சுதந்திரப் போராட்ட காலம். 1916-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் ஒருநாள்... லக்னோ நகரில் காங்கிரஸ் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. பாலகங்காதர திலகர், பண்டிட் மதன்மோகன் மாளவியா மற்றும் கபார்டே ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர்.

கவியோகி சுத்தானந்த பாரதி, பகவத் கீதையின் ஸ்லோகங்களைப் பொருளுடன் கூறி விளக்கிக்கொண்டிருந்தார். ஆனால், கூட்டத்தினரோ அவரின் பேச்சில் கவனம் செலுத்தாமல், தங்களுக்குள் உரக்கப் பேசிக் கொண்டிருந்தனர்.

உடனே, சுத்தானந்த பாரதி கூட்டத்தைப் பார்த்து உரத்த குரலில், ‘`இத்னா ஆவாஸ் ஸே ஸ்வராஜ் கபி நஹி மிலேகா!’’ என்றார். (‘இத்தகைய இரைச்சலினால் ஒருபோதும் சுயராஜ்ஜியத்தை பெற முடியாது’ என்பது பொருள்.)

அவர் அப்படிக் கூறியதும் கூட்டம் அமைதி யாயிற்று. இதைத் தொடர்ந்து தன்னருகில் வந்தமர்ந்த சுத்தானந்த பாரதியிடம், ‘`பிறகு, சுயராஜ்ஜியம் எவ்வாறு கிடைக்கும்?’’ எனக் கேட்டார் திலகர்.

‘`மகான்களின் ஆசியினால் கிட்டும்.’

‘`அப்படிப்பட்ட மகான் எங்கு இருக்கிறார்?’’

‘`ஷீர்டி ஸ்ரீசாயியே அந்த மகான்!’’

சுத்தானந்த பாரதியின் இந்தக் கருத்தை உடன் அமர்ந்திருந்த கபார்டேயும் ஆமோதித்தார்.அனைவரும் ஷீர்டிக்குப் புறப்பட்டனர்.

ஷீர்டி... காலை வேளையில், தான் வழக்கமாக அமரும் வேப்ப மரத்தடியில் வீற்றிருந்தார் சாயி.

அனைவரும் சென்று அவர் முன் பவ்யமாக அமர்ந்தனர். அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சாயி, ‘`இத்னா ஆவாஸ் ஸே ஸ்வராஜ் கபி நஹி மிலேகா!” என்றார்.

லக்னோ கூட்டத்தில் கவியோகி சுத்தானந்த பாரதி சொன்ன அதே வார்த்தைகள்!

பாபாவிடம் திலகர் கேட்டார், ‘`சுயராஜ்யம் எப்படிக் கிடைக்கும்?’’ என்று.

அவரைப் பரிவுடன் ஏறிட்ட பாபா புன் முறுவலுடன் பதிலளித்தார். ``கவலைப்படாதே. அதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதன் விரைவில் வருவான். அதுவரை நீ அமைதியாக இரு’’ என்றார்.

பிறகு பாபா, ‘`இறைவன் உதவி செய்வான். தேச நலனுக்காக அர்ப்பணித்துக் கொள்ளுங்கள். சோதனைகளை ஏற்றுக்கொள்ளுங்கள். தியாகம் ஒருபோதும் வீணாவதில்லை. இறைவன் தன் இஷ்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும்படி விட்டுவிட்டு, மௌனமாக எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருங்கள்’’ என்றார்.

பாபா அருளியது போலவே அனைத்தும் நிகழ்ந்தது. பிற்காலத்தில், சுதந்திரப் போராட்டத்துக்குத் தலைமை ஏற்றார் மகாத்மா காந்தி. இந்திய திருநாடும் சுதந்திரம் பெற்றது.

- சாவித்ரி, சென்னை - 14