Published:Updated:

சூரிய பூஜை!

சூரிய பூஜை
பிரீமியம் ஸ்டோரி
News
சூரிய பூஜை

ஆன்மிகத் துணுக்குகள்

சூரிய பூஜை!

சூரிய சந்திர பூஜை!

ஞ்சை மாவட்டம், திங்களூர் (திருவையாற்றிலிருந்து 2 கி.மீ. தொலைவு), சந்திர பகவானுக்கு உரிய தலம். இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று காலை 6 மணிக்கு சூரிய ஒளி, சிவலிங்கத்தின் மீது படுவதால் அன்று சூரிய பூஜையும், மறு நாள் மாலை 6 மணிக்கு சந்திர ஒளி சிவலிங்கத்தின் மீது படுவதால் சந்திர பூஜையும் நடை பெறுகின்றன.

பாரதப் போர் வியூகங்கள்!

காபாரதப் போரில் பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டன. அவை: கிரவுஞ்ச வியூகம், கருட வியூகம், மகர வியூகம், சியேன வியூகம், மண்டல வியூகம், வஜ்ர வியூகம், அர்த்தசாஸ்திர வியூகம், பத்ம வியூகம், சக்ர வியூகம், சகட வியூகம், அர்த்தசந்திர வியூகம்.

பாவங்களைப் பொசுக்கும் உஷத் காலம்!

திகாலை நேரத்துக்கு உரிய பெண் தேவதை, உஷஸ் என்று ரிக் வேதம் குறிப்பிடுகிறது. உஷஸ் தோன்றிய பிறகே சூரியன் உதயமாகிறான். அதனால் அதிகாலையை உஷத் காலம் என்கிறார்கள். இந்த நேரத்தில் உஷஸின் செழிப்பான கிரணங்கள் பூமியை நோக்கிப் பாய்வதால் நீர்நிலைகளில் உள்ள நீர் வெதுவெதுப்பாக இருக்கும்.எனவே, உஷத் காலத்தில் நீராடினால் உடல்நலம் சீராகும், பாவங்கள் பொசுங்கும் என்பது ஐதீகம்.