Published:Updated:

வாழ்க்கை முழுவதும் துணை வரும் ஶ்ரீசாயி!

ஶ்ரீசாயிபாபா
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீசாயிபாபா

ஆர்.புவனேஸ்வரி, மூலத்தோப்பு

வாழ்க்கை முழுவதும் துணை வரும் ஶ்ரீசாயி!

ஆர்.புவனேஸ்வரி, மூலத்தோப்பு

Published:Updated:
ஶ்ரீசாயிபாபா
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீசாயிபாபா

ஶ்ரீசாயி பக்தை நான். மிகவும் சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவள். என்னை எப்போதும் சாயியே வழிநடத்துகிறார் என்ற நம்பிக்கை உள்ளவள். நான் சமையல் வேலைக்குச் செல்பவள். கரூரில் இருக்கும் பாபா கோயில் ஒன்றில் அன்ன தானம் செய்வேன். கைங்கர்யமாகத்தான் செய்வேன். காரணம் சாயியின் மீது எனக்கு இருந்த ஈடுபாடே காரணம்.

வாழ்க்கை முழுவதும் துணை வரும் ஶ்ரீசாயி!

ன் கணவர் பிரிண்டிங் லைனில் வேலை பார்த்து வந்தார். கடினமாக உழைப்பார். ஒரு நாள் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. நரம்பு பாதிக்கப்பட்டு கழுத்து வலியும் கை வலியும் ஏற்பட்டன. டாக்டரைத் தொடர்புகொண்டு செக் செய்தபோது, அவருக்கு மூளையில் சிறிது பாதிப்பு இருப்பதாகவும் சரிசெய்ய இரண்டு லட்சம்வரை செலவாகும் என்றும் தெரிவித்தார். அப்படிச் செய்யாவிடில் அவருக்கு ஒரு பக்கம் செயலிழந்துவிடும் அபாயம் இருப்பதாகவும் சொன்னார். இரண்டு லட்சத்துக்கு நாங்கள் எங்கு செல்வோம்? மிகவும் சோர்ந்துபோனோம்.

சாயியையே கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அவரிடமே என் பிரச்னைகளை இறக்கிவைத்தேன். என் வேண்டுதல் பலித்தது. டாக்டர் குறிப்பிட்ட சிகிச்சை இல்லாமலேயே என் கணவர் குணமானார். இது எளிமையான மருந்துகள் மூலம்கூட நிகழ்ந்திருக்க லாம். ஆனால் சாயியே அதைச் செய்தார் என்று நானும் என் குடும்பமும் உறுதியாக நம்புகிறோம். இன்றும் என் கணவர் ஆரோக்கியமாக இருக்கிறார். அதற்கு சாயியின் கருணையே காரணம்.

என் மகனுக்கும் தீய பழக்கங்கள் இருந்தன. அவனுக்காக தினமும் சாயி சத்சரிதம் வாசித்து வந்தேன். அதைப் படிக்கப் படிக்க அவன் மனம் மாறி நல்ல பழக்கங்களைக் கடைப்பிடிக்க ஆரம்பித்து இன்று பக்திமானாக இருக்கிறான். அதேபோல், என் மகளின் திருமண விஷயத்திலும் சாயியே துணை புரிந்தார். சேமிப்பு ஏதும் இல்லாமல் எப்படித் திருமணம் செய்யப்போகிறோம் என்று வருத்தத்தில் இருந் தோம். ஆனால் சாயியின் அருளால் உறவினர்கள் ஒவ்வொரு வரும் ஒரு செலவை ஏற்றுக்கொள்ள அவள் திருமணம் நல்லபடியாக முடிந்து சாயியின் அருளால் நல்ல குழந்தை யும் பிறந்தது. இப்படி எங்கள் வாழ்க்கை முழுவதுமே துணையிருந்து கூடவே வந்து சாயி எங்களை ஆசீர்வதிக்கிறார் என்று சொன்னால் அது மிகையில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism