Published:Updated:

3 பிரகாரங்கள், 8 மண்டபங்கள், 900 ஆண்டுப் பழைமை; மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி!

மணிமூர்த்தீஸ்வரம்

ஸ்ரீராம். எஸ் மாணவப் பத்திருக்கையாளர்

3 பிரகாரங்கள், 8 மண்டபங்கள், 900 ஆண்டுப் பழைமை; மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி!

ஸ்ரீராம். எஸ் மாணவப் பத்திருக்கையாளர்

Published:Updated:
மணிமூர்த்தீஸ்வரம்
உலகம் முழுவதும் சைவ வைணவ ஆலயங்கள் எதுவாக இருந்தாலும் அங்கு விநாயகப்பெருமானுக்கு ஒரு சந்நிதி நிச்சயம் இருக்கும். முழுமுதற்கடவுளான விநாயகரை வழிபட்ட பின்னே அந்தந்தக் கோயிலின் மூலவரை வழிபடுவது வழக்கம். அப்படிப்பட்ட விநாயகருக்கு என்று அமைந்திருக்கும் தனித்துவமான ஆலயங்கள் பல நம் நாட்டில் உண்டு.

அங்கு மூலவராக விநாயகரே எழுந்தருளியிருப்பார். அப்படிப்பட்ட ஆலயங்களில் பழைமையும் பெருமையும் வாய்ந்த ஆலயம் மணிமூர்த்தீஸ்வரம். திருநெல்வேலியில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தின் சிறப்புகள் பல. வாருங்கள் அவற்றை அறிந்துகொள்வோம்.

இந்த ஆலயம் 900 வருடங்கள் பழைமை வாய்ந்தது. ஐந்துநிலை ராஜகோபுரத்துடன் திகழும் இந்த ஆலயத்தில் நீளம் சுமார் 80 மீட்டர். அகலம் 40 மீட்டர். மூன்று பிராகாரங்கள்... எட்டு மண்டபங்கள்... என பிரமாண்டமாகப் பரந்துவிரிந்து காணப்படுகிறது இந்த ஆலயம்.

உச்சிஷ்ட கணபதி
உச்சிஷ்ட கணபதி

இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் விநாயகப்பெருமானுக்கு உச்சிஷ்ட கணபதி என்பது திருநாமம். விநாயகருக்குரிய முப்பத்திரண்டு வடிவங்களில் எட்டாவது திருவடிவம் உச்சிஷ்ட கணபதி. தன் தேவியான வல்லபையைத் தன் இடது தொடையில் அமரவைத்தபடிக் காட்சி கொடுக்கும் இறைவனின் திருவடிவம் காண்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும்.

முன்பெல்லாம் நெல்லை டவுனில் அமைந்திருக்கும் நெல்லையப்பர் கோயிலில் வழிபாடு நடக்கும்போது அங்குள்ள பிரமாண்ட மணி ஒலிக்கும். அதைக் கேட்டு இங்கும் மணியோசை எழுப்பி வழிபடும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. இதனால் மூர்த்தீஸ்வரம் என்று அழைக்கப்பட்டு வந்த இந்த ஊர், பின்னர் ‘மணிமூர்த்தீஸ்வரம்’ என்று வழங்கலாயிற்று.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த ஆலயத்தில் ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் 1, 2 மற்றும் 3-ம் தேதிகளில் காலையில் சூரியபகவான் தன் ஒளிக்கிரணங்களால் விநாயகரைத் தழுவி வழிபாடு செய்யும் அற்புதத் திருக்கோல தரிசனம் நடைபெறும். அந்த நேரத்தில் தங்கம் போல் ஜொலிக்கும் கணபதியை தரிசித்து வழிபட சகல துன்பங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

உச்சிஷ்ட கணபதி
உச்சிஷ்ட கணபதி

குழந்தை வரம் வேண்டுபவர்கள் இங்கு வந்து தேவியோடு விநாயகப்பெருமான் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தை தரிசனம் செய்தால் புத்திர சந்தானம் உண்டாகும் என்கிறார்கள்.

இங்கு, லிங்க ரூபமாக சிவபெருமான், காந்திமதி அம்மன், 16 சோடஷ கணபதிகள், கன்னி மூல கணபதி, வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியன்,சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆகியோருக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன.

இங்கு கொடி மரத்திற்கு வடப் பக்கம் சொர்ண ஆகர்ஷண பைரவர் சந்நிதியும் அதற்கு முன்பாக பைரவ தீர்த்தம் உள்ள கிணறும் இருப்பது சிறப்பம்சமாகும். எனவே இங்கு பைரவரை வழிபட மன பயம் நீங்கி செல்வ வளம் சேரும் என்கிறார்கள் பக்தர்கள்.

இந்த ஆலயத்திற்கு ரிஷி தீர்த்தம், சூத்ரபாத தீர்த்தம் என்ற இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. வன்னிமரம், பனைமரம் ஆகிய இரண்டும் தல விருட்சங்களாக உள்ளன.

மணிமூர்த்தீஸ்வரம்உச்சிஷ்ட கணபதி ஆலய கோபுரம்
மணிமூர்த்தீஸ்வரம்உச்சிஷ்ட கணபதி ஆலய கோபுரம்

பிரார்த்தனை சிறப்பு : விநாயகர் தன் தேவியுடன் இருந்து அருள்பாலிப்பதால் இங்கு வந்து வேண்டிக்கொண்டால் கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். திருமணத்தடைகள் நீங்கும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள் என்பது நம்பிக்கை.

இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியையொட்டி பத்துநாள்கள் உற்சவம் நடைபெறுகிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி உற்சவம் கடந்த 22 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை விநாயகர் சதுர்த்திப் பெருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த நாளில் விநாயகரை வந்து வணங்கி வழிபட்டல் சகல செல்வங்களும் சேரும் என்பது நம்பிக்கை.

எப்படிச் செல்வது?! திருநெல்வேலி சந்திப்பில் இருந்து சுமார் 2 கி. மீ.தொலைவில் உள்ளது.