ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

பூ வலப் பக்கம் விழுந்தால்...

ரெங்க மலை
பிரீமியம் ஸ்டோரி
News
ரெங்க மலை

ரெங்கமலை சிறப்புகள்

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் இருந்து பள்ளப்பட்டி செல்லும் வழியில் சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ரெங்கமலை பிரிவு. இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவு பயணித் தால் வருவது ரெங்கமலை! திருக்கயிலாய மலைக்கு நிகரான புனிதமும், அனுமன் தூக்கி வந்த சஞ்சீவி மலையின் ஒரு பகுதி என்ற சிறப்பும் பெற்ற ரெங்கமலையின் நாயகன் - ஶ்ரீமல்லீஸ்வரர்!

திகாலத்தில் தங்க மலையாகவும் பிறகு சதுரகிரி லிங்க மலை என்றும் வழங்கப்பட்டு, தற்போது ரெங்கமலையாகத் திகழும் இங்கு, ஶ்ரீமல்லீஸ்வரர் கோயில் கொண்டது எப்படி?!

முற்காலத்தில், ஒருவன் தனது மாடுகளை மேய்ச்சலுக்காக இந்த மலைப்பகுதிக்கு ஓட்டி வருவது வழக்கம். திரும்பும் வழியில்... பசுக்களில் ஒன்று தனியாகச் சென்று, ஓரிடத்தில் பால் சொரிந்து விட்டு வரும். இதை அறியாத அவன், அந்த பசுவிடம் பால் கறக்க முயற்சித்து ஏமாந்தான். ஆனால் அந்தப் பசு, தன் கன்றுக்கு மட்டும் பசி தீர பால் கொடுப்பது கண்டு வியந்தான்.

‘இதன் ரகசியம் என்ன?’ என்பதை அறிய விரும்பினான். ஒரு நாள், பசுமாட்டைப் பின் தொடர்ந்தான். மலையில், குறிப்பிட்ட ஓரிடத்தில் நின்று தானாக பால் சொரிந்தது பசு! ஆச்சரியம் அடைந்தவன் ஓடோடிச் சென்று பசுவைப் பிடிக்க முற்பட்டான். ஆனால், திடுமென மறைந்தது பசு! அதைப் பிடிக்க முயன்று, நிலைதடுமாறியனுக்குத் தென்பட்டது... கைப்பிடி அளவே உள்ள சிவலிங்கம்! இந்த லிங்கத் திருமேனியே ஶ்ரீமல்லீஸ்வரர் (கோயிலில் வேறு தெய்வங்கள் இல்லை).

ரெங்க மலை
ரெங்க மலை
ரெங்கமலை தீர்த்தம்
ரெங்கமலை தீர்த்தம்

நினைத்த காரியம் ஈடேறுமா என்பதைத் தெரிந்து கொள்ள, இந்த சிவலிங்கத்தின் மீது பூ வைத்துக் குறி கேட்கும் வழக்கம் உண்டு. முதலில், ஶ்ரீமல்லீஸ்வரர் முன் திரைச்சீலை போடப்படுகிறது. பிறகு, அவரது (லிங்கத்தின்) சிரசில் பூ வைக்கப்படுகிறது. அது, லிங்கத்தின் வலப் பக்கம் விழுந்தால், 30 நாட்களில் காரியம் கைகூடும். முன் பக்கம் விழுந்தால், காரியத்தில் சிக்கல்; பின்பக்கம் விழுந்தால், பொறுமை காக்க வேண்டும்; இடப் பக்கம் விழுந்தால், காரியம் தடையின்றி நடக்க ஒரு சதவிகிதம் மட்டுமே வாய்ப்பு என்பது நம்பிக்கை.

மலையின் மீது, கோயிலுக்கு வடக்கே சற்றுத் தள்ளி, ‘தாமரைப் பாழி’ எனும் தீர்த்தம் உள்ளது. அம்மை- அப்பன் இருவரும் அமாவாசை தோறும் இந்த தீர்த்தத்தில் நீராடிச் செல்வதாக ஐதீகம்.

- தி.திவ்யா, சேலம்