Published:Updated:

திருமகளின் அருள் வேண்டுமா?

ஶ்ரீவரலட்சுமிதேவி
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீவரலட்சுமிதேவி

- சக்திதர் -

திருமகளின் அருள் வேண்டுமா?

- சக்திதர் -

Published:Updated:
ஶ்ரீவரலட்சுமிதேவி
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீவரலட்சுமிதேவி

நம் இல்லங்களில் லட்சுமி கடாட்சம் செழிக்கவும் மகாலட்சுமியின் திருவருள் பொங்கிப் பெருகவும் சிறப்பான சில எளிய வழிகளை எடுத்துச் சொல்கின்றன ஞானநூல்கள். வீட்டில் சுபவைபவங்கள் நடைபெறுகிறதா, அந்த நிகழ்வுக்கு வரும் எல்லோருக்கும் பன்னீர் தெளித்து சந்தனத்துடன் பூவும் கொடுக்க வேண்டுமாம். சந்தனம் திருமகளோடு பிறந்த ஐந்து மரங்களில் ஒன்று. திருமகளை யானைகள் துதிக்கையால் நீராட்டுவதையே `பன்னீர் தெளித்தல்’ குறிக்கும் என்பர். ஆகவே பன்னீர், சந்தன உபசரிப்புகள் மகாலட்சுமியை மகிழ்விக்கும்.

ஶ்ரீவரலட்சுமி வழிபாடு
ஶ்ரீவரலட்சுமி வழிபாடு

தாமரை மலர்கள் நிறைந்த குளங்கள் மகாலட்சுமி அம்சம் நிறைந்தவை. அந்தக் குளத்தைத் தரிசிப்பதும் வலம் வருவதும், அதில் வசிக்கும் மீன்களுக்கு பொரி போன்ற உணவு இடுவதும் லட்சுமிகடாட்சத்தைப் பெற்றுத் தரும்.

தேர்கள் லட்சுமியின் சாந்நித்தியம் கொண் டவை. ஆகவே, தேரோட்ட வைபவத்தைத் தரிசிப்பதும், தானம் வழங்கு வதும் செல்வச் செழிப்பையும் வாகன யோகத்தையும் உண்டாக்கும்.

மகாலட்சுமிக்கு இனிப்புப் பட்சணங்கள் படைத்து, அவற்றைக் குழந்தைகளுக்கு உண்ணக் கொடுப்பதும், வில்வமரத்தடியில் தீபமேற்றி வழிபடுவதும் திருமகளுக்கு உவப்பான விஷயங்கள்.

நாகபஞ்சமி அன்று மகாலட்சுமியை வழிபட்டு நீல நிற ஆடைகளைத் தானம் செய்வதால் புத்திர சம்பத்து உண்டாகும்; குழந்தைகள் மேன்மை அடைவார்கள். அதேபோல் வரலட்சுமி நோன்பு வழிபாடும் மேன்மையான பலன்களைத் தரும் என்று வழிகாட்டுகிறார், சுலோச்சனா சுப்ரமணியன்.

சுலோச்சனா சுப்ரமணியன்
சுலோச்சனா சுப்ரமணியன்


``சீதாதேவி, நளாயினி, அப்சரஸ் பெண்கள், சித்திரநேமி என்ற தேவதை போன்றோர் கடைப்பிடித்த புனித விரதம் இது. வரலட்சுமி பூஜைக்கு முதல் நாளே வீட்டைச் சுத்தப்படுத்தி அலங்கரித்து வைத்து, மறுநாள் முறைப்படி கலசம் ஸ்தாபித்து வழிபட வேண்டும்.

அன்று நறுமணப் பூக்களைச் சமர்ப்பித்து, உப்புக்கொழுக்கட்டை, பால் கொழுக்கட்டை, இனிப்புப் பட்சணங்கள் முதலானவற்றைப் படைத்து, தூப-தீப ஆராதனைகள் செய்து வழிபடுவதால், வம்சம் தழைக்கும்; குடும்பம் செழிக்கும். எங்கள் வீட்டில் என் மாமியாருக்குப் பிறகு நான் தொடர்ந்து விரதம் இருக்கிறேன். குறையொன்றும் இல்லை. எங்கும் எப்போதும் சுபிட்சம்தான்’’ என்று சிலிர்ப்புடன் விவரிக்கிறார் சுலோச்சனா சுப்ரமணியன். கடந்த மாதம் வரலட்சுமி விரத நாளன்று இவர் வீட்டில் கொலுவிருந்த மகா லட்சுமிதேவியையே படத்தில் தரிசிக்கிறீர்கள்! விரதநாளில் மட்டுமல்ல அனுதினமும் விளக்கேற்றிவைத்து கீழ்க்காணும் ஸ்லோகம் சொல்லி திருமகளை வழிபடுவதால் சகல மங்கலங்களும் உண்டாகும்.

நமஸ்தேஸ்து மஹாமாயே ஶ்ரீபீடே ஸுரபூஜிதே

சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே!