Published:Updated:

தினமும் வழிபடுவோம்!

ஶ்ரீகுருவாயூரப்பன்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீகுருவாயூரப்பன்

- வேல்முருகன்

தினமும் வழிபடுவோம்!

- வேல்முருகன்

Published:Updated:
ஶ்ரீகுருவாயூரப்பன்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீகுருவாயூரப்பன்

பகவான் நாராயணனின் அவதார லீலைகளை பக்தி மயமாக வர்ணித்து, நேரடியாக குருவாயூரப்பனின் ஒப்புதல் பெற்ற ஒப்பற்ற நூல் நாராயணீயம். தனது நோய் நீங்குவதற்காக நாராயண பட்டத்திரி எழுதிய இந்த நூல், அவரது நோயை நீக்கியதுடன், இதைப் பாராயணம் செய்யும் பலரது நோய்களையும் தீர்த்து வைப்பது அனுபவபூர்வமான உண்மை.

தினமும் வழிபடுவோம்!

ஶ்ரீநாராயணீயத்தில் வரும் - கீழ்க்காணும் வேண்டுதலைச் சொல்லி அனுதினமும் கிருஷ்ணபரமாத்மாவை வழிபட்டால், நோய்கள் நம்மை அண்டாது. எப்போதும் நம் உள்ளத்தில் கிருஷ்ண சிந்தனை நிலைத்திருக்கும் அதனால் எவ்வித பிரச்னைகளையும் சமாளிக்கும் வல்லமை கிடைக்கும்.

தேவகியின் வயிற்றில் இருந்த கண்ணனிடம் வேண்டுவது போன்று, நாராயண பட்டத்திரி குருவாயூரப்பனிடம் வைக்கும் பிரார்த்தனை வேண்டுதல் இதுதான்...

‘குருவாயூரப்பா! எங்கும் நிறைந்திருக்கும் தாங்கள் தேவகியின் கர்ப்பத்தில் நுழைந்த மாத்திரத்தில் தேவர்கள் அனைவரும் கம்சனின் சிறைச்சாலையைத் தேடிவந்து தங்களைத் துதித்தார்கள் அல்லவா? அப்படிப்பட்ட கருணாமூர்த்தியான தாங்கள் எனது வியாதிக் கூட்டத்தை நீக்குங்கள்.

மேலும் தேவகி, தங்களைத் தன் கர்ப்பத்தில் தரித்தாள். (அதுபோல) நான் தங்களை என் இதயத்திலே தரிசிக்க வேண்டும். அதற்குத் தேவை, அசையாத பக்தி. அதையும் தாங்கள் எனக்கு அருளவேண்டும்!’ என வேண்டுகிறார். இந்த வேண்டுதலைச் சொல்லி, கண்ணனுக்கு பாயசம் அல்லது வெண்ணெய் நைவேத் தியம் செய்து வழிபட்டால், நமக்கு நன்மைகள் யாவும் கைகூடும்.

காகமா புறாவா?

ருமுறை நந்தவனம் ஒன்றில் ஶ்ரீகிருஷ்ணரும் அர்ஜுனனும் உலாவிக் கொண்டிருந்தார்கள். அப்போது கிருஷ்ணர் ஒரு பறவை யைக் காட்டி, ‘‘அர்ஜுனா அதோ தெரிகிறதே, அது காகம்தானே?’’ என்று கேட்டார்.

சற்றும் தாமதிக்காமல், ‘‘ஆம்’’ என்றான் அர்ஜுனன்.

ஶ்ரீகிருஷ்ணர் விடவில்லை. ‘‘இல்லை அர்ஜுனா, அது காகம் அல்ல; புறா போன்று தெரிகிறதே’’ என்றார். அர்ஜுனனும் ‘‘ஆமாம் கிருஷ்ணா புறாதான்!’’ என்றான். ஶ்ரீகிருஷ்ணர் சிரித்தார். ‘‘அர்ஜுனா! நான் சொல்வதை அப்ப டியே ஒப்புக்கொள்கிறாயே, ஏன்?’’ என்று கேட்டார்.

அர்ஜுனன் பதில் சொன்னான்: ‘‘பகவானே... நான், என் கண்களால் காண்பதைவிட, உங்கள் மீதும் உங்களின் வார்த்தைகள் மீதும் பூரண அதிக நம்பிக்கை உள்ளவன். தங்களால் எதையும் மாற்ற முடியும்; எனக்கு நீங்களே கதி!’’

இதுதான் உண்மையான சரணாகதி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism