Published:Updated:

வாரணமும் தோரணமும்!

மேற்கு மலைத் தொடர்!
பிரீமியம் ஸ்டோரி
மேற்கு மலைத் தொடர்!

தேரையர் தந்த மருத்துவக் குறிப்புகள்

வாரணமும் தோரணமும்!

தேரையர் தந்த மருத்துவக் குறிப்புகள்

Published:Updated:
மேற்கு மலைத் தொடர்!
பிரீமியம் ஸ்டோரி
மேற்கு மலைத் தொடர்!

சித்தப் புருஷர்கள் எங்கே இருக்கிறார்கள். அவர்கள் எளிதில் கண்களுக்குப் புலப்பட மாட்டார்களா? சூட்சும வார்த்தைகளில் ஏதேதோ சொல்வார்களாமே... அவற்றை அனுபவத்தில் கொண்டு வர முடியுமா? ரஸவாதத்தால் தங்கம் உருவாக்கு வார்களாமே... அவற்றை ஏழை மக்களுக்குக் கொடுத்தால் எல்லோரும் தனவந்தர் களாகி விடலாமே? ஏழைகளே இருக்க மாட்டார்களே!’

வாரணமும் தோரணமும்!

சித்தர்களின் மகிமை குறித்த ஞானம் இல்லாத பலரும் கேட்கும் கேள்விகள் இவை. இன்னும் சிலர் கேலிக்காகவும் இப்படிப் பட்ட கேள்விகளைக் கேட்பது உண்டு.

தெய்வமயமான சித்தர்களை நாம் ஏன் தேடவேண்டும். ஆசை வயப்பட்ட சாமானியர்களால் சித்தர்களைப் பார்க்க முடியாதுதான். ஒருவேளை, தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் அவர்களின் வல்லமையை உணரமுடியாது போகும். அவர்களின் சொல்லும் வாக்கும் பரத்தைப் பற்றியதாக இருக்கும்; பரவெளியின் - பிரபஞ்சத்தின் ரகசியத்தை உரைப்பதாக இருக்கும்.

பொய்யின்றி மெய்யோடு உணர முற்படுவோமேயானால், சித்தர்கள் சொல்லும் சூட்சுமம் நமக்கும் வெகு எளிதில் புலப்படும். ஆனால் மாயையில் - ஆசையில் சிக்கி உழலும் நபர்களுக்கு இப்படியான வாய்ப்பு கிட்டுவது அபூர்வம்தான்.

அற்புதமான சித்தர் பாடல் ஒன்று உண்டு... புரிகிறதா பாருங்கள்.

மூலமாம் குளத்திலே முளைத்தெழுந்த கோரையைக்
காலமே எழுந்திருந்து நாலுகட்டு அறுப்பீரேல்
பாலனாகி வாழலாம் பரப்பிரம்மம் ஆகலாம்
ஆலம் உண்ட கண்டர் பாதம் அம்மை பாதம் உண்மையே!


இதன் கருத்தென்ன தெரியுமா? நம் உடம்பில் ஆறு ஆதாரங்களில் ஒன்று மூலாதாரம். நம் அரைஞாணுக்குக் கீழே இருக்கும். அங்கே கோழையின் வேர்கள் கூடி இருக்குமாம். பிராணயாம பயிற்சிகள் மூலம் இந்தக் கோழையை நீக்கினால் குறைவில்லாத வாழ்க்கை வாழலாம் என்ற உட்கருத்தைச் சூட்சுமமாகச் சொல்கிறது சிவ வாக்கியரின் இந்தப் பாடல்.

வாரணமும் தோரணமும்!

கோழையை அகற்றும்படி வேறொரு வழிகாட்டுதலும் உண்டு கரிசலாங்கண்ணிக் கீரையை மண் இல்லாமல் அலசி இடித்துச் சாறெடுக்க வேண்டும். குறிப்பிட்ட அளவிலான அந்தச் சாறுடன் குறிப்பிட்ட அளவில் நெய் சேர்த்து, அடுப்பில் வைத்து, மெழுகுப் பதமாகச் சுண்டியபின் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அந்த மெழுகை வலதுகை கட்டை விரலால் தொட்டால் விரலில் ஒட்டிக்கொள்ளும். அப்படி வலது கை கட்டைவிரலால் மெழுகை எடுத்து உள்நாக்கில் வைக்கவேண்டும். பின்னர் சுட்டு விரலாலும் நடுவிரலாலும் உள்நாக்கை மெள்ள வருடினால் கோழை வெளியேறும்.

இப்படி மூன்று நான்குமுறை கோழையை எடுக்க வேண்டுமாம். இதன் பிறகு சுமார் 3 மணி நேரம் குளிக்கவோ, சாப்பிடவோ கூடாது. அப்போது ஆசனத்தின் மீது நிமிர்ந்து உட்காரவேண்டும். இங்ஙனம் முறைப்படி தினமும் அதிகாலையில் (ஐந்து மாதம் வரை) செய்து வந்தால், யானை பலம் உண்டாகும். பார்வை கூர்மையாக இருக்கும் என்கின்றன சித்தர்வழி ஆர்வலர்கள்.

இந்தச் செய்முறை அளவு, கால-நேரம், ஆசனத்தில் அமர்வது போன்ற விஷயங் களைத் தகுந்த குருநாதர், ஆசானிடம் கேட்டறிந்து முறைப்படி செய்யவேண்டும் என்பது அவசியம்.

இப்படி மருத்துவம் சார்ந்தும் உடல்நலன் சார்ந்தும் ஏராளமான ரகசியங்களை ஞானநூல்களாக அருளியுள்ளார்கள் சித்தர் கள். அவ்வகையில் தோரணமலையில் வாழ்ந்தருளிய சித்தர்பிரான் தேரையரும் பல பாடங்களை நமக்குச் சொல்லித் தருகிறார். சென்ற அத்தியாயத்தில், தேரையர் வழிகாட்டிய - உடம்புபிடித்துவிடுதலின் வகைகளைக் கண்டோம் அல்லவா. இப்போது அவற்றின் பலாபலன்களை அறிவோம்.

தட்டல் - உடம்பை நாள்தோறும் தட்டுதல் செய்வது நல்லது. இதிலும் நிற்றல், நடை, குத்தல், கிடத்தல், சாய்த்தல் என்று பிரிவுகள் உண்டு. இவற்றில் உடம்பெங்கும் குத்தல் செய்வதால் உடல் வலிக்கு அடிப்படையாக உள்ள வாயு குறையுமாம்.

இறுக்கல் என்பது குறிப்பிட்ட இடத்தில் இறுக்கிப் பிடிப்பது ஆகும். உரிய தைலத்து டனும் தைலம் இல்லாமலும் செய்யலாம். இதனால் உடம்பு வலிமை பெறும்; வலியும் சோர்வும் நீங்கும்.

பிடித்தல் என்பது உடல் உறுப்புகளை நன்றாக இயங்கச் செய்யும். தைலம் தேய்த்து உடம்பைப் பிடித்துவிட்டால் 10 வகையான வாயுக்களால் உண்டாகும் வலி மிகாமல் குறையும். முறுக்கல் முறையை அவசியமின்றி செய்தல் கூடாது. நோயாளி வேண்டாம் என்று மறுக்கும் தருணத்திலும் செய்யக்கூடாது.

கட்டல் முறையானது, வாத நோய்களை நீக்கும். அழுத்தல் முறையில் உடம்பின் உள்வலி, முதுகுவலி நீங்கும்.

இழுத்தல் முறையில் சுளுக்கு, வலி, பிடிப்பு, வாயு முதலானவை நீங்கும்.

மல்லாத்துதல் முறையால் உடம்பில் வாயு, கபம், அனல் ஆகியவற்றை இயல்பு நிலையில் வைத்திருக்கலாம். பருத்த வயிறானது மடிப்பு நீங்கிச் சுருங்கும் என்றும் கூறுவர்.

அசைத்தல் முறையால் உடல் இலேசாகும்; உடற்முறுக்கு அடங்கும் என்று சொல்வர். மிக அபூர்வமாகச் செய்யப்படக்கூடியது.

இவை யாவும் தகவல் அறியும் பொருட்டே. எக்காரணம் கொண்டும் உரிய வழிகாட்டுதல், குருவின் துணையின்றி நாமாகவே முயற்சி செய்யக்கூடாது.

வாரணமும் தோரணமும்!

இவை மட்டுமன்றி பல்வேறு ரோகங்களைக் குணமாக்கும் பொடி வகைகள் குறித்தும் தேரையர் விளக்குகிறார். பிரண்டைப் பொடி, இஞ்சிப்பொடி, பறங்கிப்பட்டைப் பொடி முதலான இந்தப் பொடி வகைகள் அற்புதமான பலன்களை அருள்பவை.

இத்தகு மருத்துவ மகத்துவத்தை உலகுக்கு அளித்த தேரையர், தோரணமலையில் தங்கியிருந்ததும் பணி செய்ததும் நாம் செய்த கொடுப்பினையே. இந்தக் கொடுப்பினை தோரணமலையான் முருகப்பெருமானால் நமக்குக் கிடைத்தது என்றே சொல்லவேண்டும். அவனருளின்றி அணுவும் அசையாது அல்லவா?!

அந்தக் குகைக்கோயில் அழகனின் தண்ணருளால் ஈர்க்கப்பட்டு நாளுக்குநாள் தோரணமலைக்கு வரும் பக்தர்களின் கூட்டம் மேன்மேலும் அதிகரித்து வருகிறது. அப்படியான அடியார்களில் ஒருவர், ஆலங்குளத்தில் பணிபுரிந்து வந்தவர். முன்கோபம் அதிகம் உண்டாம் இவருக்கு. அதனால் பல பிரச்னைகளையும் சந்தித்தவர். இந்த நிலையில் கடன்பிரச்னைகளும் சூழ்ந்துகொள்ள, தோரண மலை முருகனைச் சரணடைந்தார்.

அவரின் பிரச்னைகளை எல்லாம் நீக்கி அருளியதோடு, அவர் மூலம் சந்தனக்காப்பு அலங்காரத்தைப் பெற்றுக்கொள்ள ஓர் அருளாடலையும் நிகழ்த்தினார், முருகப் பெருமான். அற்புதமான அந்தச் சம்பவம் உள்ளம் சிலிர்க்க வைப்பது.

- தரிசிப்போம்...