Published:Updated:

இன்று சங்கடங்கள் தீர்க்கும் `சனி மகா அஷ்டமி’ -இந்நாளின் சிறப்புகள் என்ன?

சனி மகா அஷ்டமி
சனி மகா அஷ்டமி

சனிக்கிழமை வரும் பிரதோஷம் சனி மகா பிரதோஷம் என்று சொல்லப்படுவதைப்போல சனிக்கிழமைகளில் வரும் தேய்பிறை அஷ்டமி திதி சனி மகா அஷ்டமி என்று அழைக்கப்படுவதன் மூலம் இந்த நாளின் சிறப்பினை அறிந்துகொள்ளலாம்.

அஷ்டமி, நம் துயர்துடைக்கும் திதி. அந்த நாளில் செய்யும் இறைவழிபாடு நமக்கு ஆகச்சிறந்த நன்மைகளைக் கொண்டுவரும். அதிலும் தேய்பிறையில் வரும் அஷ்டமி திதி பைரவர் வழிபாட்டுக்கு உரியது. சிவபெருமானின் அம்சமான காலபைரவர் தேய்பிறை அஷ்டமி தினம் ஒன்றில் அவதரித்துத் தீமைகளை அழித்தார் என்கின்றன புராணங்கள். எனவே, இந்த நாளில் நாம் செய்யும் பைரவர் வழிபாடு நம் வாழ்வில் உள்ள துன்பங்களை அனைத்தையும் நீக்கும் என்பதால் இந்த தினம் பிரதோஷத்துக்கு இணையான ஒன்றாகச் சொல்லப்படுகிறது.

பைரவர் வழிபாடு
பைரவர் வழிபாடு

சனிக்கிழமை வரும் பிரதோஷம் சனி மகா பிரதோஷம் என்று சொல்லப்படுவதைப்போல சனிக்கிழமைகளில் வரும் தேய்பிறை அஷ்டமி திதி சனி மகா அஷ்டமி என்று அழைக்கப்படுவதன் மூலம் இந்த நாளின் சிறப்பை அறிந்துகொள்ளலாம். இந்த நாளின் சிறப்புகள் குறித்து தேவி ஶ்ரீகுகயோகி மதுரைமுத்து ஸ்வாமிகளிடம் கேட்டோம்.

``திதிகளுள் நடுநாயகமாக அமைந்திருப்பது அஷ்டமி திதி. அஷ்டமி திதியில் இறைவழிபாடு செய்வது சகல விதமான கஷ்டங்களையும் போக்கும். நோய்கள், கடன்கள், எதிரிகள் போன்றவற்றில் இருந்து நம்மை விடுவிக்கக்கூடியவை உக்கிரமான தெய்வங்கள். அந்த வகையில் அஷ்டமி திதிக்கு உரிய தெய்வங்களாக பைரவரையும் துர்கையையும் வழிபடுகிறோம்.

சிவாம்சமான கால பைரவர் சனியின் குருவாகப் போற்றி வழிபடப் பெறுகிறார். கால பைரவரை சனிக்கிழமையும் அஷ்டமி திதியும் சேர்ந்து வரும் நாளில் வழிபட்டால் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி போன்ற பாதிப்புகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.

கால பைரவர்
கால பைரவர்

திருவடிசூலம் ஆதிபரமேஸ்வரி மகா ஆரண்ய க்ஷேத்திரத்தில் அன்னை கருமாரி அம்மன் ஆலயத்தில் பிரமாண்டமாகக் காட்சி அருளும் அஷ்டபுஜ பைரவருக்கு அஷ்டமி தினங்களில் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. இன்று சனி மகா அஷ்டமியை முன்னிட்டு உலக நன்மைக்காக அஷ்டபுஜ கால பைரவருக்கு அஷ்ட விதமான திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன. சனி மகா பிரதோஷத்துக்கு இணையாகச் சொல்லப்படுகிற தேய்பிறை சனிக்கிழமை அஷ்டமி திதி சனி மகா அஷ்டமி தினத்தில் பைரவருக்கு விசேஷமான அபிஷேகங்களும் ஆராதனைகளும் செய்து வழிபட்டால் அனைத்து விதமான கஷ்டங்களில் இருந்தும் விடுபடலாம்'' என்று தெரிவித்தார்.

இன்று மாலை, திருவடிசூலத்தில் அருளும் அஷ்டபுஜ கால பைரவரை நாம் வீட்டிலிருந்தே மனதில் நினைத்து வணங்கி சகல நன்மைகளையும் பெறலாம்.

அடுத்த கட்டுரைக்கு