Published:Updated:

`வாழ்க்கை செழிக்க அருள்வாக்கு தருவார் சிறுமளஞ்சி ஒற்றைப்பனை ஶ்ரீசுடலையாண்டவர்!!'

ஒற்றைப்பனை ஶ்ரீசுடலைஆண்டவர்
பிரீமியம் ஸ்டோரி
ஒற்றைப்பனை ஶ்ரீசுடலைஆண்டவர்

``உள்ளன்போடு உள்ளம் உருக வழிபடும் அன்பர் களுக்கு உயர்வான வாழ்வு தரும் சாமி எங்கள் சுடலை ஆண்டவர்’’ என்று நெக்குருகிப் பேசுகிறார்கள் இந்த வட்டாரத்து மக்கள்!

`வாழ்க்கை செழிக்க அருள்வாக்கு தருவார் சிறுமளஞ்சி ஒற்றைப்பனை ஶ்ரீசுடலையாண்டவர்!!'

``உள்ளன்போடு உள்ளம் உருக வழிபடும் அன்பர் களுக்கு உயர்வான வாழ்வு தரும் சாமி எங்கள் சுடலை ஆண்டவர்’’ என்று நெக்குருகிப் பேசுகிறார்கள் இந்த வட்டாரத்து மக்கள்!

Published:Updated:
ஒற்றைப்பனை ஶ்ரீசுடலைஆண்டவர்
பிரீமியம் ஸ்டோரி
ஒற்றைப்பனை ஶ்ரீசுடலைஆண்டவர்

வாழை செழிக்கவும் வாழ்வு செழிக்கவும் அருள்தரும் சாமியாய் சிறுமளஞ்சி எனும் ஊரில் கோயில் கொண்டிருக்கிறார் ஒத்தப்பனை சுடலை ஆண்டவர். `சிறுமளஞ்சியை சிறு மதுரையாக மாற்றுவேன்’ என்ற தன்னுடைய வாக்குப்படி இந்த ஊரையும் மக்களையும் காவல்தெய்வமாய் இருந்து காத்து வருகிறாராம். இவ்வூரில் இவர் கோயில் கொண்ட கதை அதியற்புதமானது!

`வாழ்க்கை செழிக்க 
அருள்வாக்கு தருவார் 
சிறுமளஞ்சி ஒற்றைப்பனை ஶ்ரீசுடலையாண்டவர்!!'

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி - வள்ளியூர் வழியில் - தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஊர் திருவேங்கடநாதபுரம். தற்போது சிறுமளஞ்சி என அழைக்கப்படுகிறது. சுமார் 100 ஆண்டுகளுக்குமுன், இவ்வூரில் வசித்த இருளப்பன், வெள்ளைப்பாண்டி ஆகிய இருவருக்கும் இடையே பனைமரம் குத்தகை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இந்தப் பிரச்னை தீவிரம் அடையவே, இருவர் தரப்பிலும் பேசி முடிவெடுத்து `இனி குத்தகை தொடர்பா சண்டை வராது’ என்று உறுதி ஏற்றார்களாம். இதுதொடர்பாக அருகில் 12 கி.மீ. தொலைவிலுள்ள விஜயநாராயணம் ஊரில் அருளும் சுடலையாண்டவர் கோயிலுக்குச் சென்று சத்தியம் செய்வது என்றும் முடிவெடுத்தனர்.

அதன்படி விஜயநாராயணம் சென்று அங்குள்ள சுடலையாண்டார் சந்நிதியில் சத்தியம் செய்து வழிபட்டனர். இங்ஙனம் சத்தியம் செய்தவர்கள் மூன்று நாள்களுக்கு சொந்த ஊருக்குத் திரும்பக் கூடாது என்பது ஐதிகம். ஆனால் சிறுமளஞ்சி ஊரைச் சேர்ந்தவர்கள், சத்தியம் செய்த கையோடு உடனடியாக ஊர் திரும்பிவிட்டார்கள். இதனால் சுடலையாண்டவரின் கோபத்துக்கு ஆளாகினார்களாம்.

அன்று இரவே சிறுமளஞ்சி ஊரில் பெண் ஒருத்தியின் கனவில் ஆக்ரோஷமாகத் தோன்றி கோபத்தை வெளிப்படுத்தினாராம் சுடலை. அச்சம் அடைந்த அந்தப் பெண்ணின் தந்தை ஊராரிடம் விஷயத்தைத் தெரிவித்தார். ஊர்ப்பெரியவர்கள் ஒன்றுகூடினார்கள்.

தங்கள் சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட முத்தாரம்மன் கோயிலில், இதுகுறித்து கணக்குப் போட்டு (பிரச்னம்) பார்ப்பது என்று முடிவு செய்தார்கள். மறுநாள் முத்தாரம்மன் கோயிலில் பூஜை முடிந்ததும் சாமியாடிக்கு அருள்வந்தது. அவரிடம் பிரச்னையைச் சமர்ப்பித்தார்கள் ஊர்ப் பெரியவர்கள்.

அப்போது ‘என் மைந்தனின் கோபம் தீரவில்லை; ஊருக்குள் வருகிறான். அவன் கோபம் தணிய, ஊருக்குள் அவனுக்கென்று நிலையம் எடுத்து வழிபடுங்கள்’ என்று சாமி யாடி மூலம் அருள்வாக்கு தந்தாள் அம்மன்.

மேலும், ‘இந்த ஊரில் சுடலை தங்குவதற்கு விரும்பும் இடம் ஒளியாய் தெரியும். அங்குள்ள பனை மரத்தின் அடியில் கத்தரிக்காய் செடி ஒன்று இருக்கும். அதில் ஒரு காய் மட்டுமே காய்த்திருக்கும். இதுதான் அடையாளம். சுடலையைக் கண்டு யாரும் பயப்பட வேண் டாம். அவன் என் எதிரில், என் பார்வையில், என் கட்டுக்குள் இருப்பான்’ என்றும் அருள் வாக்காக மொழிந்தாள் முத்தாரம்மன்.

`வாழ்க்கை செழிக்க 
அருள்வாக்கு தருவார் 
சிறுமளஞ்சி ஒற்றைப்பனை ஶ்ரீசுடலையாண்டவர்!!'

அவளின் ஆணைப்படி மறு தினமே விஜயநாராயணத்துக்குச் சென்று அங்குள்ள சுடலையாண்டவர் கோயிலிலிருந்து பிடிமண் எடுத்து வந்தார்கள். கத்திரிச்செடி முளைத்திருந்த பனைமரத்தின் அடியில், சுடலைக்கு மண்பீடம் அமைக்கப்பட்டது. பனை ஓலை கொட்டகை அமைத்து வழிபாடும் ஆரம்பித்தது.

அப்போது ஊர்மக்களில் ஒருவரின் மீது அருளாக வந்திறங்கிய சுடலை, ``என் கோபம் தணிந்தது. இந்தச் சிறுமளஞ்சியைச் சிறுமதுரை யாக்கித் தருகிறேன்’’ என்று முதல் வாக்கு கொடுத்தாராம். பின்னர் சிலவருடங்களில் அவருக்குக் கற்சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டது. கோயிலில் பனைக்கம்புகள் மூலம் ஓடு வேயப்பட்டது. பிற்காலத்தில் கல்மண்டபம் நிறுவப்பட்டது. இன்றைக்கும் தான் தந்த வாக்கின்படி இவ்வூரைச் செழிக்கவைத்துக் கொண்டிருக்கிறார் சுடலையாண்டவர்.

இவ்வூர் விவசாயத்திலும், தொழிலிலும், கல்வியிலும் சிறந்து விளங்குகிறது. சிறுமளஞ்சி வாழைக்காய் என்றால் தமிழகம் எங்கும் பிரசித்தம். வாரத்தின் இரு தினங்களில் வாழைக்காய்ச் சந்தை இங்கு நடை பெறும். இப்படி இவ்வூரில் வாழை வளர்ச்சியும் வியாபாரமும் செழித்திருக்க சுடலையின் திருவருளே காரணம் என்கிறார்கள், ஊர் மக்கள்.

``உள்ளன்போடு உள்ளம் உருக வழிபடும் அன்பர் களுக்கு உயர்வான வாழ்வு தரும் சாமி எங்கள் சுடலை ஆண்டவர்’’ என்று நெக்குருகிப் பேசுகிறார்கள் இந்த வட்டாரத்து மக்கள்!

ஆலயத்தின் நுழைவு வாயிலின் அருகே ஒற்றைப் பனை மரமும், அருகே கொம்பு மாடசாமி பீடமும் உள்ளன. எதிரில் சுடலையாண்டவர் சந்நிதி. மேலும் பிரம்மராக்கு சக்தி, பேச்சியம்மன், முண்டன் ஆகிய தெய்வங்களையும் தரிசிக்கலாம். கோயிலின் நடுவில் பனைமரம் ஒன்று திகழ்கிறது. பக்தர்கள் இந்த மரத்தை யும் வணங்கி வழிபட்டுச் செல்கின்றனர்.

`வாழ்க்கை செழிக்க 
அருள்வாக்கு தருவார் 
சிறுமளஞ்சி ஒற்றைப்பனை ஶ்ரீசுடலையாண்டவர்!!'

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆவணி மாதத்தில் - வியாழன் வெள்ளி, சனி ஆகிய முன்று தினங்கள் கொடைவிழா நடைபெறுகிறது. அப்போது இவ்வூரைச் சேர்ந்த சுடலை ஆண்டவரின் பக்தர்கள் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் விழாவுக்கு வந்து விடுவார்களாம்.

விழாவின்போது சுடலை ரூபமாக நின்று அருள் வாக்கு சொல்வார் சாமியாடி. அவரிடம் பிரார்த்த னைகளைச் சொல்லி, அருள்வாக்கு கேட்க பெருந் திரளாகக் காத்திருக்கும் பக்தர் கூட்டம். அருள்வாக்கு நிறைவேறிவிட்டால், அடுத்த கொடை விழாவில் நேர்த்திக் கடன் செலுத்துவர். விழாவின் நிறைவாக மயானவேட்டைக்குச் செல்வார் சுடலையாண்டவர். அனைத்து வைபவங்களையும் தரிசித்து, மனநிறைவோடு வீட்டுக்குச் செல்வார்கள் பக்தர்கள்.

இந்தக் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் கடைசி வெள்ளியும் விசேஷ வழிபடுகள் நடை பெறுகின்றன. விழாவையொட்டி நிகழும் அன்ன தானத்தில் சுற்றுவட்டாரத்து மக்கள் பலரும் வந்து கலந்துகொள்வார்கள். இதன்பொருட்டு சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும். தினமும் காலை 6:30 முதல் இரவு 8:30 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

`வாழ்க்கை செழிக்க 
அருள்வாக்கு தருவார் 
சிறுமளஞ்சி ஒற்றைப்பனை ஶ்ரீசுடலையாண்டவர்!!'

வீட்டிலேயே பிரதோஷ வழிபாடு!

துகுறித்து சாண்டில்ய முனிவர் உபதேசித்ததாகப் புராணங்கள் சொல்கின்றன. பிரதோஷ நாளன்று தூய்மையான நீரில் குளிக்க வேண்டும். பகல் பொழுதில் எதுவும் சாப்பிடக் கூடாது. மாலைப் பொழுதில், பிரதோஷ பூஜை செய்ய வேண்டிய இடத்தைத் தூய்மை செய்து, மேலே - அழகான சித்திர வேலைப்பாடு அமைந்த சிவந்த நிறத் துணிகளைப் பந்தல் போல அமைக்க வேண்டும்.

மேலும், மங்கலகரமாக கோலங்கள் போட வேண்டும். அங்கே அம்பிகையுடன் கூடிய சிவபெருமான் திருவுருவப் படத்தை வைத்து, தூபம்- தீபம் முதலிய எதிலும் குறை வைக்காமல் முறைப்படி பூஜை செய்ய வேண்டும்; பதிகங்கள் பாடி வழிபடவேண்டும். இதன் மூலம் நம் தோஷங்கள் அனைத்தும் நீங்கும்; இல்லத்தில் சுபிட்சங்கள் நிறைந்திருக்கும்.

- பி.சந்தர், சென்னை-55