Published:Updated:

பெருமாளுக்கு ஆகாத பூ உண்டா?

பெருமாள் கதை
பிரீமியம் ஸ்டோரி
News
பெருமாள் கதை ( பெருமாள் )

ஆன்மிகச் சிறுகதை

ர் ஆன்மிகச் சொற்பொழிவு...

‘`பகவானுக்கு நீங்கள் எதைப் படைக்கிறீர்கள் என்று அவன் பார்ப்பதில்லை! உங்கள் தூய உள்ளத்தையே பார்க்கிறான். எதுவாக இருந்தாலும், பக்தியோடு படைத்தால் ஏற்றுக் கொள்வான்...’’ என்று, ‘பத்ரம் புஷ்பம் பலம் தோயம்...’ என்ற கீதை வாக்கியத்தைச் சொல்லி உரையாற்றினார்.

‘இலை, மலர், பழம், நீர் முதலியவற்றை, தூயபக்தியுடன் பலனை எதிர்பாராமல் அன்புள்ளத்துடன் எவன் அளிக்கிறானோ அதை நான் அருந்துகிறேன்’ என்பது, கீதையில் கண்ணன் சொன்ன வார்த்தை.

அப்போது ஒருவர் ‘`அப்படியென்றால் முட்களுடன் உள்ள பூவினை அளித்தால் இறைவன் ஏற்றுக்கொள்வாரா?’’ என்று குதர்க்கமாகக் கேட்டார்.

அதற்கு அந்த பாகவதர், பராசரபட்டர் என்ற ஆச்சார்யரின் கதையைச் சொல்லி விளக்கம் சொன்னார்.

‘`ஒரு நாள் பராசர பட்டர் ‘பரிவதில் ஈசனைப் பாடி விரிவது மேவல் உறுவீர்; பிரிவகை இன்றி நல்நீர் தூய் புரிவதுவும் புகை பூவே!’ என்ற பாசுரத்துக்கு விளக்கம் அளித்தார். இந்த இடத்தில், ‘அகில் புகை என்றோ, கருமுகைப் பூ என்றோ சிறப்பித்துச் சொல்லவில்லை என்பதால், ஏதேனும் ஒரு புகை, ஒரு பூ பெருமாளுக்குச் சமர்ப்பிக்கப்படலாம். சருகு இட்டும் புகைக்கலாம்; கண்டகாலிப் பூவும் சூட்டலாம்...’ என்றார்.

இதைக் கேட்ட நஞ்சீயர் என்பவர், ‘கண்டகாலிப்பூவை பெருமாளுக்கு சாற்றக்கூடாது என்று சாத்திரம் மறுத்துள்ளதே...’ என்றார். அதற்குப் பராசர பட்டர், ‘சாத்திரம் மறுத்துள்ளது உண்மை. எனினும் `அந்தப் பூ பெருமாளுக்கு ஆகாது’ என்பதால் மறுக்கவில்லை; அடியார்கள் ஆவல் கொண்டு அந்தப் பூவைப் பறித்தால், கையில் முள் பாயுமே என்று, அடியார்கள் மீது இருந்த கருணையால் அப்படி மறுத்ததே அன்றி, பெருமானுக்கு ஆகாத பூ என்று ஒன்றும் இல்லை’ என்று விளக்கினாராம்.

இப்படித்தான்... ஆண்டவன் அவனுக்காக அந்த மலர்களை வேண்டாம் என்று சொல்லவில்லை. முள் உள்ள மலர்களைப் பறிக்கும்போது பக்தர் கையில் முள்குத்தி வேதனை அடையக்கூடாது என்ற கருணையால்தான் அப்படிச் சொல்லியிருக்கிறார்’’ என்று விளக்கினார் பாகவதர்.

- முத்துலக்ஷ்மி சங்கரன், சென்னை-20