Published:Updated:

கஷ்டங்கள் தீர்க்கும் விநாயகர் வழிபாடு...! - இன்று சங்கடஹர சதுர்த்தி

சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து தன்னை வழிபடும் பக்தர்களுக்கு சந்திரன் எந்தக் கெடுதலும் செய்யக் கூடாது என்று உத்தரவிட்டார். மேலும் சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விரதமிருந்து வழிபட அனைத்து தோஷங்களையும் நீக்குவேன் என்று அருள்பாலித்தார்.

Vinayagar
Vinayagar

விநாயகரை வழிபட உகந்தது சதுர்த்தி தினம். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் சதுர்த்தி திதி வரும். இதில் தேய்பிறையில் வரும் சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி என்று போற்றப்படுகிறது.

Vinayagar
Vinayagar

சந்திர பகவான் தன் அழகில் கர்வம் கொண்டு விநாயகக் கடவுளை அவமதித்தான். இதனால் கோபம் கொண்ட விநாயகப் பெருமான் சந்திரனை சாபமிட்டார். இதனால் பாதிக்கப்பட்ட சந்திரன் விநாயகரே முழுமுதற் கடவுள் என்று புரிந்துகொண்டான்.

உடனே விநாயகப் பெருமானை எண்ணி விரதமிருந்து வழிபட்டான். தனக்குப் பிரியமான சதுர்த்தி திதியில் சந்திரன் விரதமிருந்து வழிபட்டதால் விநாயகர் சந்திரனின் சாபம் தீர்த்தார்.

Vinayagar
Vinayagar

மேலும் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து தன்னை வழிபடும் பக்தர்களுக்கு சந்திரன் எந்தக் கெடுதலும் செய்யக் கூடாது என்று உத்தரவிட்டார். மேலும், சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விரதமிருந்து வழிபட அனைத்து தோஷங்களையும் நீக்குவேன் என்று அருள்பாலித்தார்.

இன்று சங்கடஹர சதுர்த்தி. இன்று காலைமுதல் விரதமிருந்து மாலையில் சந்திர உதய நேரத்தில் விநாயகரை வணங்க வேண்டும். ஆலயங்களுக்குச் சென்று விநாயகரை வழிபடுவது கூடுதல் பலன்களை அளிக்கும்.

Vinayagar
Vinayagar

மேலும், சந்திரோதய நேரத்தில் விநாயகரைப் பிரதட்சிணம் செய்யக் கடன் பிரச்னைகள் தீர்ந்து வளங்கள் சேரும் என்பது ஐதிகம்.