Published:Updated:

கரிகாலனைக் காத்த வாசீஸ்வரர்; பிரச்னைகள் தீர்க்கும் விநாயகர் சபை; திருப்பாசூர் ஆலய அற்புதங்கள்!

திருப்பாசூர்

கரிகாற் சோழன் மீது கொண்ட பகைமையால் சிலர் ஒரு பெரிய நாகத்தைக் குடத்தில் இட்டு அவனிடம் அனுப்ப, இங்குள்ள வாசீஸ்வர சுவாமி பாம்பாட்டியாக வந்து மன்னனைக் காத்தார் என்கிறது திருப்பாசூர் தலபுராணம்.

கரிகாலனைக் காத்த வாசீஸ்வரர்; பிரச்னைகள் தீர்க்கும் விநாயகர் சபை; திருப்பாசூர் ஆலய அற்புதங்கள்!

கரிகாற் சோழன் மீது கொண்ட பகைமையால் சிலர் ஒரு பெரிய நாகத்தைக் குடத்தில் இட்டு அவனிடம் அனுப்ப, இங்குள்ள வாசீஸ்வர சுவாமி பாம்பாட்டியாக வந்து மன்னனைக் காத்தார் என்கிறது திருப்பாசூர் தலபுராணம்.

Published:Updated:
திருப்பாசூர்

திருவள்ளூர் மாவட்டம் , திருப்பாசூர் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு வாசீஸ்வர சுவாமி திருக்கோயில். இது, அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர் ஆகிய மூவராலும் பாடப்பட்ட சிறப்பினைக் கொண்ட தொண்டை மண்டலத் தேவாரத் திருத்தலம்

வாசீஸ்வர சுவாமி திருக்கோயில்
வாசீஸ்வர சுவாமி திருக்கோயில்

1,200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தத் திருத்தலம் இரண்டாம் கரிகால்சோழனால் கட்டப்பட்டது என்கிறார்கள். இங்குள்ள மூலவர் வாசீஸ்வரர், அம்பிகைக்கு தங்காதலி என்பது திருநாமம்.

ஆதிகாலத்தில் பசு ஒன்று இங்குள்ள புற்றில் பால் சொரிந்ததைக் கண்ட வேடர்கள் அதை வெட்டிப் பார்த்தபோது அங்கு சிவலிங்கம் ஒன்று வெளிப்பட்டதை அறிந்து அங்கே ஓர் ஆலயம் எழுப்பி வழிபட்டனர் என்கிற்து தலவரலாறு.

இத்தலத்தில்தான் சிவபெருமானை, திருமால் லிங்க வடிவமாக வழிபட்டு மது, கைடபர் எனும் இரு அரக்கர்களைக் கொன்ற பாவம் நீங்கப்பெற்றார் என்கின்றன புராணங்கள்.

கரிகாற் சோழன் மீது கொண்ட பகைமையால் சிலர் ஒரு பெரிய நாகத்தைக் குடத்தில் இட்டு அவனுக்கு அனுப்ப, இங்குள்ள வாசீஸ்வர சுவாமி பாம்பாட்டியாக வந்து மன்னனைக் காத்த தலம் இது என்கிறது கோயில் தலபுராணம்.

இதனால் இங்கு இந்தக் கோயிலை அமைக்க கரிகாலன் விரும்பினார். ஆனால் இது பிடிக்காத எதிரி மன்னன் பகைமை கொண்டு தான் உபாசனை செய்த காளிதேவியை வேண்டி கரிகாற் சோழ மன்னனை அழிக்குமாறு ஏவினான். ஆங்காரம் கொண்ட காளிதேவி மன்னனை அழிக்க வரும்போது சிவபெருமான் நந்தியை அனுப்பி காளிதேவியை அடக்கினார் என்கிறது தலபுராணம். இந்த சம்பவத்தை நினைவூட்ட காளியின் சிற்பம் ஒன்று நூற்றுக்கால் மண்டபத்தின் முன் இன்றும் உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விநாயகர் சபை
விநாயகர் சபை

இந்தக் கோயிலின் கருவறையில் சிவன் சுயம்பு லிங்கமாய் சதுர வடிவ ஆவுடையாரோடு காட்சி தந்து அருள்பாலிக்கிறார். சிவன் சந்நிதிக்கு வலப்புறமாக அம்பாள் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கிறார். சிவன் மற்றும் அம்பாள் சந்நிதிகளுக்கு இடையே விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் என ஒரே வரிசையில் சிவபெருமான் குடும்ப சமேதராக காட்சி அருள்கிறார்.

பிரச்னைகள் தீர்க்கும் மாலைப் பிரார்த்தனை

இங்கு சிறப்பு அம்சமாக ஒரு சந்நிதியில் 11 விநாயகர்கள் எழுந்தருளியிருக்கும், விநாயகர் சபை ஒன்றும் உள்ளது. இதுவே மகா விஷ்ணு பூஜை செய்த இடம் என்கிறார்கள் பக்தர்கள். இந்த விநாயகர்களுக்குத் தேங்காய் மாலை , வாழைப்பழம், அருகம்புல் மாலை ஆகியன சமர்ப்பித்துப் பிரார்த்தனை செய்தால் வாழ்வில் எந்தத் துன்பமும் இல்லாமல் மகிழ்வுடன் வாழ வழி செய்வார் என்பது நம்பிக்கை.

கல்யாண தடை, குழந்தையின்மை, குடும்பச் சிக்கல்கள் முதலிய பிரச்னைகளுக்கு 11 நெய் தீபம் ஏற்றி 11 தேங்காயை மாலை, 11 வாழைப்பழ மாலை, அருகம்புல் மாலை ஆகியனவற்றை இங்குள்ள விநாயகருக்கு சாத்தி வழிபட்டால் அனைத்து பிரச்னைகளும் மூன்று மாதத்தில் தீரும் என்பது நம்பிக்கை.

சிவன்
சிவன்

இக்கோயிலின் தல விருட்சமாக மூங்கில் மரம் உள்ளது. இந்த மரமானது கோயிலின் உள்ளேயே அமைந்துள்ளது. மகா சிவராத்திரி, பஞ்சபூத உற்சவம் மற்றும் வைகாசி மாத 10 நாள்கள் பிரம்மோசோற்சவம், தீர்த்தவாரி போன்ற விழாக்கள் இங்கு வெகு விமர்சையாக நடைபெறும்.

எப்படிச் செல்வது?: திருவள்ளூலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்தத் திருக்கோயிலுக்கு திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து ஆட்டோ மற்றும் பேருந்து மூலம் செல்ல முடியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism