Published:Updated:

‘ஆரம் கொண்ட ஆனைக்கா நாயகன்!’

ஆனைக்கா
பிரீமியம் ஸ்டோரி
ஆனைக்கா

ஆனைக்கா நாயகன்

‘ஆரம் கொண்ட ஆனைக்கா நாயகன்!’

ஆனைக்கா நாயகன்

Published:Updated:
ஆனைக்கா
பிரீமியம் ஸ்டோரி
ஆனைக்கா

தாரமாகிய பொன்னித் தண்டுறை ஆடி விழுந்து
நீரில் நின்றடி போற்றி நின்மலா
கொள்ளென ஆங்கே
ஆரம் கொண்ட எம் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
ஈரம் உள்ளவர் நாளும்
எம்மையும் ஆளுடையாரே!


சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய இந்தப் பதிகம், அற்புதமான ஒரு கதையைச் சொல்கிறது.

அதிகாலைப் பொழுது. இன்னமும் கதிரவக் கீற்றுகள் முழுவதுமாகப் படரவில்லை. இளம் மலர்களையும், தழைகளையும் சுமந்தபடி நுங்கும் நுரையுமாய் பாய்ந்துகொண்டிருந்தாள் காவிரி. அற்புதமான அந்தச் சூழலில்தான், உறையூர்ச் சோழன் மாவளத்தான் மாதடக்கை கமலச் செம்பியன் பெருநற்கிள்ளி, அதிகாலை நீராட்டத்துக்காக வந்து சேர்ந்தான்.

‘‘மாமன்னர் வாழ்க... வாழ்க...’’

கட்டியக்காரனின் குரலுடன் பரிவாரங்களின் வாழ்த்துகோஷங்களும் இணைந்துகொள்ள, அல்லோலகல்லோலப்பட்டது, கங்கையில் புனிதமாய காவிரி ஆற்றங்கரை.

‘‘காவிரியம்மா வணங்குகிறேன்’’ என்றபடியே, ஒரு குழந்தை அன்னையின் மடியை நோக்கி விரைவதுபோல், ஆற்றங்கரை மணலில் கால்கள் புதைய நடந்து சென்ற பெருநற்கிள்ளி, வேகவேகமாக ஆற்றுக்குள் இறங்கினான்.

காவிரித் தாயும் தன் மகிழ்வைத் தெரிவிப்ப தைப் போல், மன்னவன் மீது நீரை வாரித் தெளித்தாள். நீரின் குளுமை தேகத்தை மட்டு மல்ல, மன்னனின் அகத்தையும் சேர்த்தே குளிர்வித்தது. மிக ஆனந்தமாய் நீராடி முடித்துக் கரையேற முயன்றான் மன்னர். அப்போதுதான் ஒன்றைக் கவனித்தான். அவன் கழுத்தில் அணிந்திருந்த முத்தாரம் ஒன்றைக் காணவில்லை.

ஆர்ப்பரித்துப் பாயும் காவிரியின் நீரோட்ட விசையில் முத்துச்சரம் தன் கழுத்திலிருந்து கழன்றுகொண்டதோ என்று எண்ணிய மன்னனுக்குள் வேறொரு சிந்தனையும் எழுந்தது. ‘காவிரித் தாயே ஆரத்தை ஏன் கழற்றினாய்... என் ஆனைக்கா அண்ணலுக்கு அணிவிக்கவா... அப்படியெனில் என் ஈசனே அன்னை சமர்ப்பிக்கும் அந்த ஆரத்தை ஆனந்தமாய் ஏற்றுக்கொள்’ என்று உள்ளூரப் பிரார்த்தித்துக்கொண்டான்.

அவன் பிரார்த்தனை அப்படியே பலித்தது!

திருவானைக்கா திருக்கோயிலின் கருவறை. தலைதாழ்த்தி சிரம்மேல் கரம்குவித்து, கண்களில் நீர் பெருகிட பக்திப் பரவசத் துடன் ஐந்தெழுத்தை ஓதியபடி நின்றிருந்தான் சோழ மன்னன்.

அப்போதுதான் பொலிவுடன் ஏற்றப்பட்டிருந்த தீபச் சுடர்கள், கருவறை முழுவதும் பொன்னொளியைப் பரப்பிக்கொண்டிருக்க, ஆனைக்காவில் உறையும் அருள்மிகு வெண்ணாவலீசருக்கு மிக அற்புதமாய்த் திருமஞ்சனம் நடந்தேறிக் கொண்டிருந்தது.

திடுமென மெல்லியதாய் ஒரு சத்தம் எல்லோரையும் ஈர்த்தது. அபிஷேகக் குடத்திலிருந்து விழுந்த ஏதோவொன்று லிங்கத் திருமேனியைச் சேர்ந்தது.

ஆம்! மன்னனும் மக்களும் பார்த்துக்கொண்டிருக்க... திருமஞ்சனக் குடத்திலிருந்து பளபளப்புடன் ஒளிச்சுடரில் மினுமினுத்தபடி அந்த முத்துச்சரம் ஆனைக்கா அண்ணலின் திருமேனியில் வந்து விழுந்தது.

சோழப் பேரரசன் மாவளத்தான் மாதடக்கை கமலச் செம்பியன் பெருநற்கிள்ளி உள்ளம் சிலிர்த்துப்போனான். ஒருகணம் அவன் மேனி நடுங்கி அடங்கியது. தன்னையுமறியாமல் `என் சிவமே... என் சிவமே...’ என்று அரற்றியதோடு, ஓங்கிக் குரலெடுத்து ஐந்தெழுத்தை முழங்கி வணங்கினான். தொடர்ந்து மற்றவர்களும் நடந்த அற்புதத்தை அறிந்து மெய்சிலிர்ப்புடன் `ஓம் நமசிவாய’ என்று முழங்க, பஞ்சாட்சர நாமத்தால் அதிர்ந்தது ஆலயம்!

இந்த அற்புதச் சம்பவத்தையே தன் பதிகத்தில் வைத்துப் பாடி மகிழ்ந்தார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

திருவானைக்கா தலத்தை அறிவீர்கள்தானே? பஞ்சபூதத் தலங்களில் நீர்த் தலம். அன்னை அகிலாண்டேஸ்வரியே ஈசனைப் பூஜிக்கும் க்ஷேத்திரம். `சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித் திருவானைக் காவுடைய செல்வா என்றன் அத்தா உன் பொற்பாதம் அடையப் பெற்றால் அல்ல கண்டம் கொண்டடியேன் என் செய்கேனே' - என்று திருநாவுக்கரசர் பாடிப் பரவிய தலம் இது.

ஆனைக்கா, ஜம்புகேஸ்வரம், அப்பு க்ஷேத்திரம், ஞானக்ஷேத்திரம், கஜாரண்யம் என்றெல்லாம் சிறப்பிக்கப்படும் இந்தத் தலத்துக்குச் சென்று ஒருமுறை வழிபட்டு வந்தால் போதும், இம்மைக்கும் மறுமைக்கும் தேவையான அத்தனைப் பொக்கிஷங்களும் வரங்களாக வந்து சேரும் என்கின்றன ஞான நூல்கள். நாமும் ஆரம் கொண்ட அந்த ஆதியை வணங்கி வரம் பெறுவோம்!

மெய்த் திருநீறிட்டான் மதில்!

திருவானைக்கா ஆலயம். ஐந்து பிராகாரங்களைக் கொண்ட கோயில். 4-வது பிராகாரத் திருமதில், ‘நீறிட்டான் மதில்’ என்று பெயர் பெற்றது. ஐந்தாவது சுற்று, ‘விபூதிச் சுற்று’ என்று அழைக்கப்படுகிறது.

நீறிட்டான் மதில் சுமார் 35 அடி உயரமும், மொத்தமாகச் சுமார் 8,000 அடி நீளமும், ஏறத்தாழ ஐந்தரையடி அகலமும் கொண்டது. `ஆழித்தேர் மறுகில்பயில் மெய்த்திருநீறிட்டான் மதில் சுற்றிய பொற்றிரு ஆனைக்கா’ என்று திருப்புகழ் இந்த மதில் பற்றிக் கூறும்.

முற்காலத்தில் கோயில் திருப்பணிகள் நடந்து கொண்டிருந்தன. மதில் கட்டப்பட்டது. மதில் கட்டுமானப் பணியை மேற்கொண்டிருந்த சித்தர் ஒருவர், கூலி வேலை செய்தவர்களுக்குக் கூலியாகத் திருநீறு கொடுத்தார். அவரவர் செய்த பணிக்கேற்ப, அந்தத் திருநீறு பொன் கட்டிகளாக மாறின. நீறிட்டதால், இது திருநீறிட்டான் திருமதில். சிவபெருமானே சித்தராக வந்து தமக்கான மதிலைத் தாமே கட்டிக் கொண்டதாகப் புராணங்கள் கூறுகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism