Published:Updated:

செல்வ வளம் அருளும் மகாலட்சுமி துதிப் பாடல்!

ஶ்ரீமகாலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீமகாலட்சுமி

ஆதிசங்கரர் அருளிய திருமகள் போற்றித் துதிகள் தொகுப்பு: சொல்லின் செல்வன் பி.என்.பரசுராமன்

செல்வ வளம் அருளும் மகாலட்சுமி துதிப் பாடல்!

ஆதிசங்கரர் அருளிய திருமகள் போற்றித் துதிகள் தொகுப்பு: சொல்லின் செல்வன் பி.என்.பரசுராமன்

Published:Updated:
ஶ்ரீமகாலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீமகாலட்சுமி

ஶ்ரீஆதிசங்கரர் இயற்றிய கனகதாரா ஸ்தோத்திரத்தை அடியொற்றி இயற்றப்பட்ட மகாலட்சுமி ஸ்தோத்திரம் இது. `தெய்வ துதிகளைப் பொருளுணர்ந்து பாடி வழிபடுவதால், அதீத பலன்கள் கிடைக்கும். அவ்வகையில் இந்த துதியை சிறிதளவும் பொருள் மாறாமல் பாடி வழிபடும் வண்ணமும், எளிதில் மனதில் பதியும் விதம் அகர வரிசைப்படியும் தமிழ்ப்படுத்திக் கொடுத்துள்ளோம்.

இதை உங்கள் பூஜையில் படித்து மனமுருகி வேண்டினால், செல்வவளம் பெருகும். சகல பொருளாதாரப் பிரச்னைகளும் நீங்கும். நம்பிக்கையோடு பாராயணம் செய்யுங்கள்; நல்லது நடக்கும்

செல்வ வளம் அருளும்
மகாலட்சுமி துதிப் பாடல்!

ஓம் அலைகடல் தோன்றிய

அன்னையே நமோ நம:

ஓம் அலைகடல் துயிலரி

அணியே நமோ நம:

ஓம் அல்லல்கள் தீர்

திருமகளே நமோ நம:

ஓம் ஆர் துணை எமக்கிங்கு

உனையன்றி நமோ நம:

ஓம் ஆதரித்து ஆள்வாய்

அன்னையே நமோ நம:

ஓம் இன்னல்கள் நீக்க

இரங்கு நமோ நம:

ஓம் இன்பங்கள் அருள்வாய்

எவர்க்கும் நமோ நம:

ஓம் ஈரேழ் உலகும்

நிறைவாய் நமோ நம:

ஓம் ஈரெண் செல்வம்

அருள்வாய் நமோ நம:

ஓம் உகந்தருள் புரிவாய்

உடனே நமோ நம:

ஓம் உவண ஊர்தியன்

துணையே நமோ நம:

ஓம் ஊட்டிடு நல்வினை

நீயே நமோ நம:

ஓம் ஊடுருவும் மிடி நீக்கு

திருவே நமோ நம:

ஓம் எமைக் காக்க

எங்கும் வருவாய் நமோ நம:

ஓம் எங்களைப் பார்த்தருள்

அன்னையே நமோ நம:

ஓம் ஏழுலகும் தொழும்

தேவி நமோ நம:

ஓம் ஏழ்மை தீர்த்தருள்

எமக்கு நமோ நம:

ஓம் ஐஸ்வர்யம் அருள்வாய்

வாழ்வே நமோ நம:

ஓம் ஐம்படை நாயகன்

மனமே நமோ நம:

ஓம் ஒழித்திடு வறுமையை

ஔியே நமோ நம: 20

ஓம் ஒன்றிட என் மனம்

அருள்செய் நமோ நம:

ஓம் ஓலிடும் எமக்கருள்

ஓசை நமோ நம:

ஓம் ஓதிமன் அன்னையே

வினைதீர் நமோ நம:

ஓம் ஔதாரியம் எமக்கருள்

எளிதாய் நமோ நம:

ஓம் ஔதசிய கடல்துயில்

துணையே நமோ நம:

ஓம் கருடன் மீதினில்

வருவாய் நமோ நம:

ஓம் கவலைகள் தீர்த்தருள்

கமலை நமோ நம:

ஓம் காகுத்தன் நாயகி

காப்பாய் நமோ நம:

ஓம் காடுகெழு செல்வி

உகந்தருள் நமோ நம:

ஓம் கிஞ்சுக வடிவே

கலை தா நமோ நம:

ஓம் கிஞ்சித்தேனும்

எமைப்பார் நமோ நம:

ஓம் கீதை தந்தவர்

வாழ்வே நமோ நம:

ஓம் கீழைநாள் தந்தருள்

கமலி நமோ நம:

ஓம் குறை தீர்த்து அருளும்

குமரி நமோ நம:

ஓம் கூப்பிட்ட உடன்வந்து

அருள்வாய் நமோ நம:

ஓம் கெஞ்சுகிறேன் உனை

கெழுதகை நமோ நம:

ஓம் கேசாதி பாதம்

துதித்தேன் நமோ நம:

செல்வ வளம் அருளும்
மகாலட்சுமி துதிப் பாடல்!

ஓம் கை தூக்கி எனையாள்

கற்பகமே நமோ நம:

ஓம் கொடுப்பார் உனையன்றி

வேறுயார் நமோ நம:

ஓம் கோடுதல் இன்றி கோடி

கொடுப்பாய் நமோ நம: 40

ஓம் சர்வ சக்தி நீயே

சரணம் நமோ நம:

ஓம் சாந்த ஸ்வரூபிணி

சரணம் நமோ நம:

ஓம் சிறியேனுக்கருள்

திரு மகளே நமோ நம:

ஓம் சீரங்கன் நாயகி

துணை நீ நமோ நம:

ஓம் சுகம் எமக்கருள்வாய்

சுந்தரி நமோ நம:

ஓம் சூரிணர் தொழும்

தெய்வ வடிவே நமோ நம:

ஓம் செங்கமல மலர்மீது

இருப்பாய் நமோ நம:

ஓம் சேவடி பணிந்தேன்

அருள்வாய் நமோ நம:

ஓம் சையத்திருக்கச் செய்

செயமாதே நமோ நம:

ஓம் சொல்லுக்கிரங்கும்

சக்தி திருவே நமோ நம:

ஓம் சோதனை வேண்டாம்

வெற்றித் திருவே நமோ நம:

ஓம் ஞத்துவம் எனக்கில்லை

அருள்வாய் நமோ நம:

ஓம் ஞாலம் படைத்தோன்

தாயே நமோ நம:

ஓம் ஞிமிறெனப் பாடிடும்

எமக்கருள் நமோ நம:

ஓம் தகை கொண்டு தொழும்

எமை தாங்கிடு நமோ நம:

ஓம் தாயுனை அன்றி

எமை காப்பபவர் யார் நமோநம:

ஓம் திருக்கண் சார்த்தி

எமைப் பார்ப்பாய் நமோ நம:

ஓம் திரைகடல் வாழ்திருவே

அருள்வாய் நமோ நம:

ஓம் தீபத்தில் வாழ்திரு

மகளே நமோ நம:

ஓம் துகைத்திடும் துன்பங்கள்

துகைப்பாய் நமோ நம: 60

ஓம் தூயவளே உனைப்

பணிந்தேன் நமோ நம:

ஓம் தெய்வமணி நீயெனவே

பணிந்தேன் நமோ நம:

ஓம் தேசுடை தேவி

பணிந்தேன் நமோ நம:

ஓம் தைனியன் எனக்கருள்

தாயே நமோ நம:

ஓம் தொழுதிடும் அடியரின்

உறுதுணை நமோ நம:

ஓம் தோமின்றி எமைக்காக்கும்

தேவி நமோ நம:

ஓம் நட்டாரும் நலம்பெறச்

செய் நத்தினேன் நமோ நம:

ஓம் நான்மறையோன்

துதிக்கும் நாரணி நமோ நம:

ஓம் நிகமங்கள் துதிக்கும் உனைப் பணிந்தேன் நமோ நம:

ஓம் பரிவுடன் பக்தர்க்கு

அருள்வாய் நமோ நம:

ஓம் பாதகங்கள் தீர்த்துப்

பகைநீக்கு நமோ நம:

ஓம் புவனங்கள் காக்கும்

புனிதையே நமோ நம:

ஓம் பூமிவாழ் மாந்தரெலாம்

நலம்பெற வை நமோ நம:

ஓம் மங்கையென செங்கமல

மலர்த்திருவே நமோ நம:

ஓம் மகிடனை மாய்த்த

திருமாதா நமோ நம:

ஓம் மாடெலாம் கேடின்றி

சேரச்செய் நமோ நம:

ஓம் மிடியெனும் துயர்தீர்த்து

ஆள்பவளே நமோ நம:

ஓம் யதிகளும் துதித்திருக்கும்

திருமகளே நமோ நம:

ஓம் யாமளை வடிவான

கோமளை நமோ நம:

ஓம் யுகளம் எனும் உன்

பதங்கள் பணிந்தேன் நமோநம: 80

ஓம் யோசனியே மாசிலா

மலர்த்திருவே நமோ நம:

ஓம் வழியறியா வறியேற்கு

வாழ்வருள் நமோ நம:

ஓம் வாகீஸ்வரி இருவர்

அருள் தா நமோ நம:

ஓம் விசனங்கள் விலக்கியருள்

விமலையே நமோ நம:

ஓம் வீறு உடை மன் பணியும்

வீரியே நமோ நம:

ஓம் வெறுக்கையை வெறுத்தவரும்

வேண்டும் தாய் நமோ நம:

ஓம் வேகப்புள் மேலமரும்

மால்துணையே நமோ நம:

ஓம் வைசிரவணன் பணியுமுனைப்

பணிந்தோம் யாம் நமோ நம:

ஓம் இதயமதில் உனை வைத்தேன்

இரங்கிடுவாய் நமோ நம:

ஓம் ஈடிலா எழில் திருவே

ஈகையருள் நமோ நம:

ஓம் உவண ஊர்தியனின்

உள்ளமே நமோ நம:

ஓம் ஊர்வதுவும் பறப்பதுவும்

உன்னருளே நமோ நம:

ஓம் மங்கலைசு மங்கலையே

மனம் கொள்வாய் நமோ நம:

ஓம் மாதவனின் மார்பிலுறை

மலர் முகமே நமோ நம:

ஓம் நீர் கொண்ட நீள் மலரில்

நிற்பவளே நமோ நம:

ஓம் யாருண்டு எமைக்காக்க

உனையன்றி நமோ நம:

ஓம் நோயிலா வாழ்வுதனை

நீ அருள்வாய் நமோ நம:

ஓம் பகையிலா வாழ்வுதனை

நீ அருள்வாய் நமோ நம:

ஓம் சகமெலாம் துதிக்குமுனை நான் துதித்தேன் நமோ நம:

ஓம் சங்கரியே உவந்துவந்து

அருளிடுவாய் நமோ நம: 100

தீபம் ஏற்றி வழிபடுவோம்!

தினமும் காலையிலும் மாலையிலும் சந்தியா காலத்தில் ஆலயத்திலோ வீட்டிலோ தீபங்கள் ஏற்றிவைத்து, இனிப்புப் பதார்த்தங்கள் (அல்லது கற்கண்டு) நைவேத்தியம் செய்து, இந்தத் துதியைப் பாடி வழிபடுவது மிகவும் விசேஷம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism