Published:Updated:

`உனக்குச் சந்தோஷம்தானே?'

ஶ்ரீசாயிபாபா
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீசாயிபாபா

ஶ்ரீ சாயியின் அருளாடல் - வாசகர் அனுபவம் டாக்டர் என் மோகன்

`உனக்குச் சந்தோஷம்தானே?'

ஶ்ரீ சாயியின் அருளாடல் - வாசகர் அனுபவம் டாக்டர் என் மோகன்

Published:Updated:
ஶ்ரீசாயிபாபா
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீசாயிபாபா

நான், சில ஆண்டுகளுக்கு முன்புவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைத்துறையின் தலைவராகவும் முதுகலைத் தேர்வுகளுக்கு ஆய்வாளராகவும் பணியாற்றி வந்தேன். இந்த அனுபவம் 13 ஆண்டுகளுக்கு முன்பு, நான் பணியில் இருந்தபோது நடந்தது.

`உனக்குச் சந்தோஷம்தானே?'

ருமுறை மருத்துவத்துறை சார்ந்த தேர்வு ஒன்று நடந்தது. அத்தேர்வில் நான் பணியாற்றிய மருத்துவப் பல்கலைக் கழகத்தில் இருந்து இருவர் மற்றும் வெளிப்பல்கலைக் கழகங்களில் இருந்து இருவர் என மொத்தம் நான்கு தேர்வாளர்கள் இருப்பார்கள். முதல் நாளில் 8 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

அதில் ஒரு மாணவர் மிகுந்த புத்திசாலி. ஆனால் அன்றைக்குக் கேள்வியைத் தவறாகப் புரிந்துகொண்டு பதற்றத்தில் திணறிவிட்டார். சரியான விடையளிக்கவும் இல்லை. அவர் தேர்வு பெறுவதில்தான் அந்தக் குடும்பத்தின் எதிர்காலமே இருக்கிறது என்பதை அறிந்த நாங்கள் எங்கே அவர் தோல்வி அடைந்துவிடுவாரோ என்று கவலைப்பட்டோம். அதேநேரம் வெளித்தேர்வாளர் மிகவும் கட்டுப்பாடானவர். எனவே அந்த மாணவர் பாசாவது சிரமம்தான் என்று தோன்றியது.

கனத்த மனதுடன் வீடு திரும்பினேன். வீட்டில் நான் பூஜை அறைக்குள் சென்று ஷீரடி பாபாவிடம் பிரார்த்தனை செய்தேன். பாபாவின் சாயி சத்சரித்திரப் புத்தகத்தைத் திறந்து அதில் எந்த பக்கம் வருகிறதோ, அந்த பக்கத்தில் பாபா என்ன கூறி இருக்கிறாரோ அதையே வேதவாக்காக கொள்வது என் வழக்கம். அதன்படிப் புத்தகத்தைத் திறந்தேன். நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள், அந்த பக்கத்தில் ஒரு பையனின் தாயிடம் பாபா, 'பையன் நிச்சயமாகத் தேர்வில் தேர்ச்சி பெறுவான்' என்று கூறுவதாக இருந்தது. விதிர்விதிர்த்துப் போனேன். அந்த பக்கத்தில் ஒரு புக்மார்க்கை வைத்தேன்.

தேர்வுகள் முடிந்தன. குழப்பத்தின் காரணமாகவே இவர் தவறாக எழுதியிருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு வெளி ஆய்வாளர் அந்த மாணவனுக்குத் தேர்ச்சி மதிப்பெண் வழங்கியிருந்தார். அப்போது எனக்கு பாபாவின் சத் சரித வாக்கியம் நினைவுக்கு வர சிலிர்த்துப்போனேன். அந்த மாணவன், அந்தத் தேர்வுக்குப் பின் பல உயர் படிப்புகளைப் படித்துப் பாஸாகி இன்று அந்த மாணவர் பெரிய மருத்துவராக இருக்கிறார்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை பாபா கோயிலுக்குச் சென்றேன். அதே மாணவன் அங்கு பிரசாதம் சாப்பிடுவதைப் பார்த்து வியந்தேன். இருவரையும் ஒருசேர பாபா ஆசிர்வதிப்பதாகவும் உணர்ந்தேன். அன்றைய நாளில் 'உனக்கு சந்தோஷம்தானே' என்று பாபா என்னிடம் கேட்டதுபோல் இருந்தது. அந்த நிமிடம் பாபாவின் அருள் திறனை எண்ணி வியந்துக் கலங்கினேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism