Published:Updated:

பிரசாதம்... கஷாயம்!

பிரசாதம்
பிரீமியம் ஸ்டோரி
பிரசாதம்

பிரசாதம்

பிரசாதம்... கஷாயம்!

பிரசாதம்

Published:Updated:
பிரசாதம்
பிரீமியம் ஸ்டோரி
பிரசாதம்

பிரசாதம்... கஷாயம்!

கர்நாடக மாநிலத்தில் உள்ளது கொல்லூர் திருத்தலம். இங்கே லிங்க ரூபிணியாக முப்பெருந்தேவியரின் அம்சத்துடன் அன்னை மூகாம்பிகை அருள்வதாக ஐதிகம்.

மூகாம்பிகை
மூகாம்பிகை


இங்கே மூகாம்பிகைக்கு அபிஷேகம் கிடையாது; அலங்காரம், புஷ்பாஞ்சலி உண்டு. லிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் நிகழ்கிறது. அபிஷேகத்தின்போது லிங்கத்தின் நடுவில் சொர்ண ரேகையைக் காணலாம். இதில் இடதுபுறம் பிரம்மா, விஷ்ணு, சிவபெருமானும், வலது புறம் சரஸ்வதி, லட்சுமி, பார்வதிதேவியும் அருள்வதாக நம்பிக்கை.

மூகாம்பிகையை சரஸ்வதிதேவியாக பாவித்து, ஆதிசங்கரர் ‘கலா ரோகணம்’ பாடி அருள்பெற்றார். எனவே இங்கு அம்பிகைக்கு வஸ்திரம் சார்த்தி வழிபட்டால் குழந்தைகள், கல்வி-கேள்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை.

இந்தத் தலத்தில் கடும் தவத்தில் ஈடுபட்ட ஆதிசங்கரர், எழ முயன்றாராம்; ஆனால் முடியவில்லை. அப்போது, அம்பிகையே வந்து அவருக்கு கஷாயம் ஒன்றை வழங்கினாளாம். எனவே, அர்த்தசாம பூஜையின்போது, பிரசாதமாக பக்தர்களுக்கு கஷாயம் வழங்கப்படுகிறது. இந்த கஷாயத்தைச் சாப்பிட்டால் சகல நோய்களும் தீரும் என்கின்றனர்!

-எம்.ராமு, தூத்துக்குடி

நமஸ்தே சாரதாதேவி!


காஷ்மீரில் சாரதாம்பிகைக்குக் கோயில் அமைவது குறித்து சென்ற இதழில் வெளியான கட்டுரையைப் படித்து மகிழ்ந்தோம். அதில் இடம்பெற்ற காஷ்மீர் சாரதாம்பிகையைப் போற்றும் ஸ்லோகத்தின் கடைசி வரி விடுபட்டிருந்தது. அந்த ஸ்லோகம் இங்கே...

`நமஸ்தே சாரதேதேவி

காஷ்மீரபுரவாசினி

த்வாம் அஹம் பிராத்தயேத் நித்யம்

வித்யா தானம் ச தேஹிமே

`காஷ்மீரில் வசிக்கும் சாரதா தேவியான உன்னை நிதமும் வணங்குகிறேன். எமக்குக் கல்விஞானத்தை வழங்குவாயாக’ என்று துதித்து வேண்டுகிறது இந்த ஸ்லோகம்.

-எஸ்.புவனா, சென்னை-44

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism