திருக்கதைகள்
Published:Updated:

சொக்கலிங்கம் உண்டே துணை!

vikatan
பிரீமியம் ஸ்டோரி
News
vikatan

- மதுமிதா -

ஒரு காலத்தில் இளஞ்சூரியர், முதுசூரியர் எனும் இரண்டு புலவர்கள் இருந்தார்கள். இரட்டைப் புலவர்கள் அவர்கள். ஒருவர், வெண்பாவின் முதல் இரு அடிகளைச் சொன்னால், மற்றவர் அதன் கடைசி இரண்டு அடிகளைச் சொல்லிப் பூர்த்தி செய்வார். அவர்களில் ஒருவர் கால் இல்லாதவர். மற்றவர், கண் இல்லாதவர்.

மதுரை
மதுரை
benedek

கால் இல்லாதவர், கண் இல்லாதவரின் தோளில் ஏறிக்கொண்டு வழிகாட்ட, கண் இல்லாதவர் அவர் சொன்ன வழியில் நடப்பார். இப்படியாக இவர்கள் ஒருமுறை வந்து சேர்ந்த இடம், மதுரை தெப்பக்குளம்.

கால் இல்லாதவரைப் படித்துறையில் இறக்கிவிட்டு, கண் இல்லாதவர் வேட்டியைத் துவைத்தார். வேட்டி கை நழுவி நீரில் மிதந்து சென்றுவிட்டது.

இதைப் பார்த்தவாறே அமர்ந்திருந்த கால் இல்லாதவர், ‘தண்ணீரில் மறுபடி மறுபடி அடித்துத் துவைத்தால், அந்தத் துணிக்கு உன்மேல் கோபம் வராதா? அதுதான் அது உன் கையை விட்டுத் தப்பிச் சென்றுவிட்டது!’ என்று வெண்பாவின் முதல் இரு அடிகளில் தகவலைச் சொன்னார்.

அதற்குக் கண் இல்லாதவர், ‘நாம் உடுத்தும் இந்தக் கலிங்கம் (கலிங்கம் என்ற சொல்லுக்கு உடை என்று பொருள்.) போனால் என்ன? நமக்கு நிரந்தரத் துணையாக மதுரைக் கோயிலில் சொக்க லிங்கம் உண்டு!’ என்று வெண்பாவின் கடைசி இரண்டு அடிகளைப் பூர்த்தி செய்தார்.

அந்தப் பாடல் இதுதான்...

அப்பிலே தோய்த்து அடுத்தடுத்து நீரதனைத்

தப்பினால் நம்மையது தப்பாதோ? எப்படியும்

இக்கலிங்கம் போனால் என் ஏகலிங்க மாமதுரைச்

சொக்கலிங்கம் உண்டே துணை!

இப்படியாக இந்த இரட்டைப் புலவர்கள் அருளிய பாடல்கள், இலக்கியப் பொக்கிஷங்களாகத் திகழ்கின்றன!