Published:Updated:

தோஷங்கள் போக்கும் முப்பாத்தம்மன்... இல்லம் தேடிவரும் இறை தரிசனம்! #worshipathome

worshipathome
worshipathome

முப்போகம் விளையும் பூமியில் நின்று அருள்செய்யும் சக்தியை நமது முன்னோர்கள், `முப்போகத்தம்மாள்’ என்று பக்தியோடு வணங்கி வந்தனர். முப்போகத்தம்மாள் என்பது மருவி `முப்பாத்தம்மாள்’ என்று மாறினாள் தேவி...

கொரோனா, தற்காலிகமாக நம் நாட்டையே முடக்கியிருக்கிறது. மனிதர்களை வீடுகளுக்குள் இருக்கச்செய்துள்ளது. அரசு, மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் தன்னலம் மறந்து நமக்காகச் சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அதே நேரம், அனுதினமும் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு வந்த பக்தர்கள், அருகில் இருக்கும் ஆலயங்களுக்குக்கூட செல்லமுடியாமல் மனவருத்தத்தோடு இருக்கிறார்கள்.

அவர்களின் மனக் குறையைத் தீர்க்க, சக்தி விகடன், `இல்லம் தேடி வரும் இறை தரிசனம்’ என்னும் பகுதியைத் தொடங்கியிருக்கிறது. இதில், புகழ்பெற்ற சில கோயில்களில் அன்றாடம் நடைபெறும் நித்திய பூஜைகளைப் பதிவுசெய்து உங்களுக்காக வழங்க இருக்கிறோம். இல்லத்தில் இருந்தபடியே இறைதரிசனம் கண்டு மகிழுங்கள். தினம் ஒரு திருத்தலம் என்ற முறையில் இன்று நாம் தரிசனம் செய்ய இருப்பது, முப்பாத்தம்மன் ஆலயம்.

சென்னை நகரின் தியாகராயநகரில் பனகல் பூங்கா அருகே வடபழனி செல்லும் உஸ்மான் ரோட்டின் இடதுபுறம் மகாராஜபுரம் சந்தானம் சாலையில் அருள்புரிகிறாள், அருள்மிகு ஸ்ரீ முப்பாத்தம்மன். 

முப்போகம் விளையும் பூமியில் நின்று அருள்செய்யும்  சக்தியை நமது முன்னோர்கள், `முப்போகத்தம்மாள்’ என்று பக்தியோடு வணங்கி வந்தனர். முப்போகத்தம்மாள் என்பது மருவி `முப்பாத்தம்மாள்’ என்று மாறினாள் தேவி.

முப்பாத்தம்மன்
முப்பாத்தம்மன்

இந்த ஆலயத்தில் உள்ள புற்றைச் சுற்றிலும் நாகர் சிலைகள் அமைந்திருக்கின்றன. இந்தப் புற்றில் பால் ஊற்றி, மஞ்சள், குங்குமம் தெளித்து அம்மனை வேண்டிக்கொண்டால் தீராத நோயையும் தீர்த்துவைப்பாள்.

கடுமையான நோய் கொண்டவர்கள், நாக தோஷம் உள்ளவர்கள், குழந்தை வரம் வேண்டுவோர், திருமண வரம் வேண்டுவோர் எனப் பலரும் இங்கு வந்து இந்தப் பாம்புப் புற்றைச் சுற்றி வந்து பால் ஊற்றிப் பலன் பெறுகிறார்கள்.

முப்பாத்தம்மன்
முப்பாத்தம்மன்

வேண்டியவை யாவையும் நிறைவேற்றித் தரும் மங்கல நாயகி முப்பாத்தம்மனை வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் வணங்குவது சிறப்பானது.

பெண்கள் தீபமேற்றி, வளையல் காணிக்கை அளித்து வேண்டிக்கொள்கிறார்கள். வேண்டிய வரங்கள் யாவற்றையும் அருள்கிறாள் அன்னை.

அடுத்த கட்டுரைக்கு