Published:Updated:

நரசிம்ம ஆஞ்சநேயர்!

நரசிம்ம ஆஞ்சநேயர்
பிரீமியம் ஸ்டோரி
News
நரசிம்ம ஆஞ்சநேயர்

பொ. கணேசபாண்டியன், தேனி

ராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க, பெரியோர்கள் அறிவுரைப்படி ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட விரும்பினார் ஶ்ரீராமன். காசியில் இருந்து சிவலிங்கம் எடுத்து வரும்படி அனுமனைப் பணித்தார்.

காசிக்குச் சென்ற அனுமன், நாரதரைச் சந்தித்தார். ‘`ஆஞ்சநேயா... இலங்கையை எரித்ததால் உன்னையும் பாவம் பற்றிக் கொண்டிருக்கிறது. உனக்காகவும் ஒரு லிங்கத்தை எடுத்துச் சென்று வழிபடு; பாவம் விலகும்’’ என்றார் நாரதர். அவரது அறிவுரைப்படி சிவலிங்கங்களை எடுத்துக் கொண்டு கிளம்பினார் அனுமன்.

ராமேஸ்வரத்தில் அனுமன் வர தாமதமானதால், கடற்கரை மணலில் சிவலிங்கம் வடித்தாள் சீதா. ஶ்ரீராமனும் அந்த லிங்கத்தை பூஜித்தார். அதே நேரம் அங்கு வந்து சேர்ந்த அனுமன் வருத்தம் அடைந்தார். தான் கொண்டுவந்த லிங்கத்தையே பூஜிக்க வேண்டும் என்றார்.

ஶ்ரீராமனோ, ‘`ஆஞ்சநேயா... முடிந்தால் இந்த லிங்கத்தை அகற்றிவிட்டு, நீ கொண்டு வந்ததைப் பிரதிஷ்டை செய்; நான் பூஜிக்கிறேன்’’ என்றார். உடனே அனுமன், மணல் லிங்கத்தைத் தனது வாலால் கட்டியிழுத்துப் பெயர்க்க முயன்றார். ஆனால், அவரின் வால் அறுந்து விழுந்ததே தவிர, லிங்கத்தை அசைக்க முடியவில்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தவற்றை உணர்ந்த அனுமன், தீர்த்தம் உருவாக்கிச் சிவனாரை வழிபட்டு விமோசனம் பெற்றார். இன்றும் ராமேஸ்வரத்தில் தனிக் கோயிலில் வால் இல்லாமல் காட்சி தருகிறார் ஶ்ரீஅனுமன்.

நரசிம்ம ஆஞ்சநேயர்
நரசிம்ம ஆஞ்சநேயர்

ராமேஸ்வரம் ஶ்ரீராமநாதஸ்வாமி கோயில்- மேற்கு வாசல் பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது இந்த ஆலயம்.

இங்கே, வால் இல்லாமல் கூப்பிய கரங்களுடன் அருள்கிறார் மூலவர் அனுமன், அருகில் அத்திமர அனுமன்; அபயஹஸ்த கோலத்தில் அருள்கிறார்.

இரண்யகசிபுவை வதைத்த பிறகு, குளிர்ச்சிக்காக ஓர் அத்தி மரத்துக்குள் புகுந்து கொண்டாராம் ஶ்ரீநரசிம்மர். எனவே அத்தி மரத்தை நரசிம்மரின் அம்சமாகப் போற்றுவர். இதன் அடிப்படையில் அத்திமர அனுமனை, ‘நரசிம்ம ஆஞ்சநேயர்’ என்றும் போற்றுகின்றனர். இவரின் பீடத்துக்குக் கீழ் 12 கோடி ராம நாம எழுத்துகளை பிரதிஷ்டை செய்துள்ளனர் என்பது கூடுதல் சிறப்பம்சம்.