Published:Updated:

வருத்தினி ஏகாதசியில் என்ன விசேஷம்? - மகிமைகளும் கடைப்பிடிக்கும் எளிய வழிமுறைகளும்!

ஏகாதசி விரதம்...
ஏகாதசி விரதம்...

வருத்தினி ஏகாதசி விரதம் இருப்பது `குருக்ஷேத்திரப் புண்ணிய பூமியில் சூரிய கிரகணத்தின்போது சொர்ணதானம் செய்வதற்கு இணையானது’ என்கிறார்.

மனித முயற்சிகள் எல்லாம் பொய்த்துப்போகிறபோது இறைவனின் திருவடிகளில் சரணடைவதுவே நமக்கிருக்கும் ஒரே வழி. விதி வழிதான் வாழ்க்கை என்றால் தெய்வம் எதற்கு என்று கேட்பவர்கள் உண்டு. நல்வினை தீவினைகளுக்கு ஏற்பவே இந்தப் பிறவி நமக்கு வாய்த்திருக்கிறது. இதில் நிகழும் அனைத்தும் நம் வினைப்பயன்களே. அப்படியானால் துன்பப்படுகிறவர்களுக்கு வேறு கதியே இல்லையா என்று கேட்டால் அதற்காகத்தான் நம் முன்னோர்கள் விசேஷ தினங்களையும் விரத வழிபாடுகளையும் கண்டறிந்து வைத்திருக்கிறார்கள். எப்படி விதிப்படி வாழ்க்கை விதிக்கப்பட்டுள்ளதோ அதேபோல மதிப்படி ஒருவர் செய்யும் பூஜா பலன்களும் வேண்டுதல்களும் அவர்கள் வாழ்க்கையை மாற்றும் என்பது மனித குலம் இதுவரை கண்டறிந்து வைத்திருக்கும் உண்மை. விரத நாள்களை முறையாகக் கடைப்பிடிக்க நம் இன்னல்கள் தீர்ந்து நன்மைகள் பெருகும். அப்படி நமக்கு நன்மைகள் அருளும் விரதம் ஏகாதசி விரதம்.

பெருமாள்
பெருமாள்

சுதர்சன அஷ்டக மகிமைகள் - அனந்த பத்மநாப சுவாமிகள் | #SudarshanaAshtakam

Posted by Sakthi Vikatan on Friday, April 17, 2020

பொதுவாக சனிக்கிழமைகள் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தவை. அதிலும் ஏகாதசியுடன் கூடிவரும் சனிக்கிழமை என்றால் மிகவும் விசேஷம். அமாவாசை அல்லது பௌர்ணமியிலிருந்து ஏகாதசி 11 வது நாள். இந்த நாளில் நம் மனதையும் உடலையும் இலகுவாக்க நாம் விரதம் மேற்கொள்ள வேண்டிய நாள். பத்துநாள்கள் உலக விஷயமாகத் தொடர்ந்து இயங்கும் உடலையும் மனதையும் ஓய்வுபடுத்திப் பராமரிக்க வேண்டிய நாள். உடல் உணவைத் தவிர்ப்பதன் மூலமும் மனம் உலகமயமான எண்ணங்களைத் தவிர்த்து இறைவனை நினைப்பதன் மூலமும் புத்துணர்ச்சி கொள்ளும். இப்படி பௌதீகமான நன்மைகள் இருந்தாலும் ஆன்மிக ரீதியிலான பலன்களும் அநேகம். விரதமிருந்து இறைவனை வழிபடுவதன் மூலம் அருள் மட்டுமல்ல இந்த உலகில் வாழத்தேவையான பொருளும் கிட்டும். அப்படி ஒரு விரதமே வருத்தினி ஏகாதசி விரதம்.

வருத்தினி ஏகாதசி விரதத்தில் என்ன விசேஷம்?

வருத்தினி ஏகாதசி விரதத்தின் மகிமைகளை பகவான் கிருஷ்ணனே பார்த்தனுக்குச் சொல்வதுபோல ஏகாதசி புராணம் விவரிக்கிறது. அதில் கிருஷ்ணன், 

``விரதங்களில் வருத்தினி ஏகாதசி விரதம் தனித்துவம் வாய்ந்தது. பொதுவாக ஏகாதசி விரதம் இருந்தால் பாவங்கள் தீரும் என்பது ஐதிகம். வருத்தினி ஏகாதசியோ பாவங்களைத் தீர்ப்பதோடு சகல செல்வ வளங்களையும் மேற்கொள்பவர்களுக்கு அருளும். இஷ்வாகு குலத்தில் பிறந்த தந்துமாரா என்னும் மன்னன் சிவபெருமானால் சபிக்கப் பெற்றான். அவன் பின்னாளில் தன் தவற்றை உணர்ந்து வருத்தினி ஏகாதசி விரதம் இருந்து வழிபட அவன் சாபம் நீங்கி நன்னிலை அடைந்தான்.

பெருமாள்
பெருமாள்
இருக்கன்குடி, புன்னைநல்லூர், சமயபுரம்... வேண்டி வழிபட உகந்த மங்கலம் அருளும் மகமாயித் தலங்கள்!

இந்த விரதம் துன்பப்படும் இல்லத்தரசிகள் மேற்கொண்டு பயன்பெற வேண்டிய விரதம். வீட்டில் தொடர்ந்து தொல்லைகளை அனுபவித்துவரும் பெண்கள் இந்த வருத்தினி ஏகாதசி அன்று விரதமிருந்தாலோ, பெருமாளை அன்றைய தினம் மனதால் நினைத்து வழிபட்டாலோ விரைவில் துன்பங்கள் தீர்ந்து நன்மைகள் சேரும்” என்கிறார் கிருஷ்ணபரமாத்மா.

தானங்களின் பலன்களும் வருத்தினி ஏகாதசி விரதமும்

இந்த விரதத்தின் பலன்களை எடுத்துச் சொல்லும்போது தானங்களின் பலன்களையும் எடுத்துரைக்கிறார். வருத்தினி ஏகாதசி விரதம் இருப்பது `குருக்ஷேத்திரப் புண்ணிய பூமியில் சூரிய கிரகணத்தின்போது சொர்ண தானம் செய்வதற்கு இணையானது’ என்கிறார். 

இதில் இரண்டு விஷயங்கள் சூட்சுமமாக உள்ளதாகப் பெரியவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஒன்று குருக்ஷேத்திர புண்ணிய பூமி என்பது நம் போராட்ட வாழ்வைக் குறிப்பது. அதில் சூரிய கிரகணம் என்பது வாழ்வில் துயரங்கள் சூழும் நேரம் என்று கொள்ளலாம். அப்போது நாம் அளிக்கும் சொர்ண தானமே இந்த விரதமும் வழிபாடும். துன்பங்கள் சூழும்போது இறைவனை நினைப்பது என்பது மிகவும் பலன்தரும்.

பெருமாள்
பெருமாள்
`என் கடன் பணி செய்து கிடப்பதே’ - உழவாரப் பணி செய்து, இறைவனின் உள்ளம் கவர்ந்த நாவுக்கரசர் குருபூஜை!

தானங்களில் குதிரை தானத்தைவிட கஜ தானம் உயர்ந்தது. கஜ தானத்தைவிட பூமி தானம் உயர்ந்தது. பூமிதானத்தைவிட எள் தானம் உயர்ந்தது. எள் தானத்தைவிட சொர்ண தானம் உயர்ந்தது என்கிறார்கள். சொர்ண தானத்தையும்விட உயர்ந்த தானம் அன்னதானம். பித்ருக்கள், தேவர்கள், மனிதர்கள் மூவருக்கும் திருப்தி அளிக்கும் ஒரே தானம் அன்னதானம். அப்படிப்பட்ட அன்னதானத்தை மேற்கொள்வதற்கு இணையான பலனை வருத்தினி ஏகாதசி நமக்கு அருளும்.

சங்கடங்கள் தீர்க்கும் சுதர்சன அஷ்டகம்

பெருமாளின் ஆயுதங்களில் பிரதானமானது சுதர்சனச் சக்கரம். அதை வைணவர்கள் சக்கரத்தாழ்வார் என்று போற்றுகிறார்கள். பக்தர்களுக்குத் துயர் ஏற்படுகிற காலத்தில் ஓடிவந்து நம்மைக் காத்து அருள்பவர் அவரே. 13-ம் நூற்றாண்டில் காஞ்சிபுரம் அருகே உள்ள கிராமமான திருப்புட்குழி கிராமத்தில் விஷ ஜுரம் வந்தது. நிறைய மக்கள் அதனால் மடிந்தார்கள். அப்போது வாழ்ந்த மகான் வேதாந்த தேசிகர் அந்த ஜுரம் நீங்குமாறு சுதர்சனாழ்வாரை வேண்டிக்கொண்டு ஸ்தோத்திரம் ஒன்றைச் செய்தார். அதைப் பாடி வேண்டியதும் அந்த ஜுரம் விலகி ஓடியது என்று கூறுவார்கள். அந்த மகிமை மிகு அஷ்டகத்தை ஏகாதசி நாளில் பாடினாலோ, கேட்டாலோ சகல நன்மைகளும் கிடைக்கும்.

தற்போது நம்மை அச்சுறுத்தும் இந்த நிலையில் இருந்து மீண்டு எழுந்துவர நமக்குத் தேவை இறைவனின் அருளும் மன வலிமையும். அதை நமக்கு அருள சுதர்சன அஷ்டகம் பாடி நாம் சக்கரத்தாழ்வாரை வேண்டிக்கொள்வோம்.

விரத முறைகள்

ஏகாதசி அன்று உபவாசம் இருப்பது உத்தமம். இயலாதவர்கள் முழு அரிசிச் சோற்றைத் தவிர்ப்பது நல்லது. மேலும், இந்த நாள் முழுவதும் விஷ்ணு சகஸ்ரநாமம் அல்லது ஆழ்வார் பாசுரங்கள் பாராயணம் செய்யலாம். இயலாதவர்கள் பெருமாளின் நாமம் ஒன்றினை உச்சரித்துக்கொண்டேயிருக்கலாம். ‘ஜய ஜய ஸ்ரீ சுதர்சனா... ஜய ஜய ஸ்ரீ சுதர்சனா’ என்று 108 முறை சொல்லித் துதிக்க மன வலிமையும் ஆரோக்கியமும் மேம்படும் என்பது ஆன்றோர்கள் வாக்கு.

துவாதசி பாரனை நேரம்: 19.4.2020 காலை: 6.30 முதல் 7.30-க்குள்.

அடுத்த கட்டுரைக்கு