Published:Updated:

பெருமாளின் முகம் காண நாணி, சங்கைப் பார்த்தே பாடிய ஆண்டாள்; மார்கழியும் திருப்பாவையும்!

திருப்பாவை

மார்கழியும் திருப்பாவையும்: பூஜை தொடங்கும் முன் அசரீதி "எங்கே அவள் சூடிய மாலை? இனி நான் அவள் சூடிய மாலையை தான் அணிவேன்" என ஒலிக்கிறது.

பெருமாளின் முகம் காண நாணி, சங்கைப் பார்த்தே பாடிய ஆண்டாள்; மார்கழியும் திருப்பாவையும்!

மார்கழியும் திருப்பாவையும்: பூஜை தொடங்கும் முன் அசரீதி "எங்கே அவள் சூடிய மாலை? இனி நான் அவள் சூடிய மாலையை தான் அணிவேன்" என ஒலிக்கிறது.

Published:Updated:
திருப்பாவை
மார்கழி திங்கள் என்றாலே நம் அனைவர் மனதிலும் உதிப்பது கண்ணனை துதிக்கும் பாடல்கள், கோலங்கள், காலையில் நீராடி மகிழ கிடைக்கும் வாய்ப்பு எல்லாமே தான். அதில் நாம் அனைவரும் விரும்பி பாடக்கூடியது திருப்பாவை, திருவெம்பாவை தான். கண்ணனை மையமாக வைத்து ஆண்டாள் எழுதியதே திருப்பாவை.
திருப்பாவை
திருப்பாவை

இந்த மார்கழி மாதத்தில் கண்ணனையே தன் மணாளனாக நினைத்து நினைத்து உருகிய ஆண்டாள் எழுதிய திருப்பாவை பாடுவது சிறந்தது.

ஆண்டாளின் சிறப்புகள்:

ஒரு நாள் பாண்டிய நாட்டின் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரியாழ்வார் வீட்டின் தோட்டத்தில் திடீர் என்று ஒரு குழந்தை அழுகுரல் கேட்கிறது. அதை காண சென்ற அவருக்கு அசரீதி, "இந்த குழந்தையை எடுத்து பாராட்டி சீராட்டி மகளாய் பாவித்து வளருங்கள்" என்று ஒலிக்கிறது. அதை அப்படியே பின்பற்றி பெரியாழவார் குழந்தையை பக்தி மேலோங்க வளர்க்கிறார்.

இந்த குழந்தைக்கு சிறு வயதிலேயே கண்ணன் மீது ஆசை வளர்கிறது. கண்ணனை தன் மணாளனாகவே பாவிக்கிறாள். அவனுக்காக ஆயர்பாடியில் உள்ள கோபியர்கள் போல் தனது கூந்தலை ஒரு பக்கமாக கொண்டை போட்டுக் கொள்கிறாள். தான் இருக்கும் இடத்தை ஆயர்பாடி மாளிகை என்று நினைக்கிறாள். தன் தோழிமார் எல்லாரும் கோபியர்கள் என பாவித்துக் கொள்கிறாள். வடபத்ரசாயீ சுவாமியையே கண்ணனாய் பாவித்து காதல் புரிகிறாள். ஆயர்பாடியில் பெண்கள் மார்கழி மாதம் பாவை நோன்பு நோற்பார்கள். ஆண்டாளும் அதை பின்பற்றி தன் தோழிகளோடு காத்யாயினி தேவியை வணங்கி கண்ணன் தன் அமைய வேண்டும் என வேண்டுகிறாள்.

திருப்பாவை
திருப்பாவை

ஆண்டாள் தன்னுடைய சிறு வயதிலேயே திருப்பாவை முப்பது பாசுரங்களையும் நாச்சியார் திருமொழியில் நூற்று நாற்பத்து மூன்று பாசுரங்களையும் இயற்றியுள்ளார்.

"கோல் தேடி ஓடும் கொழுந்தே போன்றதே மால் தேடி ஓடும்மனம்" என்று நம்மாழ்வார் சொல்வது போல அந்த சிறிய வயதிலேயே அழகான பாடல்களை தன் ஆழ்ந்த அன்பினால் படைத்தவள் ஆண்டாள்.

"மானிட வர்க்கென்று பேச்சுப்படில் வாழகில் லேன்கண்டாய் மன்மதனே" இந்த அழகிய வரிகள் அந்த பச்சிளம் வயதில் அழகாய் வந்ததே அவளுக்கு. என்னே அழகு?

திருப்பாவை
திருப்பாவை

ஆண்டாள் என்ற பெயர் ஏன்?

இதற்கு ஒரு கதை இருக்கிறது. பெரியாழ்வார் வடபத்ரசாயீ சுவாமிக்கு வழக்கம் போல் பூஜைக்காக மாலை எடுத்து வைத்திருக்கிறார். இந்த ஆண்டாள் அதை காண்கிறாள். "என் மணாளன் என்றால் அவரில் பாதி நான் தானே அப்படி என்றால் அவர் சூட்டிக்கொள்ள போகும் மாலை எனக்கும் சரியாக இருக்க வேண்டுமே" என நினைத்து அந்த மாலையை அணிந்து கொள்கிறாள். அதை பார்த்த பெரியாழ்வார் கோபம் கொண்டு "சுவாமிக்கு என்று வைத்திருந்த மாலையை நீ எடுத்து அணிந்து கொண்டு விட்டாயே இப்படி அனர்த்தம் செய்து விட்டாயே" என திட்டிவிட்டு மாலையே இல்லாமல் பூஜைக்கு செல்கிறார்.

பூஜை தொடங்கும் முன் அசரீதி "எங்கே அவள் சூடிய மாலை? இனி நான் அவள் சூடிய மாலையை தான் அணிவேன்" என ஒலிக்கிறது. "இந்த குழந்தை ஏதோ விளையாட்டாய் அன்பு செலுத்துகிறாள் என்று பயந்தோம். ஆனால் கடவுளே அதை ஏற்றுக் கொண்டாரே! அம்மா, நீ என்னை மட்டும் ஆளவில்லை மா அந்த கடவுளையும் சேர்த்து ஆட்கொண்டுவிட்டாயே! "என வணங்கி கொள்கிறார்.

கண்ணன் தன் அன்பை புரிந்து கொள்ள வேண்டி மன்மதனிடம் கோரிக்கை விடுக்கிறாள் ஆண்டாள். அதுவே நாச்சியார் திருமொழியில் இருக்கும் பாடல்கள். முதல் பாடலிலேயே "என்னை என் கண்ணனிடம் சேர்ப்பாயா" என வேண்டுகோள் விடுகிறாள்.

தினம் ஒரு திருப்பாவை
தினம் ஒரு திருப்பாவை

"தையொரு திங்களும் தரைவிளக்கித் தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்,

ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து அழகினுக் கலங்கரித் தனங்கதேவா,

உய்யவு மாங்கொலோ வென்றுசொல்லி உன்னையு மும்பியை யும்தொழுதேன்,

வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே"

திருப்பாவை பற்றி சுவாரஸ்யமான செய்தி என்னவென்றால், ஸ்ரீவில்லிப்புத்தூரில் எழுந்தருளி இருந்த வடபத்ரசாயி பெருமாளின் சந்நிதிக்குச் சென்று, அவருடைய அழகிய முகத்தைப் பார்க்க வெட்கப்பட்டு, பெருமாளின் கையில் இருந்த பாஞ்சஜன்யம் என்னும் திருச்சங்கைப் பார்த்து ஆண்டாள் பாடியதே திருப்பாவை பாடல்கள். 'மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்...' எனத் துவங்கி 'வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை...' என முடியும் 30 பாடல்கள் பாடி ஆண்டாள் திருமாலையும் தமிழையும் சிறப்புற ஆண்டாள்.

ஸ்ரீசூக்த ஹோமம்
ஸ்ரீசூக்த ஹோமம்

திண்டிவனம், நல்லியக்கோடன் நகர் ஸ்ரீஅலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் (1-1-2023) புத்தாண்டு நாளில், வைகுண்ட ஏகாதசிக்கு முந்திய புண்ணிய வேளையில், ஞாயிற்றுக் கிழமை வளர்பிறை தசமி நாளில் அசுவினி நட்சத்திர வேளையில், காலை 10 மணி முதல் 12 மணி வரையில் ஸ்ரீசூக்த ஹோமம் நடைபெற உள்ளது. ஸ்ரீசூக்த ஹோமத்தை நடத்தினாலோ அதில் கலந்து கொண்டாலோ அவர்கள் விருப்பங்கள் யாவும் நிறைவேறும்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.