Published:Updated:

பஞ்சமுக தரிசனம்!

ஶ்ரீஅனுமன்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீஅனுமன்

அனுமன் வழிபாட்டு மகிமைகள் - கே.பாலு

பஞ்சமுக தரிசனம்!

அனுமன் வழிபாட்டு மகிமைகள் - கே.பாலு

Published:Updated:
ஶ்ரீஅனுமன்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீஅனுமன்

ஆஞ்சநேயரை வழிபட்டால் நம் சோகங்களும், துன்பங்களும் நீங்கும் என்பது முன்னோரின் வழிகாட்டல். தக்க தருணத்தில் சீதாதேவியின் திருமுன் தோன்றி ராமனின் வருகையை அறிவித்து, அன்னையின் சோகம் தவிர்த்தவர் அனுமன்; அதேபோல் கண்டேன் சீதையை எனச் சொல்லி ராமனின் துக்கம் தவிர்த்தவர். மட்டுமன்றி உரிய நேரத்தில் ராமனின் வருகையை அறிவித்து பரதனின் உயிரைக் காத்தவரும் ஆஞ்சநேயர் அல்லவா? ஆகவே, ராமநாம பாராயணம் செய்து வழிபட்டால், அனுமன் நம்மையும் காப்பார்.

பஞ்சமுக தரிசனம்!

னுமனுக்கு அனைத்து நாட்களும் விசேஷமானவையே! குறிப்பாக புதன், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் ஸ்ரீஅனுமனை வழிபடத் தொடங்குவது விசேஷம். மாதந்தோறும் அமாவாசை தினத்திலும், கேட்டை மற்றும் மூல நட்சத்திர நாளிலும் பூஜிக்கலாம். அதேபோல், ஶ்ரீராம நவமி திருநாளிலும், ஆஞ்சநேயரின் அவதார நன்னாளான... மார்கழி மாதம் மூலநட்சத்திரத்துடன் கூடிய அமாவாசையில் ஆஞ்சநேய வழிபாடு செய்வது மிகவும் விசேஷமானது!

அசுரன் ஒருவனை அழிக்க பஞ்ச முகத்துடன் காட்சி தந்தாராம் ஶ்ரீஆஞ்சநேயர். அனுமனின் அந்தத் திருமுகங்கள் ஒவ்வொன்றும் திவ்ய பலன்களை அளிப்பது.

அனுமன் முகம்: கிழக்கு நோக்கியது. பாவங்களைப் போக்கி, தூய சிந்தனையை தரும் இந்தத் திருமுகத்துக்கு வாழைப்பழமும் கடலையும் சமர்ப்பித்து வழிபடவேண்டும்.

நரசிம்ம முகம்: தெற்கு நோக்கியது. சத்ரு பயம் நீக்கி, வெற்றியைத் தரும். இந்த முகத்துக்குப் பானகமும் நீர்மோரும் நைவேத்தியம் செய்வது நலம்.

கருட முகம்: மேற்கு நோக்கியது. தீவினைகளையும் உடலில் உள்ள விஷத்தன்மையையும் அகற்றும். தேன் சமர்ப்பித்து வழிபடு வது சிறப்பு.

ஶ்ரீவராக முகம்: வடக்கு நோக்கியது. கிரகதோஷங்களை நீக்கி, ஐஸ்வரியம் அருளும். இவருக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத் தியம் செய்து வணங்கவேண்டும்.

ஶ்ரீஹயக்ரீவ முகம்: மேல்நோக்கிய இந்தத் திருமுகம் வாக்கு வன்மை, ஞானம், வெற்றி, நல்ல சந்ததி, முக்தி ஆகியவற்றை அருளும். அவல், சர்க்கரை, வெண்ணைய் நிவேதனம் செய்து வழிபடவேண்டும்.

‘பாதுகை’ காணிக்கை!

ந்திர மாநிலம் குண்டக்கல் அருகிலுள்ள காசாபுரம் கிராமத் தில், ஸ்ரீநெட்டிகண்டி ஆஞ்சநேய சுவாமி என்ற வித்தியாசமான திருப்பெயருடன், சுமார் 10 அடி உயரத்தில் அருள்கிறார் அனுமன்.

பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய இந்த அனுமன், தனக்குப் பாதுகைகள் செய்து வைக்குமாறு கூறினாராம். பக்தரும் ஒரு ஜோடி செருப்பு செய்து கோயிலில் வைத்தார். சில நாட்கள் கழித்துப் பார்த்தால், ஸ்ரீஆஞ்சநேயர் அந்தச் செருப்புகளை அணிந்துகொண்டு நடந்தது போன்று அடையாளம் தெரிந்ததாம்!

அதுமுதல், வருடம்தோறும் அனுமனுக்கு ஜோடி செருப்பு செய்து சமர்ப்பிப்பதை வழக்கமாக்கிக் கொண்டாராம் அந்த பக்தர். நாளடைவில் மற்ற பக்தர்களும், புதிய செருப்புகளை தலையில் சுமந்து வந்து நெட்டிகண்டி அனுமனுக்கு அர்ப்பணித்து வழிபட்டு வருகின்றனர். இதனால், இன்னல்கள் விலகி இனிய வாழ்வு கிட்டும் என நம்புகின்றனர்.

தொகுப்பு: கே.பாலு, சென்னை-33