Published:Updated:

முருகப்பெருமானின் அருள் கோலங்கள்!

கந்த சஷ்டி தரிசனம் - வீ.செந்தில்,

பிரீமியம் ஸ்டோரி

முருகப் பெருமானுக்கு ஆறு முகங்கள்; பன்னிரு கரங்கள் என்று ஞான நூல்கள் சொன்னாலும், சிற்சில தலங்களில் 2, 3, 4, 5 எனும் எண்ணிக்கையில் தரிசனம் தருகிறார் முருகப்பெருமான்.

முருகப்பெருமானின் 
அருள் கோலங்கள்!

ழநி மலை மேல் உள்ள மண்டபம் ஒன்றின் முகப்பிலும், இலஞ்சி எனும் தலத்திலும், 10 தலைகள் கொண்ட முருகப் பெருமானின் சுதையாலான திருவுருவைக் காணலாம்.

ஈரோடு அருகில் உள்ள சென்னிமலை தலத்தில், 2 முகங்கள் மற்றும் 8 கரங்களுடன் காட்சி தரும் முருகப் பெருமானை தரிசிக்கலாம். இந்தத் திருக்கோயிலின் தென் புறம்- வெளிப்புற மாடத்தில் உள்ள இவரை ஜாதவேத முருகன் என்பர்.

திருச்சியிலிருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ள உய்யக்கொண்டான் திருமலைத் தலத்தில் மலையேறும் பாதையில் உள்ள சுப்பிரமணியர் ஆலயத்தில், 3 முகம் மற்றும் 12 திருக்கரங்களுடன் தரிசனம் தருகிறார் முருகப் பெருமான்.

கோவை மாவட்டம் புன்செய் புளியம்பட்டி அருகில் இரும்பறை என்ற ஊருக்கு ஒரு கி.மீ. தூரத்தில் உள்ள ஓதிமலையின் மேல் 5 முகங்கள் மற்றும் 8 திருக்கரங் களுடன் பாலசுப்பிரமணியம் என்ற பெயரில் காட்சி தருகிறார் முருகன். இங்குதான் முருகப்பெருமான், பிரம்மனை தலையில் குட்டி சிறையில் அடைத்தார் என்று புராணம் கூறும்.

நல்ல குணம் எது?

கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸிடம் ஜோதிடர் ஒருவர், ‘‘உங்கள் முகத்தைப் பார்த்து என்னால் உங்கள் குணத்தைச் சொல்ல முடியும்’’ என்று சொல்லவும் ஆரம்பித்தார்.

முருகப்பெருமானின் 
அருள் கோலங்கள்!

‘‘நீங்கள் முன் கோபி, பேராசைக்காரன், பிடிவாதக்காரன்’’ என்று கூறிக்கொண்டே போன ஜோதிடரை அடிக்கப் பாய்ந்தனர் சாக்ரடீஸின் சீடர்கள்.

அவர்களைத் தடுத்த சாக்ரடீஸ், ‘‘அவர் சொன்ன அத்தனை குணங்களும் முன்பு என்னிடம் இருந்தன. இப்போதுதான் அவற்றை வென்று, நல்ல குணங்களைப் பின்பற்றி வருகிறேன். கெட்ட குணங்கள் என் உள்ளத்தை விட்டு மறைந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருந்தேன்.

அவை இன்னும் என் முகத்தை விட்டு அகலவில்லை என்பதை இப்போது இவர் மூலமாகத் தெரிந்து கொண்டேன். தீய குணங்கள் முகத்திலோ, உள்ளத்தின் ஒரு மூலையிலோ இருந்து கொண்டுதான் இருக்கும் போலும், பிடிவாதமாக நற் பழக்கங்களைக் கடைப்பிடித்தால் தீய குணங்களின் அடையாளம் கூடத் தெரியாமல் விளங்கலாம்!’’ என்றார்.

அத்துடன் சாக்கரடீஸ் அந்த ஜோதிடருக்கு வெகுமதிகள் கொடுத்து அனுப்பினார்.

- இரா. பாலு, வரக்கால்பட்டு

முருகப்பெருமானின் 
அருள் கோலங்கள்!

இரட்டைப் பார்வை நந்தி!

நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலில் அருளும் நந்திதேவர், ஒரு பார்வையை அன்னையின் மீதும் ஒரு பார்வையை ஈசன் மீதும் வைத்திருக்கும் பாவனையில் உள்ளதாக ஐதிகம். ஆகவே இவருக்கு இரட்டைப் பார்வை நந்தி என்ற சிறப்பு உண்டு

யாழினி பர்வதம், சென்னை-78

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு