Published:Updated:

புரட்டாசிக்கு என்ன சிறப்பு?

புரட்டாசி சிறப்பு
பிரீமியம் ஸ்டோரி
புரட்டாசி சிறப்பு

புரட்டாசி சிறப்பு

புரட்டாசிக்கு என்ன சிறப்பு?

புரட்டாசி சிறப்பு

Published:Updated:
புரட்டாசி சிறப்பு
பிரீமியம் ஸ்டோரி
புரட்டாசி சிறப்பு

? புரட்டாசி மாதத்துக்கு என்ன சிறப்பு?

`மாதங்களில் நான் மார்கழி’ என்பது பகவான் கிருஷ்ணரின் திருவாக்கு. அதேபோல், பகவான் மகாவிஷ்ணுவை ஆராதிப்பதற்கா கவே அமைந்த மற்றொரு மாதம் புரட்டாசி. இதைக் கன்யா மாதம் என்பார்கள். சூரியன் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குச் செல்வதை நாம் மாதப் பிறப்பு என்கிறோம். அவ்வகையில், சூரியன் கன்னி ராசியில் இருப்பது கன்யா மாதம் ஆகும்.

புரட்டாசி சிறப்பு
புரட்டாசி சிறப்பு


? இந்த மாதத்தில் பெருமாளை வழிபடுவது ஏன்?

புரட்டாசி என்றதுமே நம் நினைவுக்கு வருவது விஷ்ணு பகவானுக்கான ஆராதனைதான். சூரியன், எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ, அந்த ராசிக்குரிய தேவதைகளை வழிபடுவது நம் மரபு. ஒவ்வொரு ராசிக்கும் - மாதத்துக்கும் உரிய அதிதேவதையை - தெய்வங்களை நமது சமயம் சுட்டிக்காட்டுகிறது. குறிப்பிட்ட அந்தத் தேவதையை முறைப்படி வழிபடுவதால், நம் வாழ்வுக்குத் தேவையான வளங்களையும் மோக்ஷம் என்று சொல்லக்கூடிய உயர்ந்த பலனையும் ஒருசேர அடையலாம்.

அவ்வகையில், புத்திக்கு அதிபதியான புத பகவானின் மிதுனம், கன்னி எனும் இரு வீடுகளில்... புதன் உச்சம் அடைந்து இருக்கும் கன்னி ராசியில்... சூரியன் சஞ்சரிக்கும் புரட்டாசி மாதத்தில் அதிதேவதையான மகாவிஷ்ணுவை வழிபடுவது உயர்ந்த பலன் களைப் பெற்றுத் தரும்.

விஷ்ணு அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர். எமக்குள்ளும் உங்களுக்குள்ளும் அவர் இருக்கிறார். அனைத்து ஜீவராசிகளிலும் நிறைந்திருக்கிறார். அதனால், இந்த மாதத்தில் நாம் மஹாவிஷ்ணுவை வழிபாடு செய்வதால், அனைத்து ஜீவராசி களுக்கும் நன்மைகள் ஏற்படுகின்றன. இது, நம் இந்து மத வழிபாட்டின் சிறப்பு. தனியே ஒரு வழிபாட்டைச் செய்தாலும் அதன் பலன் அனைவருக்கும் சென்றடையும் விதம் அமைந்திருப்பது, நாம் செய்த புண்ணியமே!

? புரட்டாசியில் எப்படி ஆராதிக்கலாம்?

விஷ்ணுவை ஆராதிக்க அனுதினமும் அவரின் நாமாக்களைக் கூறியும், விரதங்கள் இருந்தும் வழிபடலாம். குறிப்பாக புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில்... ஏதேனும் ஒரு சனிக்கிழமையோ அல்லது அனைத்து வாரங்களிலுமோ விஷ்ணுவை வேங்கடாசலபதியாக வழிபாடு செய்வது, பழங்காலத்திலிருந்தே வரும் மரபு.

`வேங்கடாசலபதி’ என்றால், நம் கஷ்டங்களையும் பாவங்களையும் போக்கக்கூடிய இடத்துக்குத் தலைவன் என்று பொருள். வேங்கடாசலபதி என்று கூறியதுமே நம் கஷ்டங்களும் பாவங்களும் விலகி, நமக்குத் தூய்மையான ஒரு வாழ்க்கை ஏற்படும் என்கின்றன ஞான நூல்கள். அப்படியான உயர்ந்த பலன்களை - வேங்கடவனின் அருள்கடாட்சத்தை வீட்டில் உள்ள அனைவரும் பெறும் விதம், புரட்டாசியில் வேங்கடாசலபதி ஆராதனை திகழ்கிறது. ஆக, ஒவ்வொருவரும் அவரவர் வீட்டு வழக்கப்படி வழிபட்டு, வேங்கடாசலபதி மற்றும் மஹாலக்ஷ்மியின் திருவருளைப் பெற்று மகிழலாம்.

? புரட்டாசியில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய வேறு வழிபாடுகள் உண்டா?

புரட்டாசிக்கான சிறப்பம்சங்களில் மஹாளய புண்ய காலமும் ஒன்று. பாத்ரபத மாதத்தில், கிருஷ்ண பக்ஷம் அதாவது சூரியன் கன்னியா ராசியில் இருக்கக்கூடிய காலம் (தேய்பிறை பிரதமை முதல் வளர்பிறை பிரதமை வரையில் 16 நாள்கள்) `மஹாளய புண்ய காலம்’ எனப் போற்றப்படுகிறது.

இதையே ஆடி மாதம் பௌர்ணமி யிலிருந்து வரக்கூடிய 5-வது பக்ஷம் மஹாளய புண்ணிய காலம் என்று அறியலாம். இந்த பக்ஷம் ‘நைர்யோகிகீ’ திதி எனப்படுகிறது.

இந்த பக்ஷத்தில் செய்யும் ஹோமம், வழங்கப்படும் அன்னம் ஆகியவை அக்ஷயமான உயர்ந்த பலன்களைத் தரும் என்று சாஸ்திரம் போற்றுகிறது. முக்கியமாக நம் முன்னோர் இந்தக் காலத்தில் அன்னத்தையும் நீரையும் விரும்புகின்றனர். ஆகவே, இந்தப் புண்ணியக் காலத்தில் அவர்களைத் திருப்திப்படுத்துவது மிகவும் உயர்ந்த செயலாகும்.

தர்ப்பணம்
தர்ப்பணம்
Sudip Biswas


? மஹாளயத்தில் முன்னோரை வழிபடுவது எப்படி?

தேய்பிறை பிரதமை முதல் வளர்பிறை பிரதமை வரையிலும் 16 நாள்கள் தினமும் தொடர்ந்து செய்யப்படுவது பக்ஷ தர்ப்பணம் ஆகும். இதுபோன்று செய்ய இயலாதவர்கள், முன்னோர் திதி வரும் நாளன்று மட்டும் செய்வது வழக்கம் அல்லது முக்கியமான மஹாபரணி, மத்யாஷ்டமீ (கயா), த்ரயோதசி திதி (கஜச்சாயா) போன்ற காலங்களிலும் தர்ப்பணம் செய்து, நிறைவாக மஹாளய அமாவாசை அன்று பூர்த்தி செய்வது வழக்கம்.

தினமும் செய்பவர்கள் பார்வணம் என்று ஹோமம் மூலமாக செய்யலாம் அல்லது தர்ப்பணம் செய்து பிராமணர்களுக்கு அன்னம் அளிக்கலாம். வாழைக்காய், பயத்தம்பருப்பு, வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, தக்ஷிணை, காய்கறிகள் ஆகியவற்றை அளித்தும் அவர்களை நம் நம் முன்னோராகக் கருதி திருப்திப்படுத்தலாம். இவை அனைத்தையுமே அவரவர் சூழலைப் பொருத்து செய்யலாம் என்று சாஸ்திரங்கள் விதித்திருக்கின்றன.

எக்காரணம் கொண்டும் கடன் வாங்கியோ, சக்திக்கு மீறியோ செய்ய வேண்டாம்; அவரவர் சக்திக்கு ஏற்ற வகையில் முன்னோர் வழிபாட்டைச் செய்வது நலமாகும்.

மஹாளய புண்ய காலத்தில் திதி கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?

ப்ரதமை முதற்கொண்டு 15 நாள்களில் செய்யும் ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு பலனை சாஸ்திரங்கள் கூறுகின்றன.

ப்ரதமை - தனலாபம்.

த்விதீயை - மக்கட்பேறு.

த்ருதீயை - இஷ்டமான வரன்.

சதுர்த்தீ - சத்ரு தொல்லை விலகும்.

பஞ்சமி - சம்பத்தை அடைதல்.

ஷஷ்டி - புகழ்.

ஸப்தமி - தலைவனாகுதல்.

அஷ்டமி - சிறந்த புத்தியை அடைதல்.

நவமி-நல்லொழுக்கம் மிக்க பெண்களைப் பெறுதல்.

தசமி - திட்டங்கள் எல்லாவற்றையும் அடைதல்.

ஏகாதசி - வேதங்களை அறிதல்.

த்வாதசி் - ஸ்வர்ண லாபம்.

த்ரயோதசி - புத்தி, பசுக்கள், உடல் ஆரோக்கியம், சுதந்திரம், சிறந்த விருத்தி, தீர்க்கமான ஆயுள், ஐஸ்வர்யம் ஆகியவை கிடைக்கும்.

சதுர்த்தசி - யுத்தத்தால் மரணமடைந்தவர்களைத் திருப்தி செய்தல்.

அமாவாசை - அனைத்து நன்மைகளையும் பெறலாம்.

பராசக்தி
பராசக்தி

நம் முன்னோர் எப்பிறவி எடுத்திருந்தாலும் அவர்கள் நம்முடன் தொடர்புடையவர்களே. நாம் அன்புடன் அளிக்கும் எள், நீரால் திருப்தியடைந்து, கோபங்கள் ஏதும் இருப்பின் அவற்றை விலக்கி அருளாசி வழங்கிட காத்திருப்பார்கள். ஆகவே, இந்தப் புரட்டாசி மாதத்தில், இந்த மஹாளய பக்ஷ தர்ப்பணங்களை முடிந்த அளவு அனுசரித்து, முன்னோர்களைத் திருப்தி செய்து, நம் சந்ததி வாழ்வாங்கு வாழ பிரார்த்திப்போமாக.

? புரட்டாசியில் வரும் நவராத்திரியின் மகத்துவம் என்ன?

புரட்டாசி மாதத்தில் மஹாளய அமாவாசை முடிந்து அடுத்த நாள் பிரதமை முதல் வரும் ஒன்பது நாள்கள், `நவராத்திரி’ என்று போற்றக்கூடிய - அம்பாளுக்கு உகந்த திருநாள்கள் ஆகும். அன்னை பராசக்தி துர்கையாகவும், மஹாலக்ஷ்மீயாகவும், மஹா ஸரஸ்வதியாகவும் இருந்து நம்மை வழிநடத்துகிறாள்.

நாம் ஆரோக்கியமாக, தைரியமாக, செல்வம் நிறைந்தவர்களாக, புத்தி உள்ளவர்களாக இருக்கவேண்டும். இவற்றில் ஒன்று குறைந்தாலும் சிரமங்களை அனுபவிக்க வேண்டிவரும். இவற்றை அருளும் தேவியராக துர்கா - லக்ஷ்மீ - சரஸ்வதியாக... இந்த மூவரும் கூடிய சண்டிதேவியாக அம்பிகையை வழிபடும் அற்புதக் காலமே சாரதா நவராத்திரி புண்ணிய காலமாகும்.

உலகில் உள்ள அனைத்துப் பெண்களின் வடிவங்களாகவும் பராசக்தியே திகழ்கிறாள். ஆகவே, இந்த ஒன்பது தினங்களிலும் பெண்களை நம் வீட்டிற்கு அழைத்து, அவர்களுக்கு விருப்பமானவற்றை அளித்து திருப்தி செய்வதால் பராசக்தி மகிழ்வாள்.

மகத்துவமான பலன்களை அருளும் நவராத்திரியின் சிறப்பு, வழிபாட்டு நியதிகள் குறித்து அடுத்த இதழில் விரிவாகத் தெரிந்து கொள்வோம்.

- பதில்கள் தொடரும்...