Published:Updated:

சஞ்சலம் தீர்க்கும் ஶ்ரீசரபாஷ்டகம்!

ஶ்ரீசரபர்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீசரபர்

அபூர்வ பலன்கள் அருளும் ஶ்ரீசரபர் துதிப்பாடல் தொகுப்பு: பி.என்.பரசுராமன்

சஞ்சலம் தீர்க்கும் ஶ்ரீசரபாஷ்டகம்!

அபூர்வ பலன்கள் அருளும் ஶ்ரீசரபர் துதிப்பாடல் தொகுப்பு: பி.என்.பரசுராமன்

Published:Updated:
ஶ்ரீசரபர்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீசரபர்

சர்வ வல்லமை மிகுந்த துதிப்பாடல் இது. தினமும் இந்தப் பாடலைப் பாடி சரப மூர்த்தி யை வழிபடும் அன்பர்களுக்குச் சகல நன்மை களும் உண்டாகும். கடன் தொல்லை, பிணிக ளால் ஏற்படும் பிரச்னைகள், பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள், தீவினைகள் ஆகியவை விலகும்.

சஞ்சலம் தீர்க்கும் ஶ்ரீசரபாஷ்டகம்!

காக்கும் தெய்வம் ஶ்ரீசரபேஸ்வரர்!

ஶ்ரீசரபேஸ்வரர் - நாம் பெரும் கஷ்டங்களில் இருந்து நிவர்த்தி பெற வழிபடவேண்டிய தெய்வம். பக்த பிரகலாதனைக் காக்க ஶ்ரீமந் நாராயணன் நரசிம்மமாய் அவதரித்து இரண்யகசிபுவை அழித்த திருக்கதை நாமறிந்ததே.

அவ்வாறு அசுரனை அழித்தும் ஶ்ரீநரசிம்மரின் ஆக்ரோஷம் தணியவில்லையாம். இதனால் அஞ்சிய தேவர்கள் சிவனாரைச் சரணடைந்தனர். அவர்களுக்கு அருள திருவுளம் கொண்டு, நரசிம்மத்தின் கோபம் தணிக்க சிவபெருமான் எடுத்த திருக்கோலமே ஶ்ரீசரபேஸ்வர மூர்த்தம்.

ஶ்ரீதத்வ நிதி எனும் நூல் ‘32 திருக்கரங்களுடன் திகழும் சரபத்தின் ஒரு திருக்கரம் துர்கையை அணைத்தவாறு இருக்கும்’ என்று விளக்குகிறது.

பிரத்யங்கிரா எனும் காளியும், சூலினி துர்கையும் சரபரின் இறக்கைகளாகவும், இவரின் இதயத்தில் பைரவரும், வயிற்றில் வடவாக்னியும், தலையில் கங்கையும் திகழ்வதாக பிரமாண்ட புராணம் சொல்கிறது. ஶ்ரீசரப மூர்த்தியின் சக்தி அரிப்ரணாசினி.

கும்பகோணம் அருகிலுள்ள துக்காச்சி எனும் ஊரில் அமைந்திருக்கும் ஶ்ரீஆபத்சகாயேஸ்வரர் ஆலயம், தாராசுரம் ஶ்ரீஐராவதீஸ்வரர் ஆலயம், திரிபுவனம் ஶ்ரீகம்பகரேஸ்வரர் ஆலயம், திருவண்ணாமலை, சென்னையில் குரோம் பேட்டை குமரன் குன்றம் கோயில், சோழிங்க நல்லூர் பிரத்யங்கிரா கோயில், திருமயிலை வெள்ளீஸ்வரர் கோயில், கோயம்பேடு குசலவ புரீஸ்வரர் ஆலயம், திரிசூலம் ஆகிய தலங்களில் ஶ்ரீசரபேஸ்வரரைத் தரிசிக்கலாம்.

வீடுகளில் தினமும் ஶ்ரீசரபரைத் தியானித்து, வல்லமை மிகுந்த ஶ்ரீசரபாஷ்டகத்தைப் பாராய ணம் செய்து வழிபட்டு பலன் பெறலாம்.

சஞ்சலம் தீர்க்கும் ஶ்ரீசரபாஷ்டகம்!

ஶ்ரீசரபாஷ்டகம்

1 தேவாதிதேவாய ஜகன்மயாய

சிவாய நாலீகனிபானனாய

சர்வாய பீமாய ஸராதிபாய

நமோஸ்து துப்யம் சரபேச்வராய

கருத்து: தேவர்களுக்கெல்லாம் ஆதி தெய்வமும், உலகத்தின் உருவாக இருப்பவரும், பரமசிவனும், தாமரை போன்ற முகம் உள்ளவரும், சர்வனும் பயங்கரனும், ஜீவர்களுக்கு அதிபருமான சரபப் பறவையின் திருவுருவம் கொண்ட சரபமூர்த்தியை வணங்குகிறேன்.

2 சீதாம்சுசூடாய திகம்பராய

ஸ்ருஷ்டிஸ்திதித்வம் ஸனகாரணாய

ஜடாகலாபாய ஜிதேந்த்ரியாய

நமோஸ்து துப்யம் சரபேச்வராய

கருத்து: சந்திரனை திருமுடியில் சூடிய வரும், திசைகளையே ஆடையாகக் கொண்டவரும், சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் ஆகியவற்றுக்குக் காரணமாக இருப்பவரும், ஜடையைத் தரித்தவரும் இந்திரியங்களை வென்றவருமான சரப மூர்த்தியை வணங்குகிறேன்.

3 கலங்ககண்டாய பவாந்தகாய

கபாலசுலாங்க கராம்புஜாய

புஜங்கபூஷாய புராந்தகாய

நமோஸ்து துப்யம் சரபேச்வராய

கருத்து: நீலகண்டரும் ஜனன-மரண பயத்தைப் போக்குபவரும், கபாலம் - சூலம் ஆகியவற்றை அடையாளமாகக் கொண்ட திருக்கரங்களை உடையவரும், நாகங்களை ஆபரணமாக ஏற்றவரும், திரிபுர அசுரர்களை வதைத்தவரும் சரபப் பறவையின் உருவைக் கொண்டவருமான சரப மூர்த்தியை வணங்குகிறேன்.

4 சமாதிஷட்காய யமாந்தகாய

யமாதியோகாஷ்டக ஸித்திதாய

உமாதிநாதாய புராதனாய

நமோஸ்து துப்யம் சரபேச்வராய

கருத்து: சமம், தமம் முதலான ஆறுவித மனோ நிக்ரஹத்தை உடையவரும், காலகாலனும், அஷ்டாங்க யோகங்களுக்கான பலனை அளிப்பவரும், பார்வதிக்குப் பிரியமானவரும், எப்போது புதியோனாகத் திகழ்பவரும், சரபப் பறவையின் தோற்றம் கொண்டவருமான சரப மூர்த்தியை வணங்குகிறேன்.

5 க்ருணாதிபாசாஷ்டக வர்ஜிதாய

கிலீக்ருதாஸ்மத்பதி பூர்வகாய

குணாதிஹீனாய குணத்ரயாய

நமோஸ்து துப்யம் சரபேச்வராய

கருத்து:வெறுப்பு முதலான எட்டு தோஷங்கள் இல்லாதவரும், அன்பர்களாகிய நம்முடைய பகைவர்களை விரட்டுபவரும், நிர்குணரும், சத்வம் முதலான குணங்களாக இருப்பவரும், சரபப் பறவையின் தோற்றம் கொண்டவருமான சரப மூர்த்தியை வணங்குகிறேன்.

6 காலாதி வேதாம்ருத கந்தலாய

கல்யாணகௌதூஹல காரணாய

ஸ்தூலாய ஸூக்ஷ்மாய ஸ்வரூபகாய

நமோஸ்து துப்யம் சரபேச்வராய

கருத்து: காலத்துக்கு அப்பாற்பட்டவரும் வேதத்தில் கூறப்பட்டுள்ள மோட்சத்தின் தளிராக இருப்பவரும், மங்கலத்துக்கும் ஆனந்தத்துக்கும் காரணமானவரும், ஸ்தூல சூட்சும உருவாய் திகழ்பவரும், சரபப் பறவையின் தோற்றம் கொண்டவருமான ஶ்ரீசரப மூர்த்தியை வணங்குகிறேன்.

7 பஞ்சான னாயாகில பாஸ்கராய

பஞ்சாசதேகர்ண பராசராய

பஞ்சாக்ஷரேசாய ஜகத்திதாய

நமோஸ்து துப்யம் சரபேச்வராய

கருத்து: ஐந்து முகங்கள் கொண்டவரும், யாவற்றையும் ஒளிரவைப்பவரும், 51 அட்சரங்களாகிய மாத்ருகா வர்ணங்களுக்கு ஜீவகலையாக இருப்பவரும், பஞ்சாட்சர மந்திரத்தின் பொருளானவரும் உலகுக்கு நன்மையைச் செய்பவருமான ஶ்ரீசரப மூர்த்தியை வணங்குகிறேன்.

8 ஹராய பீமாய ஹரிப்ரியாய

பவாய சாந்தாய பராத்பராய

ம்ருடாய ருத்ராய த்ரிலோசனாய

நமோஸ்து துப்யம் சரபேச்வராய

கருத்து: துக்கத்தைப் போக்குகிறவரும், பாவிகளுக்குப் பயங்கரமானவரும் விஷ்ணுவிடம் அன்பு கொண்டவரும், மங்கல ரூபியும், சாந்தரும், உலகத்தைக் காட்டிலும் வேறுபட்டவரும், சுக ரூபியும், துக்கத்தைப் போக்குபவரும், முக்கண்ணனுமாகிய ஶ்ரீசரப மூர்த்தியை வணங்குகிறேன்.