Published:Updated:

காயத்ரி மந்திர மகிமை!

காயத்ரி மந்திர மகிமை
பிரீமியம் ஸ்டோரி
News
காயத்ரி மந்திர மகிமை

சுவாமி சதேவானந்த சரஸ்வதி

வ்வொரு தெய்வத்துக்கும் காயத்ரி மந்திரம் உண்டு. பொதுவாக காயத்ரி என்று சொன்னால்...

`ஓம் பூர் புவ: ஸ்வ: தத்ஸவிதுர் வரேண்யம்

பர்கோ தேவஸ்ய தீமஹி

தியோ யோ ந: ப்ரசோதயாத்' - என்பதே எனப் பலரும் நினைக்கிறோம். ஆனால் இந்த மந்திரத்துக்கு `சாவித்திரி' எனப் பெயர்.

வேத பாடசாலையில் முறைப்படி வேதம் படிக்காதவர்களும்கூட, தங்கள் குல வழக்கப்படி ருக் வேதி, யஜுர் வேதி, சாம வேதி, அதர்வண வேதி என கூறுவதைக் கேட்க முடியும். குறிப்பிட்ட வேதத்தில் இருக்கும் வேறு எந்த மந்திரத்தையும் அறியவில்லை என்றாலும் கூட, குறிப்பிட்ட வேதத்தைப் பின்பற்றுவதாக சொல்ல ஒருவருக்கு உரிமையுண்டு. ஏனெனில், அவர் நான்கு வேதங்களிலும் இருக்கும் காயத்ரி மந்திரத்தை அறிந்து இருப்பதால் அவ்வாறு சொல்லலாம். தவறில்லை. அதோடு, இந்தக் காயத்ரி மந்திரம் எல்லா வேதங்களின் சாரம் ஆகும்.

காயத்ரி மந்திர மகிமை!

பொதுவாக 7, 9 வயதிற்குள் இந்த மந்திரம் உபதேசம் செய்யப்படுகிறது. ஒன்பது வயதேயான குழந்தையின் பிரார்த்தனை என்னவாக இருக்கும்?

கல்வி, செல்வம், வீரம் இவற்றில் எதைத் தேர்வு செய்வது என முடிவெடுப்பது கடினம். பெற்றோரின் தவறான முடிவினாலும்கூட குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படலாம். எனவே `அறியாமை மற்றும் குழப்பம் ஆகியவற்றை அகற்றி தெளிவாக முடிவெடுக்கும் சக்தி கொடு' என பிரார்த்தனை செய்கிறது இந்த மந்திரம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பிரார்த்தனை செய்வது ஒரு குழந்தை. ஆனால் `எங்களுக்கு' (தீமஹி) என பன்மையில் பிரார்த்தனை இருக்கிறது. ஏனெனில் குடும்ப உறுப்பினர்கள், சமுதாயம், நாடு மற்றும் ஒட்டுமொத்த மனித குலமும் தெளிவாக முடிவெடுக்க பிரார்த்தனை செய்கிறது இந்த மந்திரம். உலகின் எங்கோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் எடுக்கும் ஒரு தவறான முடிவினால், ஒட்டுமொத்த மனித குலமும் இன்னல்களை அனுபவிக்க நேரலாம். எனவே ஒட்டுமொத்த உலக நலத்திற்காகவும் பிரார்த்தனை செய்கிறது இந்த மந்திரம்.

காயத்ரி மந்திர மகிமை!

சரியான நேரத்தில், சரியான இடத்தில் ஒரு செயலை செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். நாம் எடுக்கும் சரியான முடிவுகளே நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. எது சரி, எது தவறு எனத் தீர்மானிப்பதில் குழப்பம் வரலாம். மேலும், இரண்டு சரியான முடிவுகளில் எது சிறந்தது எனத் தேர்ந்தெடுக்க முடியாமலும் போகலாம். இனம் காண முடியாத குழப்பங்கள் சூழும்போது, காரணமற்ற பயம் நம்மை ஆட்கொள்ளும். எனவே, சரியான முடிவினைத் தீர்மானிக்க பிரார்த்தனை அவசியம். உலக நலனை வலியுறுத்துவதே நம் தேசத்தின் கலாசாரம், பண்பாடு. நான், நீங்கள், மனித குலம் என எல்லோருக்குமான பிரார்த்தனை இது. இதுவே சாத்விக பிரார்த்தனை.

குழப்பங்கள் சூழ்ந்திருக்கும் இத்தருணத்திற்குத் தேவையான மந்திரம் காயத்ரி. எக்காலத்துக்கும் பொருந்தும் இந்த மந்திரத்துக்கு ரிஷி விஸ்வாமித்திரர் (விஸ்வ-உலகம், மித்ர - நண்பன்).அற்புதங்கள் நிகழ்த்தும் காயத்ரி மந்திரத்தை அனுதினமும் ஜபித்து, சரியான முடிவுகளை தக்க தருணத்தில் எடுத்து இன்னல்களில் இருந்து விடுபடுவோம்.