Vaikasi Visagam முருகனின் ஆறெழுத்து மந்திர மகிமை | வைகாசி விசாக சிறப்புகள் | Saraswathi Ramanathan
Vaikasi Visakam முருகனின் ஆறெழுத்து மந்திர மகிமை | வைகாசி விசாக சிறப்புகள் | Saraswathi Ramanathan
உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்' என்று தமிழ்ச் சமூகம் உரிமையோடு போற்றிக் கொண்டாடி வழிபடுகிறது. கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கி, பக்தர்களின் குறைகளைப் போக்க, கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து அருள்புரிபவர் முருகன். சிவபெருமானின் நெற்றிக்கண் மூலம் அவதரித்து கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்த, ஆறுமுகக் கடவுளான முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம், வைகாசி விசாகம். அதன் காரணமாகவே அவனுக்கு விசாகன் என்ற திருப்பெயரும் உண்டு. அப்படி முருகன் அவதரித்த வைகாசி விசாகத்தின் சிறப்புகளை விளக்குகிறார் முனைவர் சரஸ்வதி ராமநாதன்.