Published:Updated:

கார்த்திகை மாத விரதங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
திருக்கார்த்திகை வழிபாடுகள்
திருக்கார்த்திகை வழிபாடுகள்

கார்த்திகை மாத வழிபாடுகள் தி. ராஜேஸ்வரி, சேலம்

பிரீமியம் ஸ்டோரி

தமிழர்தம் பழம்பெரும் விழாக்களில் ஒன்று திருக்கார்த்திகை தீப விழா. கார்த்திகை விழாவை இலக்கிய நூல்கள் பலவும் சிறப்பித்துக் கூறுகின்றன. `கார்த்திகை காதில் கனமகர குண்டலம் போல் சீர்த்து விளங்கித் திருப்பூத்தல்...’ என விவரிக்கிறது பரிபாடல்.

கார்த்திகைத் திருநாளின் மீன்கூட்டம் அதாவது கார்த்திகை நட்சத்திரம், மாந்தர் காதில் அணியும் மகரக் குண்டலங்கள் போன்று ஒளி நிறைந்ததாய் அமைந்திருந்தது என்கிறது இந்தப் பாடல் வரி.

`வீரை வேண்மான் வெளியன் தித்தன்
முரசுமுதல் கொளீஇய
மாலை விளக்கின்வெண்கோடு இயம்ப...’
என்றொரு சம்பவத்தை அழகாக விவரிக்கிறது நற்றிணை நூல். அதாவது வீரை எனும் ஊரை ஆண்ட மன்னனின் மகன் தித்தன் என்பவன் முரசில் திரி ஏற்றி மாலையில் விளக்கிட்டானாம். அப்போது வெண் சங்கு முழங்கியது என்ற தகவலைச் சொல்கின்றன மேற்காணும் வரிகள். இலக்கியங்கள் இப்படியென்றால், புராணங்களும் கார்த்திகை வைபவத்தைப் பெரிதும் போற்றுகின்றன.

கார்த்திகை மாத விரதங்கள்!

புராணங்கள் போற்றும் கார்த்திகை!

பிரம்மனும் அரியும் அடிமுடி காண இயலாதபடி சிவப்பரம்பொருள் தழல் பிழம்பாய் நின்ற திருநாள் திருக்கார்த்திகை நாள். சக்திதேவி அருணையில் சிவனாரின் அருள் பெற்றதும் திருக்கார்த்திகை மாதத்தில்தான்.

அம்பிகை, மகிஷாசுரனுடன் போர் புரிந்த போது தவறுதலாக சிவலிங்கம் ஒன்றை உடைத்து விட்டாள். அதனால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்ய, கார்த்திகை தினத்தன்று தீபம் ஏற்றி அவள் விரதம் இருந்தாள் என்று கார்த்திகை விரத பலன் குறித்து, தேவி புராணம் கூறுகிறது. கார்த்திகை விரதத்தை தவறாமல் 12 வருடங்கள் கடைப்பிடித்து நாரத முனிவர், சப்த ரிஷிகளுக்கும் மேலான பதவி பெற்றார் என்கின்றன ஞானநூல்கள்.

சிறப்பு மிகுந்த இந்த மாதத்தில், தீபத் திருநாள் வழிபாடு மட்டுமன்றி நாம் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய வேறுசில விரத வழிபாடுகளும் உண்டு.கார்த்திகையில் துளசி வழிபாடு

துளசிதேவி மகாவிஷ்ணுவைத் திருமணம் செய்து கொண்ட தினம் கார்த்திகை மாத துவாதசி நாள் என்பது ஐதீகம். எனவே, கார்த்திகை மாதம் முழுவதும், துளசி தளங்களால் மகா விஷ்ணுவை அர்ச்சித்து வழிபட்டு வந்தால், ஒவ்வொரு துளசி தளத்துக்கும் ஒவ்வொரு அஸ்வமேத யாகம் செய்த பலன் உண்டு என்பர். துளசி மாலை அணிபவர்களிடம், மகாலட்சுமி எப்போதும் வாசம் செய்வாள் என்கிறது சாஸ்திரம். கார்த்திகை மாத துவாதசி நாளில், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்கும். அன்று மகாவிஷ்ணுவை தாமரை மலர்களால் வழிபடுவது விசேஷம்!

கார்த்திகை மாத விரதங்கள்!

பிள்ளையார் சஷ்டி விரதம்

யமுகாசுரன் என்பவனை வென்ற பிள்ளையாரைத் தியானித்துக் கடைப்பிடிக்கப்படுவது பிள்ளையார் சஷ்டி விரதம். கார்த்திகை மாதம் கிருஷ்ண பட்ச பிரதமை தொடங்கி மார்கழி மாதம் சுக்லபட்ச சஷ்டி திதி வரையிலும் 21 நாட்கள் அனுஷ்டிக்க வேண்டிய விரதம்.

கார்த்திகை மாதம் கிருஷ்ணபட்ச சஷ்டியன்று காலையில் ஸ்நானம் செய்த பிறகு, உடல் மனத் தூய்மையுடன் விரதத்தைத் தொடங்க வேண்டும். விரத பங்கம் ஏற்படாமல் இருப்பதற்காக 21 இழைகளுடன் கூடிய நூலை மஞ்சளில் தோய்த்து, விநாயகரை தியானித்து, ஆண்கள் வலது கரத்திலும் பெண்கள் இடது கரத்திலும் காப்பாகக் கட்டிக் கொள்ளவேண்டும்.

முதல் 20 நாட்கள் ஒருவேளை மட்டும் உணவு உண்டு, உபவாசம் இருக்கவேண்டும். இறுதி நாளில் முழு விரதம் இருந்து, இரவு விநாயகரை தரிசித்து வழிபட்டு, விரதத்தைப் பூர்த்தி செய்யவேண்டும்.

21 நாட்களும் விநாயகரின் திருக்கதைகளைப் படிப்பதும், விநாயகரின் திருவிளையாடல்களைப் பேசக் கேட்பதும் மிகப் புண்ணியமாகும். விநாயகர் ஆலயங்களில் விசேஷ அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்ற பின், பவித்ரமான விநாயகப் பெருமானின் சரிதத்தைப் பாராயணம் செய்யலாம். 21 நாட்கள் விரதம் இருக்க இயலாதவர்கள், மார்கழி மாதம் சுக்லபட்சத்தில் வரும் விநாயகர் சஷ்டி அன்று மட்டுமாவது முறைப்படி விரதம் அனுஷ்டித்து விநாயகப் பெருமானின் பூரண அருளைப் பெறலாம்.

இதனால் நல்ல உத்தியோகம், கல்யாண வரம், மாங்கல்ய பலம், பிள்ளை வரம் முதலான வரங்களைப் பெறலாம். நம்மையும் அறியாமல் நம்மைத் தொடரும் தோஷங்களும் நீங்கும் என்பார்கள் பெரியோர்கள்.

கார்த்திகை மாத விரதங்கள்!

கார்த்திகை சோமவார விரதம்

டும் தவம் இருந்த உமாதேவி, ஈசனின் திருமேனியில் இடம்பெற்றது, கார்த்திகை சோமவார நன்னாளில்தான் (திங்கட்கிழமை). தனது துயர் நீங்க சிவனாரின் திருவடியில் விழுந்த சந்திரன், அவரின் திருமுடியில் இடம்பெற்ற திருநாளும் இதுவே!

கார்த்திகை சோம வார விரதம் கடைப்பிடித்து சிவபெருமானையும், அம்பாளையும் வழிபட்டால், ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும் என்கின்றன ஞான நூல்கள். முதல் நாள் மாலை முதல் உண்ணா நோன்பு கடைப்பிடித்து, மறு நாள் மாலை சிவபெருமானை வழிபடுவது சோமவார விரதம் ஆகும். அன்று சிவனாரை வழிபட்டதும், இயன்ற அளவு அன்னதானமும் வஸ்திர தானமும் செய்தால் வாழ்நாள் முழுவதும் அன்னம், வஸ்திரம் ஆகியவற்றுக்குக் குறை இருக்காது. ஆண்களும், பெண்களும் சோம வார விரதம் கடைப்பிடிக்கலாம். இதனால் ஆண்களுக்கு அழகிய, நல்ல மனைவி கிட்டுவாள். பெண்களுக்கு, நல்ல குடும்ப வாழ்வும் குறையாத செல்வமும், சுகமும் என்றும் நிறைந்து விளங்கும். கார்த்திகை மாத சோம வார நாள்கள் (திங்கள் கிழமைகள்) அனைத்துமே சிறப்புதான் என்றாலும், கார்த்திகை மாத பௌர்ணமிக்குப் பிறகு வருகிற திங்கள்கிழமை அல்லது கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்துக்குப் பிறகு வருகிற சோமவாரம் ஆகிய நாட்களில் விரதம் இருந்து இறைவனை வழிபட்டால், பன்மடங்கு பலன்கள் கிடைக்கும்.

கார்த்திகை மாத விரதங்கள்!

கார்த்திகை ஞாயிறு

வகிரக மூர்த்திகள் வழிபட்டு வரம்பெற்ற விரதம் கார்த்திகை ஞாயிறு விரதம். கார்த்திகை மாதம் முதல் ஞாயிறு தொடங்கி, பன்னிரண்டு வாரங்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து சிவசக்தியை வழிபட்டு வந்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி, சிவசக்தியின் பேரருள் கிடைக்கும் . விரதம் இருக்கும் 12 ஞாயிறுகளிலும் ஏதேனும் ஒரு சிவாலயத்தை தரிசிப்பதால் பெரும் புண்ணியம் வாய்க்கும்.

பிள்ளையார் சஷ்டி விரதம்

யமுகாசுரன் என்பவனை வென்ற பிள்ளையாரைத் தியானித்துக் கடைப்பிடிக்கப்படுவது பிள்ளையார் சஷ்டி விரதம். கார்த்திகை மாதம் கிருஷ்ண பட்ச பிரதமை தொடங்கி மார்கழி மாதம் சுக்லபட்ச சஷ்டி திதி வரையிலும் 21 நாட்கள் அனுஷ்டிக்க வேண்டிய விரதம்.

கார்த்திகை மாதம் கிருஷ்ணபட்ச சஷ்டியன்று காலையில் ஸ்நானம் செய்த பிறகு, உடல் மனத் தூய்மையுடன் விரதத்தைத் தொடங்க வேண்டும். விரத பங்கம் ஏற்படாமல் இருப்பதற்காக 21 இழைகளுடன் கூடிய நூலை மஞ்சளில் தோய்த்து, விநாயகரை தியானித்து, ஆண்கள் வலது கரத்திலும் பெண்கள் இடது கரத்திலும் காப்பாகக் கட்டிக் கொள்ளவேண்டும்.

முதல் 20 நாட்கள் ஒருவேளை மட்டும் உணவு உண்டு, உபவாசம் இருக்கவேண்டும். இறுதி நாளில் முழு விரதம் இருந்து, இரவு விநாயகரை தரிசித்து வழிபட்டு, விரதத்தைப் பூர்த்தி செய்யவேண்டும்.

21 நாட்களும் விநாயகரின் திருக்கதைகளைப் படிப்பதும், விநாயகரின் திருவிளையாடல்களைப் பேசக் கேட்பதும் மிகப் புண்ணியமாகும். விநாயகர் ஆலயங்களில் விசேஷ அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்ற பின், பவித்ரமான விநாயகப் பெருமானின் சரிதத்தைப் பாராயணம் செய்யலாம். 21 நாட்கள் விரதம் இருக்க இயலாதவர்கள், மார்கழி மாதம் சுக்லபட்சத்தில் வரும் விநாயகர் சஷ்டி அன்று மட்டுமாவது முறைப்படி விரதம் அனுஷ்டித்து விநாயகப் பெருமானின் பூரண அருளைப் பெறலாம்.

இதனால் நல்ல உத்தியோகம், கல்யாண வரம், மாங்கல்ய பலம், பிள்ளை வரம் முதலான வரங்களைப் பெறலாம். நம்மையும் அறியாமல் நம்மைத் தொடரும் தோஷங்களும் நீங்கும் என்பார்கள் பெரியோர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கார்த்திகை ஞாயிறு

நவகிரக மூர்த்திகள் வழிபட்டு வரம்பெற்ற விரதம் கார்த்திகை ஞாயிறு விரதம். கார்த்திகை மாதம் முதல் ஞாயிறு தொடங்கி, பன்னிரண்டு வாரங்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து சிவசக்தியை வழிபட்டு வந்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி, சிவசக்தியின் பேரருள் கிடைக்கும் . விரதம் இருக்கும்

12 ஞாயிறுகளிலும் ஏதேனும் ஒரு சிவாலயத்தை தரிசிப்பதால் பெரும் புண்ணியம் வாய்க்கும்.

கார்த்திகை சோமவார விரதம்

கடும் தவம் இருந்த உமாதேவி, ஈசனின் திருமேனியில் இடம்பெற்றது, கார்த்திகை சோமவார நன்னாளில்தான் (திங்கட்கிழமை). தனது துயர் நீங்க சிவனாரின் திருவடியில் விழுந்த சந்திரன், அவரின் திருமுடியில் இடம்பெற்ற திருநாளும் இதுவே!

கார்த்திகை சோம வார விரதம் கடைப்பிடித்து சிவபெருமானையும், அம்பாளையும் வழிபட்டால், ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும் என்கின்றன ஞான நூல்கள். முதல் நாள் மாலை முதல் உண்ணா நோன்பு கடைப்பிடித்து, மறு நாள் மாலை சிவபெருமானை வழிபடுவது சோமவார விரதம் ஆகும். அன்று சிவனாரை வழிபட்டதும், இயன்ற அளவு அன்னதானமும் வஸ்திர தானமும் செய்தால் வாழ்நாள் முழுவதும் அன்னம், வஸ்திரம் ஆகியவற்றுக்குக் குறை இருக்காது. ஆண்களும், பெண்களும் சோம வார விரதம் கடைப்பிடிக்கலாம். இதனால் ஆண்களுக்கு அழகிய, நல்ல மனைவி கிட்டுவாள். பெண்களுக்கு, நல்ல குடும்ப வாழ்வும் குறையாத செல்வமும், சுகமும் என்றும் நிறைந்து விளங்கும். கார்த்திகை மாத சோம வார நாள்கள் (திங்கள் கிழமைகள்) அனைத்துமே சிறப்புதான் என்றாலும், கார்த்திகை மாத பௌர்ணமிக்குப் பிறகு வருகிற திங்கள்கிழமை அல்லது கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்துக்குப் பிறகு வருகிற சோமவாரம் ஆகிய நாட்களில் விரதம் இருந்து இறைவனை வழிபட்டால், பன்மடங்கு பலன்கள் கிடைக்கும்.

கார்த்திகையில் துளசி வழிபாடு

துளசிதேவி மகாவிஷ்ணுவைத் திருமணம் செய்து கொண்ட தினம்

கார்த்திகை மாத துவாதசி நாள் என்பது ஐதீகம். எனவே, கார்த்திகை மாதம் முழுவதும், துளசி தளங்களால் மகா விஷ்ணுவை அர்ச்சித்து வழிபட்டு வந்தால், ஒவ்வொரு துளசி தளத்துக்கும் ஒவ்வொரு அஸ்வமேத யாகம் செய்த பலன் உண்டு என்பர். துளசி மாலை அணிபவர்களிடம், மகாலட்சுமி எப்போதும் வாசம் செய்வாள் என்கிறது சாஸ்திரம். கார்த்திகை மாத துவாதசி நாளில், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்கும். அன்று மகாவிஷ்ணுவை தாமரை மலர்களால் வழிபடுவது விசேஷம்!

- தி. ராஜேஸ்வரி, சேலம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு