பிரீமியம் ஸ்டோரி

கார்த்திகை மாதம் - ஐயப்பமார்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கும் இந்தப் புண்ணிய காலத்தில், தர்மசாஸ்தாவின் அவதாரக் கோலங் களை தியானித்து வணங்குவது விசேஷம். ஆதி சாஸ்தாவின் 8 அவதார மகிமைகள் இங்கே...

ஆதிசாஸ்தாவின் 
எட்டு அவதாரங்கள்!

கல்யாண வரத சாஸ்தா: கோயில்கள் சிலவற்றில் தன் தேவியருடன் காட்சி தரும் இந்த சாஸ்தாவை வழிபட்டால், செவ்வாய் தோஷம் மற்றும் தடைகள் விலகி விரைவில் திருமணம் கை கூடும்.

சம்மோஹன சாஸ்தா : நமது வீட்டையும் குடும்பத்தையும் காக்கும் தெய்வமான இவர், பூரணை- புஷ்கலை தேவியருடன் காட்சி தருவார். இல்லற வாழ்வை நல் அறங்களுடன் மலரச் செய்பவர்.

பிரம்ம சாஸ்தா: தன் பத்தினிகள் இருவருடன் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருபவர் பிரம்ம சாஸ்தா. தோஷங்கள் நீங்கி குழந்தைச் செல்வம் பெற இந்த பிரம்ம சாஸ்தாவை வழிபட வேண்டும்.

வேத சாஸ்தா: இவர், சிம்மத்தின் மீது தேவியருடன் அமர்ந்திருப்பார். வேதத்தை தழைக்கச் செய்பவர். சாஸ்திர அறிவை அருள்வ துடன், அதன்படி நம்மை வழிநடத்த வும் செய்யும் தெய்வமாக இவரைப் போற்றுவர்.

வீர சாஸ்தா: இவர், ருத்ர மூர்த்தியாக திகழ்பவர். ஆயுதம் ஏந்திய கரங்களுடன், குதிரையின் மீது அமர்ந்து, தீயவர்களை அழிக்கும் கோலத்தில் காட்சி தருவார். இவரை வணங்கினால், கேது தோஷங்கள் நீங்கும்.

ஞான சாஸ்தா: ஶ்ரீதட்சிணா மூர்த்தியைப் போன்று கையில் வீணை ஏந்தி, சீடர்கள் அருகில் இருக்க, கல்லால மரத்தின் கீழ் குரு பீடத்தில் அமர்ந்து, கல்வி அறிவை வழங்கும் கோலத் தில் அருள்பவர். வாக்குவன்மை தரும் தெய்வம்!

தர்ம சாஸ்தா: இவரே சபரியில் குக்குட ஆசனத்தில் அமர்ந்து சுவாமி ஐயப்பனாக அருள்புரிகிறார். கலியுக தெய்வமான சுவாமி ஐயப்பனை வழிபட, வாழ்வில் சகலவிதமான சுபிட்சங்களும் கைகூடும்.

மகா சாஸ்தா: இவர், நான்கு திருக்கரங்களுடன் யானை மீது அமர்ந்து காட்சி தருவார். இந்த மூர்த்தியை வழிபட்டால், ராகு தோஷங்கள் நீங்கும்; வாழ்வில் முன்னேற்றம் நிச்சயம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு