்கள், அந்த இடங்களில் தீபம் ஏற்றுவதால் என்னென்ன பலன்கள் என்று தெரிந்துகொள்வோம்.

தீபங்களின் மகிமைகள்!

வாசலில்: ஐந்து விளக்குகள்

திண்ணைகளில்: நான்கு விளக்குகள்

மாடக்குழிகளில்: இரண்டு விளக்குகள்

நிலைப்படியில்: இரண்டு விளக்குகள்

நடைகளில்: இரண்டு விளக்குகள்

முற்றத்தில்: நான்கு விளக்குகள்

இந்த இடங்களில் எல்லாம் தீபங்கள் ஏற்றிவைப்பதால், நமது இல்லம் லட்சுமி கடாட்சத்தை வரவேற்கத் தயாராகி விடும்; தீய சக்திகள் விலகியோடும்.

பூஜையறையில்: இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றிவைக்கவேண்டும். இதனால் சர்வமங்கலங்களும் உண்டாகும்.

சமையல் அறையில்: ஒரு விளக்கு; அன்ன தோஷம் ஏற்படாது.

தோட்டம் முதலான வெளிப்பகுதிகளில்: யம தீபம் ஏற்றவேண்டும். இதனால் மரண பயம் நீங்கும். ஆயுள்விருத்தி உண்டாகும்.

பின்கட்டு பகுதியில்: நான்கு விளக்குகளை ஏற்றிவைக்க விஷ ஜந்துக்கள் அணுகாது. ஆனால், தற்காலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் அன்பர்கள், மேற்சொன்ன முறைப்படி விளக்கு ஏற்ற முடியாது. ஆகவே, வசதிக்கு ஏற்ப வீட்டுக்குள்ளேயும் வெளியிலுமாக 27 விளக்குகளை ஏற்றி வைத்து பலன் பெறலாம்.

- கி.அமுதா, சென்னை-44

தீபங்களின் மகிமைகள்!

மண்டை விளக்கு பிரார்த்தனை!

ம்மன் ஆலயங்களில் நோய் தீர வேண்டிக்கொண்டு மாவிளக்கு ஏற்றுவார்கள். அரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டையாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றி திரி போட்டு ஏற்றுவது மாவிளக்கு ஆகும்.

காஞ்சிபுரத்தில் உள்ள அருள்மிகு கச்சபேஸ்வரர் ஆலயத்தில், கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில், இவ்வகை தீபத்தை தலையில் வைத்துக்கொண்டு ஆலயத்தை வலம் வந்து வழிபடும் வழக்கம் உண்டு. இதை, `மண்டை விளக்குப் பிரார்த்தனை’ என்கிறார்கள். சமயபுரம், இருக்கன்குடி மாரியம்மன் ஆலயங்களில் எல்லா நாள்களிலும் பக்தர்கள் மாவிளக்குப் பிரார்த்தனை செய்து வழிபடுகிறார்கள்.

- பி.சங்கரி, திருநெல்வேலி-4

தீபங்களின் மகிமைகள்!

விசேஷ தீபங்கள்!

லயங்களில் அடுக்கடுக்கான தீபத் தட்டுகளில் ஏற்றப்படுவது மாலா தீபம் எனப்படும். அதேபோல், வெளிப் பகுதிகளில் உயர்ந்த இடங்களில் ஏற்றிவைக்கப்படுவது ஆகாச தீபம்.

கார்த்திகை மாதம் சதுர்த்தி தினத்தில் இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால் யம பயம் நீங்கும் என்பர். இதேபோல் இன்னும்பல விசேஷ தீபங்கள் உண்டு.

படகு தீபம்: கங்கைக் கரையோரங்களில் வாழும் மக்கள், புண்ணிய யாத்திரையாக கங்கைதீரத்துக்குச் செல்பவர்கள், கங்கை நதிக்கு மாலைவேளையில் ஆரத்தி செய்து, வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றி வைத்து கங்கையில் மிதக்கவிடுவர். படகு போன்ற வடிவங்களில் தீபங்கள் தயார் செய்தும் மிதக்கவிடுவார்கள். இவற்றையே நெளகா தீபங்கள் என்று அழைப்பர். சம்ஸ்கிருதத்தில் `நௌகா’ என்றால் `படகு’ எனப் பொருள்.

சர்வாலய தீபம்: கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று, மாலைவேளையில் சிவாலயங் களில் ஏற்றப்படுவது. அதாவது, பனை ஓலை களால் கூடுபோல் பெரிதாகச் செய்து, அதற்கு பூஜை செய்து தீபாராதனை காட்டி, கற்பூரத்தின் ஜோதியை அதில் ஏற்றுவது, சர்வாலய தீபம் ஆகும்.

- எல்.கவிதா, திருநெல்வேலி-3

தீபங்களின் மகிமைகள்!

விளக்கேற்றி வழிபடுவோம்!

ருவங்களைத் தாங்கி நிற்கும் திருவிளக்குகளை திருக்கார்த்திகையில் விளக்கேற்றி வழிபடலாம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. அகல் விளக்கு, குத்து விளக்கு, யானை விளக்கு, பாவை விளக்கு, லட்சுமி விளக்கு, அன்ன விளக்கு எனப் பலவகையான விளக்குகளை, கார்த்திகைத் திருநாளை ஒட்டி பெண்ணுக்குச் சீராக வழங்கும் வழக்கமும் உண்டு.

கார்த்திகைத் திருநாளில் அத்தனைவிதமான விளக்குகளையும் ஏற்றிவைத்து ஈஸ்வரனை வழிபடுவார்கள்.பூஜை அறையில் காமாட்சி விளக்கு, குத்துவிளக்கைப் பயன்படுத்துவோம். அதிகாலையிலும் மாலையிலும் வாசல் வரை விளக்கேற்றி ஒளி கூட்ட, அகல் விளக்குகளைப் பயன்படுத்துவோம். தீபாவளி மற்றும் கார்த்திகை தினங்களில் நடுவாயிலில் குத்துவிளக்கும், திண்ணைகளில் வரிசையாக அகல் விளக்குகளையும் ஏற்றி வைப்போம்.

அந்த வேளையில், யானை விளக்கு போன்றவற்றையும் நடுவாசலில் வைப்பது உண்டு. பாவை விளக்கை பூஜை அறையிலும் பூஜை அறை வாசலிலும் வைக்கலாம். உருவம் பதித்த விளக்குகளை வீட்டில் பயன்படுத்தலாம் என்பதற்காக கண்ணில் கண்ட உருவ விளக்குகளையெல்லாம் வாங்க வேண்டாம். மண் விளக்கு, உலோக விளக்குகள் உத்தமமானவை. பீங்கான் விளக்குகள், எவர்சில்வர் விளக்குகள் தவிர்க்கப்பட வேண்டியவை.

- சி.உமா, சென்னை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு