Published:Updated:

நினைத்ததை நிறைவேற்றும் மகாகணபதி மங்கல துதிப்பாடல்!

ஶ்ரீவிநாயகர்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீவிநாயகர்

தொகுப்பு: சொல்லின் செல்வன் பி.என்.பரசுராமன்

நினைத்ததை நிறைவேற்றும் மகாகணபதி மங்கல துதிப்பாடல்!

தொகுப்பு: சொல்லின் செல்வன் பி.என்.பரசுராமன்

Published:Updated:
ஶ்ரீவிநாயகர்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீவிநாயகர்

நினைத்ததை நிறைவேற்றும் அதியற்புதமான பிள்ளையார் துதிப் பாடல்களில் ஒன்று மகா கணபதி மங்கலமாலிகா ஸ்தோத்திரம். இதைப் படிப்பதால் சகல காரியங்களும் தடைகளின்றி வெற்றி பெறும். இடையூறுகள் விலகும். ஜாதகத்தில் கேது கிரகத்தின் பாதக நிலையால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.

நினைத்ததை நிறைவேற்றும் மகாகணபதி மங்கல துதிப்பாடல்!

ந்தத் துதிப் பாடலை அனுதினமும் படித்து பிள்ளையாரை வழிபடுவது உத்தமம். இயலாவிடில், வெள்ளிக்கிழமைதோறும் படித்து வழிபடலாம். விநாயகர் சதுர்த்தி அன்று இந்தப் பாடலைப் பாடி வழிபடுவது மிகவும் விசேஷம்.

சகலவிதமான மங்கல வரங்களையும், லட்சுமிகடாட்சத்தையும், ஐஸ்வர்யத்தையும் அருளவல்ல இந்த மகா கணபதி மங்கலமாலிகா ஸ்தோத்திரத்தை அடியொற்றி தமிழில் எளிய வடிவிலான துதிப் பாடல் உங்களுக்காக!

நினைத்ததை நிறைவேற்றும் மகாகணபதி மங்கல துதிப்பாடல்!

நீலகண்டரின் பிள்ளையே

அம்பாள் மடி அமர்ந்தவரே

இருபதினாறு உருக்கொண்ட

கருப்பொருளே கற்பகத்தருவே

கணபதியே மங்கலம்.

முழுமுதற் தெய்வமே

ஒற்றைக் கொம்பும் மோதகமும்

கைக்கொண்ட இறைவனே

வல்லபை நாதனே

கணபதியே மங்கலம்.

பேழை வயிற்றோனே

வேழ முகத்தோனே

மதி ஒளிர விதி தந்த நாதனே

கருணா மூர்த்தியே

கணபதியே மங்கலம்.

ஐந்து கரமும் அங்குசபாசமும்

பிளிரும் களிற்றின் செவிமடல் அழகும்

சிந்தையில் நின்றிட வல்வினை நீங்கிட

யாவரும் கைதொழும்

கணபதியே மங்கலம்.

நினைத்ததை நிறைவேற்றும் மகாகணபதி மங்கல துதிப்பாடல்!

துர்கை மைந்தனே

சாமுண்டி புதல்வனே

ஹேரம்ப நாதனே விநாயகனே

மூஷிக வாகனனே மூலப் பொருளோனே

கணபதியே மங்கலம்.

ஒளிரும் தந்தம் கொண்டவனே

வெல்ல முடியா வித்தகனே

வேண்டுவதை விரைவில் அருள்பவனே

சித்திபுத்தி நாயகனே மகிழ்வளிக்கும்

கணபதியே மங்கலம்.

முப்புரிநூல் தரித்தவனே

இடர்களையும் இறைவனே

அறுகம்புல் பிரியனே

ஆனை முகத்தவனே

கணபதியே மங்கலம்.

பெருமைமிகு மேனியனே

பகை கெடுக்கும் பயங்கரனே

வேலனுக்கு மூத்தவனே

சிவனருளில் சிறந்தவனே

கணபதியே மங்கலம்.

நினைத்ததை நிறைவேற்றும் மகாகணபதி மங்கல துதிப்பாடல்!

குங்கமப்பூ வண்ணனே

நாகாபரண நாதனே

ஆனந்த ரூபணே

ஆலகாலன் மைந்தனே

கணபதியே மங்கலம்.

பக்தர் நலம் காப்பவனே

வினை களையும் தெய்வமே

சிவனாரின் பிள்ளையே

மங்கல முகத்தினனே ஏக தந்தனே

கணபதியே மங்கலம்.

கணங்களின் தலைவனே

திக்கெட்டும் நிறைந்தவரே

பாவிகளின் பகைவரே

நெற்றிப்பிறை அழகரே

கணபதியே மங்கலம்.

நினைத்ததை நிறைவேற்றும் மகாகணபதி மங்கல துதிப்பாடல்!

சதுர்த்தி நாயகனே

பூசிக்கத் தகுந்தோனே

வித்தைகளின் மூலமே

தும்பிக்கையானே

கணபதியே மங்கலம்.

நர்த்தன மூர்த்தியே

கபில கணபதியே

அருள் நிறைந்த இறைவனே

கடன் நீக்கும் தெய்வமே

கணபதியே மங்கலம்.

சங்கடம் நீக்கும் ஐங்கரனே

இரண்டுருவம் கொண்டவனே

வெற்றி தரும் விநாயகனே

எங்கள் அதிபதியே

கணபதியே மங்கலம்.

சச்சிதானந்த மூர்த்தியே

மும்மலங்கள் இல்லா

பூரணனே முதல்வனே

உலகுக்குக் குருவே

கணபதியே மங்கலம்.

சாமுண்டிதேவியின்

மங்கலப் பிள்ளையே

யானை முகத்தவனே

குபேரனும் கைதொழும்

கணபதியே மங்கலம்!