Published:Updated:

கைமேல் பலன்தரும் கந்த வேல்மாறல் பாராயணம்... நீங்களும் பங்குபெறலாம்!

முருகன்
முருகன்

உடல் பிணிக்கு மட்டுமல்ல, வினைப் பிணிகளுக்கும் உற்ற மருந்து வேல்மாறல் மந்திரம். ஊரடங்கு அமலில் இருக்கும் இந்தக் காலத்தில் உங்களின் மனக்குறையைத் தீர்க்கும் வண்ணம் சக்தி விகடன் உங்கள் வீடு தேடி இந்த வேல்மாறல் பூஜையை நடத்தவுள்ளது.

வாசகர்களின் விருப்பத்துக்கேற்ப தமிழகமெங்கும் பல இடங்களில் வேல்மாறல் பாராயண பூஜையை நடத்தியிருக்கிறது சக்தி விகடன். நேரிடையாக இதில் கலந்துகொண்ட பல வாசகர்கள், பிறகு தொடர்பு பல அற்புத அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டதுண்டு. திருப்பூரில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற வேல்மாறல் பூஜையில் கலந்துகொண்ட ஒரு வாசகி கண்ணீரோடு ஓர் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

அருணகிரி பெருமாளே!
அருணகிரி பெருமாளே!

``என் மகன் பணிபுரியும் இடத்தில் விபத்துக்குள்ளாகி, இனி பிழைப்பது கடினம் என்ற நிலையில் இருந்தான். இறைவன் அருளால் உயிர் பிழைத்தும், நடமாட இயலாமல் படுக்கையில் இருந்தபோதுதான் இந்த வேல்மாறல் பாராயணம் பற்றிக் கேள்விப்பட்டு அதில் கலந்துகொண்டேன். அங்கு வேல்மாறல் பாடலைப் பாராயணம் செய்யும் முறையையும் ஒருவாறு கற்றுக் கொண்டேன். முழு நம்பிக்கையோடு எனக்குத் தெரிந்த வகையில் வேல்மாறல் பாடலை தினமும் ஒருமுறை பாடிவந்தேன். பாடப்பட அதை கேட்டுவந்த என் மகன், விரைவாக குணமாகினான். இப்போது வீட்டுக்குள்ளேயே நடமாடுகிறான். எல்லாம் அந்த மகா மந்திரத்தின் மகிமை. நன்றி ஐயா... நன்றி!" என்று அந்த தாய் ஆனந்தக் கண்ணீரோடு சொல்லிய சத்தம் இன்றும் எங்களுக்கு நினைவில் இருக்கிறது.

உடல் பிணிக்கு மட்டுமல்ல, வினைப் பிணிகளுக்கும் உற்ற மருந்து வேல்மாறல் மந்திரம். ஊரடங்கு அமலில் இருக்கும் இந்தக் காலத்தில் உங்களின் மனக்குறையைத் தீர்க்கும் வண்ணம் சக்தி விகடன் உங்கள் வீடு தேடி இந்த வேல்மாறல் பூஜையை நடத்த உள்ளது. வந்த வினை நீக்கும் வேலனின் மந்திரத்தை உச்சரித்துப் பலன் பெறுவோம்.

முருக வழிபாட்டுக்கும் முந்தையது வேல் வழிபாடு என்பர் ஆன்றோர்கள். வேல்மாறல் மந்திரம் ஜீவன்களுக்கு ஒளஷதம் போன்றது. ஓர் ஒளஷதம் நோய்களைத் தீர்ப்பதுபோல இந்த மந்திரம் புற, அக நோய்களை நீக்கும். பிறவிப் பிணியை அழிக்கும். ஞானவேல் என்பதால் இதை பாராயணம் செய்தால் ஞானத்தையும் பேரின்ப வாழ்வையும் கொடுக்கும். வீரவேல் என்பதால் காரிய ஸித்தியை வழங்கும்.

முருகன்
முருகன்

முருகன் வேறு அல்ல, அவன் திருக்கை வேல் வேறு அல்ல. வினைகளை வேரறுக்க வல்ல வேலாயுதத்தைப் போற்றி வணங்கினால் நம் விருப்பங்கள் நிறைவேறும். அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்துள்ள `வேல் வகுப்பு’ பாடல் எல்லாப் பிணிகளுக்கும் உற்ற மருந்தாகித் தீர்த்தருளவல்லது என்று எண்ணிய வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் வேலுக்கு உகந்த வழிபாடாக வேல்மாறல் பாராயணத்தை தொகுத்துள்ளார்.

வேல் மாறல் பாடல்களை பக்தியுடன், சிரத்தையுடன், மன ஒருமைப்பாட்டுடன் ஒரு மண்டல காலம் அதாவது 48 நாள்கள் விடாமல் காலையோ அல்லது மாலையோ ஒரு முறையாவது பாராயணம் செய்வது நல்லது. ஆண், பெண் மற்றும் சாதி - மத பேதம் இல்லாமல் எல்லோரும் பாராயணம் செய்யலாம். இதனைப் பாராயணம் செய்வதால் உங்களின் எல்லா வேண்டுதலும் பலிதமாகும் என்பதில் ஐயமில்லை.

அன்பான வாசகர்களே ... பிணி பயமும் எதிர்கால அச்சமும் மிகுந்த இந்த வேளையில் வேலை வழிபடுவது அவசியம் என்று கருதி, நம் வாசகர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் அனைவரும் அனைத்து செல்வங்களும், சகல சௌபாக்கியங்களும் பெற்று, வாழ்வில் சிறந்தோங்கவேண்டும் என்கிற நோக்கத்தில், சக்தி விகடன் பெருமைமிக்க `வேல் மாறல்' பாராயண வழிபாட்டை நடத்தவுள்ளது. திருப்புகழ் முதலான ஞானநூல்கள் குறித்த ஆய்வுகள் செய்தவரும், சிறந்த கட்டுரையாளரும் சொற்பொழிவாளருமான திருப்புகழ் அமுதன் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன், பாடகி பவ்யா குழுவினர் இணைந்து நடத்தும் இந்த வழிபாட்டு வைபோகத்தில் அனைவரும் கலந்துகொண்டு அருள் பெற வேண்டுகிறோம்.

வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமண்யர்
வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமண்யர்

வேல் மாறல் பராயணத்துக்கு முன்னதாக, சென்னை, கொளத்தூர்- திருப்பதி நகரில் அமைந்துள்ள அருள்மிகு திருமால்மருகன் திருக்கோயிலில், வேல் அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெறும். கந்தன் திருவேலை நினைந்தால் கண்ட பிணி ஓடிவிடும் என்பது அருள் வாக்கல்லவா... வாருங்கள் சங்கமிப்போம்... வேல் பாராயண பூஜையிலும் ஆராதனை அபிஷேகங்களிலும் நீங்கள் சங்கல்பம் செய்துகொள்ள இங்கே முன்பதிவு செய்துகொள்ளவும்.

முன்பதிவுக்கு இங்கு க்ளிக் செய்யவும்...

அடுத்த கட்டுரைக்கு