Published:Updated:

பீமன் கடைப்பிடித்த விரதம்!

ஶ்ரீமகாவிஷ்ணு விரதம்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீமகாவிஷ்ணு விரதம்

வியாசர் சொன்ன ஏகாதசி விரத மகிமை பி.சந்திரமெளலி

பீமன் கடைப்பிடித்த விரதம்!

வியாசர் சொன்ன ஏகாதசி விரத மகிமை பி.சந்திரமெளலி

Published:Updated:
ஶ்ரீமகாவிஷ்ணு விரதம்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீமகாவிஷ்ணு விரதம்

அருளையும் பொருளையும் அள்ளித் தரும் அற்புத மாதம் ஆனி மாதம். பெண்களுக்குக் கல்யாண வரமும், மாங்கல்ய பலமும் அருளும் அற்புத விரதமாம் சாவித்திரி விரதம், ஆனி மாதம் பௌர்ணமி அன்றுதான் கடைப்பிடிக்கப்படுகிறது.

சாவித்திரி விரதம் பிரம்மனின் பத்தினியான சாவித்ரிதேவியை வேண்டிச் செய்யப்படுகிறது. இதைக் கடைப்பிடிக்கும் பெண்கள் திருமாங்கல்ய பலம், சர்வ ஐஸ்வரியங்கள், பேரன்- பேத்தி காலம் வரை நீண்ட ஆயுள் உள்ளவர்களாக இருப்பர்.

அதேபோல், திருவாசகம் தந்த மணிவாசகப் பெருமான் முக்தி பெற்றதும் இந்த மாதத்தில்தான். ஆடல் வல்லானைப் போற்றும் ஆனி உத்திரத் திருநாளும் இந்த மாதத்துக்குச் சிறப்பு சேர்க்கும். மட்டுமன்றி பெருமாளைப் போற்றும் ஆனி மாதத்தின் ஏகாதசி தினங்களும் புண்ணிய பலன்களைத் தருபவை!

அற்புத பலன்களை அருளும் அபரா ஏகாதசி!

னி மாதம் வரும் தேய்பிறை ஏகாதசி ‘அபரா ஏகாதசி’ என்று சிறப்பிக்கப்படுகிறது. அன்று பகவானை திரிவிக்கிரமராகப் பூஜிக்க வேண்டும் என்கின்றன ஞானநூல்கள். ப்ரும்மஹத்தி, பொய் சாட்சி சொன்னது, குருவை நிந்தை செய்தது- போன்ற கொடிய பாவங்களை அகற்றும் வல்லமை அபரா ஏகாதசி வழிபாட்டுக்கு உண்டு.

மேலும், பிரயாகையில் மாசி மகத்தன்று நீராடிய புண்ணியம், காசியில் சிவராத்திரி அன்று விரதமிருந்து விஸ்வநாதரை பூஜை செய்த புண்ணியம், கயையில் முன்னோருக்குப் பிண்டமளித்த புண்ணியம், கேதாரேஸ்வரரை தரிசித்த புண்ணியம், பத்ரிகாஸ்ரமத்துக்குப் புனித யாத்திரைசென்று வந்த புண்ணியம் ஆகிய பலன்களையும் அளிக்கவல்லது ‘அபரா ஏகாதசி’. இந்த நாளில் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று எம்பெருமானை மனமுருகி வழிபட்டு வாருங்கள்; நீங்கள் நினைத்தது நினைத்தபடி நிறைவேறும்.

வியாசர் சொன்ன ஏகாதசி!

னி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசியை ‘நிர்ஜலா ஏகாதசி’ என்பார்கள். இதன் மகிமையை வியாச மகரிஷி தர்மபுத்திரருக்கு உபதேசித்துள்ளார்.

ஒரு முறை வியாசரைச் சந்தித்தார் தர்மபுத்திரர். வியாசரை வணங்கி, ‘‘தவசீலரே! கலியினால் உண்டாகும் துன்பங்களை அகற்ற, சுலபமான ஒரு வழியைக் கூறி அருளுங்கள்!’’ என்றார்.

‘‘எல்லாத் துன்பங்களும் நீங்குவதற்கு, ஏகாதசி உபவாசத்தைத் தவிர, வேறு வழியேதும் இல்லை. சகல சாஸ்திரங்களும் கூறுவது இதுவே!’’ என்றார் வியாசர்.

சீடர்களும், தர்மருடன் வந்தவர்களும் இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்களில் பீமன் ஒரு கேள்வி கேட்டான்.

‘‘முனி சிரேஷ்டரே! உடன் பிறந்தவர்களும் தாயும் மனைவியும் நீங்கள் சொன்ன ஏகாதசி விரதத்தைச் செய்கிறார்கள். என்னையும் உபவாஸம் இருக்கச் சொல்கிறார்கள். ஒருபொழுது இருப்பதே என்னால் முடியாத காரியம். அப்படிப்பட்ட நான் எப்படி உபவாஸம் இருப்பேன்? மேலும் என் வயிற்றில் ‘விருகம்’ என்று ஓர் அக்னி இருக்கிறது (இதனால் பீமனுக்கு ‘விருகோதரன்’ என்றும் பெயர் உண்டு!). திருப்தியாக சாப்பிட்டால் அன்றி, அது அடங்குவது இல்லை. வருடத்துக்கு ஒரே ஒரு நாள் என்னால் உபவாஸம் இருக்க முடியும். அதன் மூலம் எல்லா ஏகாதசிகளின் பலனையும் நான் பெற வேண்டும். அப்படிப் பட்ட ஓர் ஏகாதசியைப் பற்றிச் சொல்லுங்கள்!’’ என வேண்டினான்.

வியாசர் பதில் சொல்லத் தொடங்கினார்:

‘‘பீமா! இந்தக் கேள்விக்கு பரவாசு தேவனான கிருஷ்ண பரமாத்மா என்னிடம் சொன்னதை நான் உனக்குச் சொல்கிறேன்.

நீ கேட்டபடி ஓர் ஏகாதசி உண்டு. அதற்கு நிர்ஜலா ஏகாதசி என்று பெயர். தண்ணீர் கூடக் குடிக்காமல் அன்று விரதம் இருக்க வேண்டும். அதனால் அது நிர்ஜலா ஏகாதசி எனப்படுகிறது. ஆனி மாத வளர்பிறையில் வரும் அந்த ஏகாதசியன்று, விரதம் இருந்து பெருமாளை வழிபடு. இதன் மூலம் எல்லா ஏகாதசிகளிலும் விரதம் இருந்த பலன் கிடைக்கும்!’’ என்றார் வியாசர்.

அப்படியே செய்தான் பீமன். இதனால் இந்த ஏகாதசி ‘பீம ஏகாதசி’ எனவும் பெயர் பெற்றது. பீமன், அன்று முழுவதும் தண்ணீர் கூடக் குடிக்காமல் விரதம் இருந்து மறு நாள் துவாதசி அன்று உணவு உண்டான். அதனால் அந்த துவாதசி ‘பாண்டவ துவாதசி’ எனப் பெயர் பெற்றது என்றும் சொல்வது உண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism