Published:Updated:

மகிமைமிகு மாசிமகம்!

மாசி தரிசனம்!
பிரீமியம் ஸ்டோரி
மாசி தரிசனம்!

மாசி மகம் - தலங்கள் தகவல்கள்!

மகிமைமிகு மாசிமகம்!

மாசி மகம் - தலங்கள் தகவல்கள்!

Published:Updated:
மாசி தரிசனம்!
பிரீமியம் ஸ்டோரி
மாசி தரிசனம்!

திருக்குடந்தை தரிசனம்!

புனித மிகு மாசியில் பல்வேறு தலங்களில் நீராட்டு விழாக்கள் நடைபெறுகின்றன. மாசியில் மகத்துவம் பெறும் தலங்களில் முதன்மையானது கும்பகோணம் கும்பேஸ்வரர் ஆலயம்.

மகிமைமிகு மாசிமகம்!

பிரளய காலம் நெருங்கியது. பிரளயத்துக்குப் பின்னர் மீண்டும் படைப்பைத் தொடங்கவேண்டுமே! சிவனாரின் ஆணைப்படி படைப்புக்கான பீஜங்களை அமிர்தக்குடத்தில் வைத்துப் பாதுகாத்தார் பிரம்மன்.

பிரளயம் வந்தது. அமிர்தக் குடம் வெள்ளத்தில் மிதந்தது. எம்பெருமான் வேடனாக வந்து குடத்தின் மூக்கை உடைக்க, குடத்தின் மூக்கிலிருந்து அமுதம் பரவியதால், அந்தத் தலம் திருக்குடமூக்கு என்று பெயர் பெற்றது.

கும்பம் உடைய அதன் கோணல் பகுதி சற்று தொலைவில் சென்று விழுந்தது, அங்கே ஒரு லிங்கம் தோன்றியது. அந்த லிங்கமூர்த்திக்கு கோணேசர் என்று பெயர். இதையொட்டியே இந்தத் தலத்துக்கு கும்பகோணம் என்றும் பெயராம்

சிருஷ்டி மீண்டும் தொடங்கியது. பிறகு, இந்தத் தலத்தில் அமிர்தம் ஊறிக்கிடந்த மண்ணே சுயம்பு லிங்கமாயிற்று; ஈசன் ஆதிகும்பேஸ்வரராக எழுந்தருளினார்.அமுதேசர் என்ற திருப்பெயரும் உண்டு.

அம்பிகையின் திருப்பெயர், மங்களாம்பிகை; இவள் மந்திரபீடத்தில் திகழ்வதால், மந்திரபீடேஸ்வரி என்றும் போற்றுவர். கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் நந்திதேவரும் அமிர்தத்தால் ஆனவர் என்பது ஐதீகம்.

மாசிமக தினத்தில் குடந்தை மகாமக தீர்த்தத்தில் நீராடுவதும் கும்பேஸ்வரரை தரிசிப்பதும் பெரும் புண்ணியம் ஆகும்.

மகிமைமிகு மாசிமகம்!

மாசிமகம் - தெய்வ வழிபாடுகள்!

புண்ணியம் மிகுந்த மாசி மாதத்தில் அதிகாலையில் எழுந்து குளித்தபின், துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால், வைகுண்டத்தில் இடம் கிடைக்கும் என்கின்றன ஞான நூல்கள்.

அதேபோல் இந்த மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தி விசேஷமானது. அன்று விரதம் கடைப்பிடித்து, விநாயகரை வழிபட, எல்லாவிதமான தோஷங்களும் சங்கடங்களும் விலகும்.

மாசிமகத்தன்று மந்திர உபதேசம் பெறுவது மிகமிகச் சிறந்தது. புதிதாக ஏதாவது படிக்க விரும்புகிறவர்கள், ஆராய்ச்சி செய்ய விரும்புகிறவர்கள் மாசிமகத்தன்று ஆரம்பித்தால் சிறந்து விளங்கலாம்.

மாசிமக நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு, எல்லையில்லா இன்பமும் வெற்றியும் தேடி வரும்.

மாசி மாதத்தின் சுக்ல பஞ்சமியில் சரஸ்வதிதேவியை மணமுள்ள மலர்களால் அலங்கரித்து வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்கலாம்.

மகிமைமிகு மாசிமகம்!

தேவேந்திரன் ஏற்றிய தீபம்!

தேவேந்திரன் மாசி மகம் நன்னாளில் துங்கபத்திரையில் நீராடி தூயகதி பெற்றான். சாபம் நீக்கி, பாபம் போக்கிய சிவபெருமானைப் போற்றி தீபம் ஏற்றினான் என ஸ்காந்த புராணம் எடுத்துரைக்கிறது.

ஒரு நாள் நாம் காணுகின்ற கும்பாபிஷேக வைபவம் எப்படிப் பன்னிரண்டு ஆண்டு தரிசனப் பலனை அளிக்குமோ அப்படி ‘மாசி மகத்தின் நீராடல்’ அறுபத்தாறுகோடி தீர்த்தங்களில் நீராடிய பலனை அளிக்கிறது. மாசி மகத்தில் நீராடி புறத்தூய்மை மட்டுமல்ல, அகத் தூய்மையும் பெற்று ஆனந்தம் பெறலாம்!

மாசி மகத்தில் முன்னோர்களுக்குரிய கடனைச் செலுத்தினால், அவர்களின் ஆசி நம் தலைமுறைக்குக் கிடைக்கும். மாசி மாதத்தில் உபநயனம் செய்விப்பதை ‘மாசிப் பூணூல் மணிப் பூணூல்’ எனப் பாராட்டுகிறார்கள்.

ஞானசம்பந்தர் போற்றும் மாசி நீராடல்!

மாசி மாதத்தை, கும்ப மாதம் என்று சிறப்பிப்பார்கள். இந்த மாதத்தில் புனித நீராடுவது சிறந்த பலன்களைப் பெற்றுத் தரும். மகா புராணம், மாக புராண அம்மானை ஆகியன மாசி நீராடலின் மகத்துவத்தை விவரிக்கின்றன!

மாசியில் மக நட்சத்திர ஈர்ப்பு காரணமாக காந்த சக்தி பூமியில் அதிகமாகி நீர்நிலைகளில் புதிய ஊற்றுக்கள் உண்டாகின்றன என்கிறது அறிவியல். மாசி மாதம் வரும் மக நட்சத்திரத்தில் கும்பகோணத்திலும், மற்ற ஊரின் கோயில் குளங்களிலும், புண்ணிய நதிகளிலும், சமுத்திரத்திலும் ஸ்நானம் செய்வதை இந்துமத புராணங்கள் சிறப்பாக எடுத்துரைக்கின்றன.

`மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டு கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்’

என ஞானசம்பந்தர் மாசி மகத்தைச் சிறப்பிக்கிறார்.