திருத்தலங்கள்
குருப்பெயர்ச்சி பலன்கள்
Published:Updated:

வருவாய் அருள்வாய் முருகா!

முத்துசுவாமி தீக்ஷிதர்
பிரீமியம் ஸ்டோரி
News
முத்துசுவாமி தீக்ஷிதர்

கந்த சஷ்டி தரிசனம்

அந்த மகான் திருத்தணியில் தொடங்கித் தமிழகத் தலங்கள் பலவற்றுக்கும் சென்று தரிசித்து அத்தலத்து இறைவன் மேல் கீர்த்தனை களை இயற்றி வந்தார். அவரின் பாடல்கள் பக்தர்களிடையே பரவசத்தை உருவாக்கியதோடு பல அற்புதங்களையும் நிகழ்த்தின!

வருவாய் அருள்வாய் முருகா!

துரையில் அன்னை மீனாட்சியை தரிசித்த மகான், தன் தம்பியின் திருமணம் எட்டைய புரத்தில் நடைபெறுவதைக் கேள்விப்பட்டு, அதைக் காணலாம் என்று புறப்பட்டார். அது கோடை காலம். வழியில் திருநல்லூரை (இன்று அருப்புக்கோட்டை) அடைந்தார். கடும் வறட்சியில் தவித்தது அந்த ஊர். மகான் பதறினார். அருகிலுள்ள அமுதவல்லி சமேத அமிர்தலிங்கேஸ்வரர் ஆலயத்துக்குச் சென்று அன்னையை தியானித்துப் பாட ஆரம்பித்தார்.

வருவாய் அருள்வாய் முருகா!

`ஆனந்தமாகிற அமுதத்தை வசீகரிக்கும் தேவியே' என்று பொருள்படும் அந்தக் கீர்த்தனையை அவர் பாடப்பாட, பெருமழை பொழிந்தது; வறட்சி நீங்கியது. அந்த மகான் வேறு யாருமல்ல... சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்து ஸ்வாமி தீக்ஷிதர்தான். அவர் அன்று புதிதாய் உருவாக்கிப் பாடிய ராகம் அமிர்தவர்ஷிணி. இன்றும் அமிர்த வர்ஷிணி பாடினால் மழை வரும் என்பது நம்பிக்கை.

வருவாய் அருள்வாய் முருகா!

தணிகை முருகன் தந்த கற்கண்டு

ங்கீத மும்மூர்த்திகள் மூவரில் இளையவர் முத்துசுவாமி தீக்ஷிதர். திருவாரூரில் அவதரித்த வர். இயல்பிலேயே பக்தியும் இசை ஆர்வமும் இணைந்து வாய்க்கப் பெற்ற அவருக்கு நல்ல குருநாதரும் அமைந்தார். அவரோடு காசிக்குச் சென்று கல்வி பயிலும் வாய்ப்பும் கிடைத்தது.

இவருக்கு கங்காதேவியே `ஶ்ரீராம்' என்று குடத்தில் பதிக்கப்பட்ட யாளி வீணை ஒன்றைப் பரிசளித்தாள் என்பார்கள். இவரின் குருநாதர் சிதம்பரநாத சுவாமிகள், முத்துசுவாமி தீக்ஷிதரை தணிகை சென்று வழிபடுக என்று கட்டளையிட்டார். முத்து சுவாமி தீக்ஷிதரும் திருத்தணிக்கு வந்து முருகனை நினைத்துத் தவம் செய்தார். `குருவாய் வருவாய் அருள்வாய் குகனே' என்பார் அருணகிரியார். தீக்ஷிதரும் அவ்வாறே வேண்டிக் கொண்டிருந்தார். வேண்டுதல் விரைவில் பலித்தது.

ஒருநாள் முருகன் முதியவர் வடிவில் வந்து `முத்து சுவாமி கண்ணைத் திற' என்றாராம். இவரும் கண் திறக்க, ஒரு கற்கண்டை இவரின் வாயில் இட்டு மறைந்தாராம் முதியவர். முத்துசுவாமியின் வினைகள் நீங்கி ஞானம் பிறந்தது. வானில் தேவியருடன் அருளும் முருகனின் தரிசனம் கண்டு மகிழ்ந்தார். `ஶ்ரீநாதாதி குருகுஹோ ஜயதி ஜயதி' என்ற கீர்த்தனையைப் பாடித் துதித்தார்.

இப்படித்தான் முத்துசுவாமி தீக்ஷிதரின் இசைப்பயணம் தொடங்கியது. அன்றுமுதல் அவர் எழுதிய அனைத்து கிருதிகளிலும் முருகனே தனக்கு குருவானான் எனபதை விளக்கும் வகையில், `குருகுஹ' என்னும் முத்திரை பதித்துப் பாட ஆரம்பித்தார்.

வருவாய் அருள்வாய் முருகா!

சுவாமிநாத பரிபாலயாம்

`முருக' தலங்களுக்குச் சென்று முத்துசுவாமி தீக்ஷிதர் பாடிய கீர்த்தனைகள் சிறப்பானவை. அதிலும் `சுவாமிநாத பரிபாலயாம் சுமாம்' என்னும் சல நாட்டையில் அமைந்த கீர்த்தனை மிகவும் புகழ்பெற்றது. இதன் கருத்து, `விஷ்ணு, பிரம்மன் இவர்களால் சேவிக்கப்பற கார்த்தி கேயன், நாரதாதிகளால் தியானிக்கப்படுபவன். உமையொரு பாகனின் அருமை குமாரன்.

அழகிய வடிவுடையவன். வேண்டும் வரம் தருபவன். காவ்யம், நாடகம், அலங்கார சாஸ்திரம் ஆகியவற்றை ஆதரிப்பவன். பஞ்ச பூதங்களைப் பிரகாசிக்கச் செயபவன். ஞான ஸ்வரூபன். நித்யானந்தத்தை அளிப்பவன். இப்படி ஸ்வயம் பிரகாசமாக விளங்குபவரும், குருகுஹனும், வள்ளி-தேவ சேனையின் மணவாளனுமான சுவாமி நாதனே, என்னைக் காப்பாற்று' என்பதாகும். இந்தக் கீர்த்தனையோடு சேர்த்து மொத்தம் 4 கீர்த்தனைகளை முத்து சுவாமி தீக்ஷிதர் சுவாமிநாதன் மீது பாடியிருக்கிறார்.

வருவாய் அருள்வாய் முருகா!

கழுகுமலை கந்தன்!

கஸ்திருக்கு முருகப்பெருமான் உபதேசம் செய்த தலம் கழுகுமலை. இதை `குருகு மலை' எனப் போற்றுகிறார் அருணகிரி யார். முத்து சுவாமி தீக்ஷிதர் இந்தத் தலத்துக்குச் சென்று வழிபாடு செய்தார். அப்போது சுத்த தன்யாசி ராகத்தில் `ஸுப்ரஹ்மண்யேன ரஹிதோஹம்' என்னும் அற்புதமான கீர்த்தனை யைப் பாடியருளினார்.

`ப்ரபரவாமாதி மந்திரங்களால் பூஜிக்கப்பெற்ற திருவடியை உடையவர். இந்திரனை மகிழ்விப்பவர். கங்க சைலத்தில் வசிப்பவர். சிரேஷ்டமானவர். வள்ளி தேவசேனாவின் மணவாளர். அகார எழுத்தாக விளங்குபவர்.

எப்போதும் ஆனந்தத்துடன் இருப்பவர். இகபர சுகங்களை அருள்பவர். சாஸ்வதமான வர். வேங்கடேஸ்வரன் என்னு பூபதியினால் நன்கு பூஜிக்கப்படுபவர். அற்புதமான வைகாசி விசாக மகா உற்சவாத்தை உடையவர். சுகருடைய ரகசியத்தை வெளிப்படுத்திய குரு குஹன். கிருத்திகா தேவியரின் குமாரன்.

பரிசுத்தமான பெருமையையுடையவர். பதினெட்டு கண்களுடன் அகண்ட ஸ்வரூப மாக விளங்கும் சுப்ரமண்ய சுவாமி என்னைக் காப்பாற்றுகிறார்' என்று பாடி மகிழ்கிறார் முத்துசுவாமி தீக்ஷிதர். இதில் குறிப்பிடப்படும் பல தகவல்கள் கழுகுமலைத் தலத்தின் தலபுராணத்தில் சொல்லப்படுபவை.

இப்படி முத்துசுவாமிதீக்ஷிதர் 66 தலங் களுக்குச் சென்று 301 கீர்த்தனைகள் பாடியிருக் கிறார். அவை ஒவ்வொன்றும் அமிர்தம் போன்றவை. தீக்ஷிதர் இயற்றி நவகிரக கீர்த்தனைகளைப் பாடினாலோ கேட்டாலோ கிரகதோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

அதனால்தான் அவர் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராகப் போற்றப்படுகிறார். நாமும் சஷ்டி விரதம் வரும் இந்த மாதத்தில் முத்து சுவாமி தீக்ஷிதரின் கீர்த்தனைகளைப் பாடியும் கேட்டும் அந்த முருகப்பெருமானை வழிபட்டு வரம் பெறுவோம்.

நாதஜ்யோதி ஶ்ரீமுத்துஸ்வாமி தீக்ஷிதர்
அடிச்சுவட்டில் இசைப் பயணம்!

க்தியும் ஆய்வும் கலந்து இந்தத் தலை முறைக்குப் பல உண்மைகளை உரைக்கும் பல நூல்களைப் படைத்து வருபவர் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன். இவரின் `அருணகிரிநாதரின் அடிச் சுவட்டில்' என்னும் நூல், திருப்புகழ் தலங்கள் குறித்த தெளிவை பக்தர்களுக்கு உருவாக்கியது.

வருவாய் அருள்வாய் முருகா!


பல ஆலயங்கள் அதன் மூலம் அடையாளப்படுத்தப்பட்டு வழிபாட் டுக்கு வந்தன. திருப்புகழ் திருத் தலங்களைத் தேடி அலைந்த அனுபவங்களை, `கண்டுகொண்டேன் கந்தனை...' என்னும் தலைப்பில் சக்தி விகடன் இதழில் தொடராக எழுதினார். அத்தொடர் முருகபக்தர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இவரின் அடுத்த படைப்பாக வெளியாகியுள்ளது, `நாத ஜ்யோதி ஶ்ரீமுத்துஸ்வாமி தீக்ஷிதர் அடிச்சுவட்டில்' என்னும் நூல்!

முத்துசுவாமி தீக்ஷிதர் பற்றியோ பிற இசை மேதைகள் பற்றியோ நம்மிடம் எத்தனை ஆய்வு நூல்கள் இருக்கின்றன என்றால், விரல்விட்டு எண்ணிவிட முடியும். அதிலும் முத்துசுவாமி தீக்ஷிதர் பாடிய கீர்த்தனைகள்... எந்தத் தலத்துக்கு அவர் சென்றபோது பாடியது எனும் விவரத்தோடு, அதன் பின்னணியில் இருக்கும் சில சம்பவங்களையும் தொகுத்துச் சொல்லப்படும்போது, வாசிப்பவருக்கு அந்தக் காலத்துக்கே பயணப்பட்ட அனுபவம் வாய்க்கும்.

அமிர்தவர்ஷிணி ராகம் பாடினால் மழை வரும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், அந்த ராகத்தை முதலில் பாடியவர் யார்? எப்போது பாடப்பட்டது எனும் தகவல் பலருக்கும் தெரியாத ஒன்று. அதை இந்த நூலில் ஆதாரபூர்வமாக விளக்கியிருக்கிறார் வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன்.

இசை அன்பர்களுக்கும் ஆன்மிக வாசகர் களுக்கும் மிகவும் இன்றியமையாத ஒரு நூல் இது. இந்த நூல் நிச்சயம் வரும் தலைமுறைக்குப் பல்வேறு தகவல்களைக் கொண்டு சேர்க்கும் என்பதில் ஐயம் இல்லை. பாதுகாக்கவேண்டிய ஞானப் பொக்கிஷம்!

நூல் வெளியீடு:

யுனிவர்சல் பப்ளிஷிங்

142, முதல் மாடி, இந்திய அலுவலர்கள் சங்கம்

69, ராயப்பேட் டை நெடுஞ்சாலை,

சென்னை - 600014

தொலைபேசி : 98407 89096