Published:Updated:

தீமைகளை அழிக்கப் பிறப்பெடுத்த சக்கரத்தாழ்வார்! ஸ்ரீமகாசுதர்சன ஹோமம்... நீங்களும் சங்கல்பிக்கலாம்!

சுதர்சன ஹோமம்
சுதர்சன ஹோமம்

நித்ய சூரியான சுதர்சனர் வராக அவதாரத்தில் மூக்குப் பகுதியில் ஸ்ரீசுதர்சனர் இருந்தார். நரசிம்ம அவதாரத்தில் நரசிம்மரின் கை நகங்களாக இருந்தவர் ஸ்ரீசுதர்சனர். வாமன அவதாரத்தில் சுக்கிராச்சாரியாரின் கண்களைக் குத்தி பின்னமாக்கியவர் தர்ப்பை வடிவத்தில் இருந்த இவர்தான் என்கிறது புராணம்.

ஸ்ரீமகாவிஷ்ணுவின் எல்லா அவதாரங்களிலும் உடன் இருந்து தீமைகளை அழித்தவர் சுதர்சனர் எனும் சக்கரத்தாழ்வார். காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கு சம்ஹாரத்தில் உதவி புரியும் திருவடிவே சுதர்சனர். எனவே இவரை வணங்கினால் எல்லா அச்சங்களும் நீங்கி நலமான வாழ்வைப் பெறலாம் என்பது நம்பிக்கை.

நித்ய சூரியான சுதர்சனர் வாழ்வில் ஒளி தருபவர். வராக அவதாரத்தில் மூக்குப் பகுதியில் ஸ்ரீசுதர்சனர் இருந்தார். நரசிம்ம அவதாரத்தில் நரசிம்மரின் கை நகங்களாக இருந்தவர் ஸ்ரீசுதர்சனர். வாமன அவதாரத்தில் சுக்கிராச்சாரியாரின் கண்களைக் குத்தி பின்னமாக்கியவர் தர்ப்பை வடிவத்தில் இருந்த இவர்தான் என்கிறது புராணம். ராம அவதாரத்தில் அவரது வில்லில் ஸ்ரீசுதர்சனர் இருந்தார். பரசுராமர் அவதாரத்தில் அவரது ஏர்க் கலப்பையாக ஸ்ரீசுதர்சனர் இருந்தார். கிருஷ்ண அவதாரத்தில் சக்கரமாக இருந்து காத்தார்.

சக்கரத்தாழ்வார்
சக்கரத்தாழ்வார்

மனம் ஒன்றி வழிபடும் பக்தர்களுக்கு எல்லா காலமும் அபயம் அளிக்கும் ஸ்ரீசுதர்சன சக்கரம், அச்சங்களை அகற்றக்கூடியது. ஸ்ரீசுதர்சனரை வழிபடுவதும் ஸ்துதி பாடுவதும் சிறப்பான பலன்களைத் தரும் என்பார்கள். சனிக்கிழமை காலையில் சுதர்சனரை சூரிய வடிவாகவே எண்ணி வழிபடலாம். அன்றைய சூரிய நமஸ்காரத்தை சுதர்சன ஆராதனையாக செய்யலாம். அப்போது கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடலாம்.

"ஓம் சுதர்ஸனாய வித்மஹே

ஜ்வாலா சக்ராய தீமஹி

தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் சுதர்சனாய வித்மஹே

மஹாஜ்வாலாய தீமஹி

தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் சுதர்சனாய வித்மஹே

ஹேதிராஜாய தீமஹி

தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் சுதர்சனாய வித்மஹே

மஹாமந்த்ராய தீமஹி

தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

ஓம் சுதர்சனாய வித்மஹே

சக்ரராஜாய தீமஹி

தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்!"

சக்கரத்தாழ்வாரை வழிபடுவதால், எல்லாப் பிறவிகளிலும் செய்த பாவங்கள், தொடரும் தோஷங்கள், அச்சங்கள், தீங்குகள், தீவினைகள், துன்பங்கள் நீங்கும். கடன் தொல்லை, துர்சக்திகளின் தொல்லைகள் விலகும். எதிரிகள் பயம் நீங்கி ஆனந்த வாழ்வு கிட்டும். சிவப்பு மலர்களால் அர்ச்சித்து, சிவப்பு வஸ்திரம் சாத்தி, ஸ்ரீசுதர்சன காயத்ரி மந்திரத்தை உச்சரித்து இவரது அருளைப் பெறலாம். ஸ்ரீசுதர்சனரை உபாசிப்பவர்கள் மரண பயமின்றி வாழ்வாங்கு வாழ்வார்கள் என்கிறது பாகவதம்.

மகா சுதர்சனர்
மகா சுதர்சனர்

துன்பங்களை மாற்றி நலமருளும் சுதர்சனரின் ஜயந்தி விழா வரும் ஞாயிற்றுக்கிழமை 20-6-2021 அன்று வரவுள்ளது. அதை ஒட்டி மங்கலங்கள் அருளும் மகா சுதர்சன ஹோமம் நடைபெற உள்ளது. ஹோமங்களில் மிகச் சிறப்பான ஹோமம் இது என்று போற்றப்படுகிறது. ஸ்ரீசுதர்சனரின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றுத்தரும் மகா சுதர்சன ஹோமம், திண்டிவனத்துக்கு அருகே உள்ள இறையானூரில் அமைந்திருக்கும் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் நடைபெற இருக்கிறது. இங்கு பெருமாள் ஶ்ரீதேவி பூதேவி சமேதராகக் கோயில் கொண்டிருக்கிறார்.

இந்த ஆலயத்தில் சக்திவிகடனும் ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸும் இணைந்து வழங்கும் 20.6.21 அன்று மகாசுதர்சன ஹோமம் நடைபெற இருக்கிறது. இந்த ஹோமத்தில் வாசகர்களாகிய நீங்களும் சங்கல்பிக்கலாம்.

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்) அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

சுதர்சன ஹோமம்
சுதர்சன ஹோமம்

தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்ப விவரங்களுக்கு: 97909 90404

இந்த நிகழ்வில் நீங்களும் கலந்துகொண்டு சங்கல்பிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

அடுத்த கட்டுரைக்கு