Published:Updated:

பாபா நமக்குப் பாதுகாப்பு

பாபா அனுபவம்
பிரீமியம் ஸ்டோரி
பாபா அனுபவம்

பாபா அனுபவம்

பாபா நமக்குப் பாதுகாப்பு

பாபா அனுபவம்

Published:Updated:
பாபா அனுபவம்
பிரீமியம் ஸ்டோரி
பாபா அனுபவம்

சாயிபாபா நம் குடும்பத்துக்குப் பாதுகாப்பு. அவரை விடாது பிடித்துக்கொண்டால் வாழ்வில் கஷ்டமே வாராது.

சாயிபாபா
சாயிபாபா

சில ஆண்டுகளுக்கு முன்பு என் நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது அவர் வீடு சுத்தம் செய்யும் பணியில் இருந்தார். அப்போது ஒரு மூலையில் சாயிபாபாவின் திருவுருவச் சிலையும், ஒரு படமும் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தேன்.

நண்பரிடம், ``என்னப்பா... எப்பேர்பட்ட மகான்... அவரின் படத்தை இப்படிப் போட்டுவைத்துள்ளாயே?'' என்று கேட்டேன். அதற்கு அவன் அலட்சியமாக, ``நீ வேண்டுமானால் உன் வீட்டில் வைத்துக்கொள். எனக்குத் தேவையில்லை'' என்று சொன்னான்.

`சரி, பாபாவின் மகிமை தெரியாமல் பேசுகிறான்' என்று எண்ணிக்கொண்டேன். உடனடியாக பாபாவின் சிலையையும் படத்தையும் எடுத்து வந்து என் வீட்டுப் பூஜை அறையில் வைத்து தினமும் பூஜிக்க ஆரம்பித்தேன்.என் மனத்தில் இருந்த கவலைகள் நீங்கின. தொட்ட காரியங்கள் வெற்றியடையத் தொடங்கின. அப்போதுதான் யோசித்தேன்... இதெல்லாம் பாபா வந்த நேரம்தான் என்று புரிந்தது.

அதேவேளை, நண்பனின் நிலைமை மிகவும் கவலைக்குள்ளானது. தொழிலில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டது. பணக் கஷ்டம், மனக் கஷ்டம் என்று திண்டாடிக் கொண்டிருந்தான். ஒருநாள் அவன் கஷ்டங்களை என்னிடம் கூறினான். அப்போது அவனிடம் பொறுமையாகச் சொன்னேன்... ``இவ்வளவு கஷ்டத்திற்கும் காரணம் என்ன தெரியுமா... பாபாவின் மகிமையை அறியாமல் அவரின் சிலையையும் படத்தையும் நீ அலட்சியப்படுத்தியதுதான்'' என்றேன்.

அவன் தன் தவற்றுக்காக வருந்தினான். நான் அவனைச் சமாதானம் செய்து, ``உன்னிடமிருந்து எடுத்துச் சென்ற சிலையையும் படத்தையும் இனி நான் உனக்குத் தரப்போவதில்லை. நீ புதிதாக ஒரு படம் வாங்கி வந்து, தினமும் பூஜை செய். பிறகு பார்...'' என்று கூறினேன்.

அன்றே ஒரு பாபா சிலையையும் புகைப்படத்தையும் வாங்கி வந்த நண்பன், தினமும் வழிபட ஆரம்பித்தான். அதன்பின் நடந்தவை எல்லாம் ஆச்சர்யம். கைவிட்டுப் போன சொத்துக்கள் மீண்டும் வந்தன. மனக்கஷ்டங்கள் தீர்ந்தன. பணக் கஷ்டங்களும் தீர்ந்தன. இப்போது பாபாவின் மகிமையை மற்றவர்களுக்கும் எடுத்துரைக்க ஆரம்பித்துவிட்டான். சாயி நம் குடும்பத்துக்குப் பாதுகாப்பு. அவரை விடாது பிடித்துக்கொண்டால் வாழ்வில் கஷ்டமே வாராது.

- பொ.பாலாஜிகணேஷ்