அன்னை சதிதேவியின் கண்களும் காதுவளைகளும் விழுந்த தலம் வாரணாசி, அதனால் சக்திபீடங்களில் ஒன்றாக காசி விசாலாட்சி கோயில் கருதப்படுகிறது.

சக்தி உபாசகர்கள் வழிபடும் முப்பெருந்தேவியர் - மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி. இவர் களில், புண்ணியம்பதியாம் காசியில் அருள்பவள் அன்னை விசாலாட்சி.

அன்னை விசாலாட்சியின் கோயில் கி.பி.1803-ம் ஆண்டு புனரமைக்கப் பட்டது. ஸ்ரீவிஸ்வநாதர், ஸ்ரீகாசி விசாலாட்சியுடன் இங்குள்ள ஸ்ரீகால பைரவரையும் தரிசித்து வழிபடுவது விசேஷம்.

மகா சிவராத்திரியில் அன்னை விசாலாட்சிக்கு நான்கு கால அபிஷேகம் நடைபெறும். நவராத்திரி உற்சவம் இங்கு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

துர்கா, பிரம்மசாரினி, சந்திர மணி, கூஷ்மாண்டா, வாகீஸ்வரி, காத்யாயனி, காளராத்ரி, துர்கா, அன்னபூரணி, ஸித்தி மாதா ஆகிய தேவியின் திருவடிவங்கள் நவராத்திரி விழாவில் பூஜிக்கப்படும்.

10-ஆம் நாளான விஜயதசமி அன்று பக்தர்கள் காசிவிஸ்வநாதர் மற்றும் விசாலாட்சியை தரிசிப்பது வழக்கம்.

விஜயதசமி அன்று மூலவர் விசாலாட்சி சொர்ண மயமாகக் காட்சி தருகிறாள். அன்று உற்சவ விசாலாட்சி, குதிரை வாகனத்தில் கையில் ரத்ன வேல் பளபளக்கக் காட்சி அருள்வாள். அப்போது நடைபெறும் அம்பு போடும் வைபவத்தில் அம்பு யார் மேல் படுகிறதோ அவர்கள் பாக்கியசாலிகளாகக் கருதப்படுவர்.

இங்கு ஐப்பசி மாத அன்னாபிஷேகமும் விசேஷம். ராமநவமியை ஒட்டிய அஷ்டமி அன்ன பூர்ணா அஷ்டமியாகக் கொண்டாடப்படுகிறது.

பௌர்ணமிதோறும் இங்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் அம்பிகைக்கு நடைபெறும்.

விசாலாட்சி என்றால் அகண்ட கண்களைக் கொண் டவள் என்று பொருள். அதனால்தான் பெருந் தடக்கண், பெருந்தடக்கட் பைந்தேன், நிறைந்த பூங்குழலி, கை வளையவள், என்றெல்லாம் காசிக் கலம்பகத்தில் குமர குருபரர் விசாலாட் சியைப் போற்றுகிறார்.

அன்னை விசாலாட்சிக்கு நாமே குங்கும அர்ச்சனை செய்து வழிபடலாம்! காசிவிஸ்வநாதர், அன்னை விசாலாட்சி மற்றும் அன்னபூரணி தேவிக்கு நடைபெறும் பூஜைகளின்போது, மூன்று கால பூஜைக்கான பொருள்களை வழங்குவது தமிழகத்தைச் சேர்ந்த நகரத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.