Published:Updated:

மனப் பிணிகளைப் போக்கும் வல்லநாடு திருமூலநாதர் - இல்லம் தேடிவரும் இறை தரிசனம்! #worshipathome

சிவபெருமான்
சிவபெருமான்

ஈசனை வணங்கிவிட்டு நவகிரகங்களை வலம் வந்தால் நவகிரக தோஷங்கள் விலகும் என்பது ஐதிகம்.

கொரோனா, தற்காலிகமாக நம் நாட்டையே முடக்கியிருக்கிறது. மனிதர்களை வீடுகளுக்குள் இருக்கச்செய்துள்ளது. அரசு, மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் தன்னலம் மறந்து நமக்காகச் சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அதே நேரம், அனுதினமும் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு வந்த பக்தர்கள், அருகில் இருக்கும் ஆலயங்களுக்குக்கூட செல்லமுடியாமல் மனவருத்தத்தோடு இருக்கிறார்கள்.

தூத்துக்குடி - திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் உள்ள வல்லநாட்டில் சுயம்புவாக எழுந்தருளி அருள்புரிகிறார், திருமூலநாதர்....

Posted by Sakthi Vikatan on Tuesday, April 21, 2020

அவர்களின் மனக் குறையைத் தீர்க்க, சக்தி விகடன், `இல்லம் தேடி வரும் இறை தரிசனம்’ என்னும் பகுதியைத் தொடங்கியிருக்கிறது. இதில், புகழ்பெற்ற சில கோயில்களில் அன்றாடம் நடைபெறும் நித்திய பூஜைகளைப் பதிவுசெய்து உங்களுக்காக வழங்க இருக்கிறோம். இல்லத்தில் இருந்தபடியே இறைதரிசனம் கண்டு மகிழுங்கள். தினம் ஒரு திருத்தலம் என்ற முறையில் இன்று நாம் தரிசனம் செய்ய இருப்பது,

வல்லநாட்டு திருமூலநாதர் திருக்கோயில்.

தூத்துக்குடி - திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் உள்ள வல்லநாட்டில் சுயம்புவாக எழுந்தருளி அருள்புரிகிறார், திருமூலநாதர். அம்பிகை ஆவுடையம்பாள் எனும் பெயரில் அருளாட்சி புரிகிறாள்

கோயில் உள்ளே வெளிப்பிராகாரத்தில் வலதுபுறத்தில் தாமரை வடிவிலான நவகிரகங்களும், அதன் எதிரே வசந்த மண்டபமும் அமைந்துள்ளன. ஈசனை வணங்கிவிட்டு நவகிரகங்களை வலம் வந்தால் நவகிரக தோஷங்கள் விலகும் என்பது ஐதிகம்.

worshipathome
worshipathome

கோயில் கருவறையில் திருமூலநாதர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். உள்பிராகாரத்தில் தென்பகுதியில் தட்சிணாமூர்த்தியும், கன்னி மூலையில் கன்னி விநாயகரும், வள்ளி தெய்வானைகளுடன் சுப்பிரமணியர், சண்டீகேஸ்வரர், பைரவர், அதன்பின்னர் நடராஜரும் அமர்ந்து அருள் பாலிக்கிறார்கள்.

தென்பகுதியில் ஆவுடையம்பாள் தனிச்சந்நிதியில் வீற்றிருக்கிறார். அன்னை ஆவுடையம்பாளுக்கு ஆடிப்பூரத்தன்று வளைகாப்பு உற்சவமும், சுவாமிக்கு ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் மற்றும் திருக்கல்யாண உற்சவமும் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன. இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டால் திருமண வரம் கிட்டும் என்பது நம்பிக்கை.

திருமூலநாதர்
திருமூலநாதர்

இந்தக் கோயிலில் அருள்பாலிக்கும் திருமூலநாதரை வழிபட்டால் மனப் பிணி நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. விசேஷமாக, இதயக் கோளாறு உள்ளவர்களும் இங்குவந்து இறைவனை வேண்டிச் சென்றால் விரைவில் நோய் நீங்கி நல்வாழ்வைப் பெறுவார்கள் என்கின்றனர் பக்தர்கள்.

அடுத்த கட்டுரைக்கு